தமிழ் சினிமா

.
கமலின் விஸ்வரூபம் புகைப்படம் வெளியானது

viswaroopam_1சென்னை: உலக நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் கமல் ஹாசனின் மெகா பட்ஜெட் படமான விஸ்வரூபத்தின் முதல் புகைப்படம் மற்றும் 30 விநாடிகள் கொண்ட முன்னோட்டக் காட்சி வெளியானது.
கமல் ஹாசன் மிகவும் ரகசியம் காத்து வந்ததால் இந்தப் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஏக எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் கமல் இந்தப் படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டார். விஸ்வரூபம் என்ற தலைப்பு உருது மொழி எழுத்துருவைப் போல டிசைன் செய்யப்பட்டிருந்தது. பின்னணியில் அமெரிக்கா. இந்தப் படம் ஆப்கன் தீவிரவாதம் தொடர்பானது என்று கூறப்பட்டு வந்த நிலையில், அதன் எழுத்துரு உருது போல அமைந்திருப்பது பல யூகங்களுக்கு வழி வகுக்கிறது. இந்தப் படத்தின் அதிகாரபூர்வ 30 செக்கன்ட் முன்னோட்ட காட்சியும் இந்த ஒரு படம்தான் இடம்பெற்றுள்ளது.
 ஒரு வெள்ளைப்புறா பறந்து செல்கிறது. அடுத்து அமெரிக்காவின் நியூயோர்க் நகரம்... அதன் மத்தியில் கமல் நிற்கிறார்... “முழு நிறைவு பெறும் தறுவாயில்... எழுத்தும் ஆக்கமும் கமல் ஹாசன்’ என்று முடிகிறது.இந்த முன்னோட்டக் காட்சியை கமல் உருவாக்கியுள்ள ஸ்டைல் அந்தப் படத்தின் தரத்தை காட்டுவதாக உள்ளது. எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனமும் பிவிபி சினிமாவும் இணைந்து தயாரிக்கின்றன. சங்கர் எசான் லாய் இசையமைக்கிறார். சனுஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகிறது விஸ்வரூபம்.nantri thinakkural

No comments: