உலகச் செய்திகள்

விரைவில் திறப்பு விழா காணும் உலக வர்த்தக மையம்


லெபனான் எல்லையில் சுவர் எழுப்பும் இஸ்ரேல்


சிரியாவில் தற்கொலைப் படை தாக்குதல்

ஒசாமா நினைவு தினத்தில் ஒபாமாவை இலக்குவைத்து ஆப்கானில் தொடர் குண்டுத்தாக்குதல்கள்

விரைவில் திறப்பு விழா காணும் உலக வர்த்தக மையம்

Tuesday, 01 May 2012

world_trade_centre_001அமெரிக்காவில் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட உலக வர்த்தக மையம் இரட்டைக் கோபுரங்கள் தற்போது கட்டப்பட்டு வருகின்றது.

கடந்த 2001ம் ஆண்டு செப்ரெம்பர் 9ம் திகதி அமெரிக்கா நியூயோர்க் நகரில் உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரங்கள் மீது அல்கொய்தா தீவிரவாதிகள் விமானங்களை மோத விட்டு தகர்த்தனர். இந்த சம்பவத்தில் 2500 பேர் உயிரிழந்தனர்.

இன்னும் அமெரிக்க மக்களின் மனதில் நீங்காத துயரமாக இச்சம்பவம் இருந்தாலும் அதே இடத்தில் புதிய இரட்டைக் கோபுரங்களை கட்ட அமெரிக்கா தீர்மானித்தது.



இதன்படி இரட்டை கோபுரங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதில் ஒரு கட்டிடம் 104 அடுக்கு மாடிகளை கொண்டு 1250 அடி(381 மீற்றர்) உயரத்திலும் மற்றொரு கட்டிடம் 1776 அடி(541.3 மீற்றர்) உயரத்திலும் கட்டப்படுகிறது.

இந்நிலையில் 1250 அடி கட்டிடம் முடியும் தருவாயில் இருப்பதுடன் விரைவில் திறப்பு விழா காணவும் இருக்கிறது. மற்றொரு கட்டிடம் அடுத்த வருடம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
world_trade_centre_002

































nantri thinakkural

லெபனான் எல்லையில் சுவர் எழுப்பும் இஸ்ரேல்
30/4/2012
இஸ்ரேலிய இராணுவமானது லெபனானுடன் தனது எல்லைப்பகுதியில் தடுப்புச் சுவரொன்றினை நிர்மாணிக்கும் பணியினை ஆரம்பித்துள்ளது.

இந்நிர்மாணப் பணியினை லெபானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்காலப் படையுடன் ( UNIFIL - United Nations Interim Force in Lebanon) இணைந்து முன்னெடுத்து வருவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவிக்கின்றது.

இருநாடுகளுக்குமிடையில் முறுகல் நிலை தோன்றுவதைத் தவிர்ப்பதே இச்சுவர் நிர்மாணிக்கப்படுவதற்கான பிரதான காரணமென இஸ்ரேலியத் தரப்புத் தெரிவிக்கின்றது.

இச்சுவரானது சுமார் 2 கிலோ மீற்றர் நீளமாகவும் 10 மீற்றர் உயரம் கொண்டதாகவும் இருக்குமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேலிய எல்லையோர நகரான மீடுலாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குடியிருப்புப் பகுதிகளின் மீது லெபனானில் இருந்து மேற்கொள்ளப்படும் ஸ்னைப்பர் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தல் இச்சுவர் நிர்மாணிக்கப்படுவதற்கான காரணங்களில் முக்கியமானதொன்றென இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையிலான உறவு சிறப்பாக இருந்தமை அரிது.

கடந்த 2006 ஆம் ஆண்டு இவ்விரு நாடுகளுக்குமிடையில் இடம்பெற்ற யுத்தத்தில் 1200 லெபனானியர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ___
கவின் / வீரகேசரி இணையம்


சிரியாவில் தற்கொலைப் படை தாக்குதல்


1/5/2012

சிரியாவில் இராணுவப் புலனாய்வு அலுவலகங்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 20 பேர் பலியாயினர்.

சிரியாவில் கடந்த 40 ஆண்டுகளாக நடக்கும் பஷார் அல் ஆசாத்தின் ஆட்சியை எதிர்த்து, கடந்த வருடம் முதல் அங்கு போராட்டம் நடந்து வருகிறது.

போராட்டக்காரர்களை ஒடுக்க, இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பல ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். சிரியாவில் அமைதியை ஏற்படுத்த, சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் தாக்குதல்கள் நிற்கவில்லை.

இதற்கிடையே நேற்று, இத்லிப் நகரில் உள்ள ராணுவ மற்றும் விமானப் படை புலனாய்வு அலுவலகங்கள் மீது தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் கட்டடங்கள் பெரும் சேதமடைந்துள்ளன.

பலியான 20 பேரில் பெரும்பாலானோர் இராணுவ வீரர்கள்.டமாஸ்கஸ் நகரிலும் கார் குண்டு வெடித்தது. இதில் எத்தனை பேர் பலியாயினர் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
வீரகேசரி இணையம்


ஒசாமா நினைவு தினத்தில் ஒபாமாவை இலக்குவைத்து ஆப்கானில் தொடர் குண்டுத்தாக்குதல்கள்


 2/5/2012

அல்குவைதா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடனின் முதலாம் ஆண்டு நி‌னைவு தினமான இன்று ஆப்கானில் தொடர் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது ஒருநாள் பயணத்தை முடித்து விட்டு திரும்பிய சிறிது நேரத்தில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனால் இத்தாக்குதல்கள் ஒபாமாவை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றன.

இச்சம்பவத்திற்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

அல்குவைதா இயக்கத்தின் முன்னாள் தலைவர் பின்லாடனின் நினைவு தினத்தை முன்னிட்டு தீவரவாதிகள் திடீர் தாக்குதலி்ல் ஈடுபடக்கூடும் என அமெரிக்க உளவுத்துறை ஆப்கான் பொலிஸாருக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஆப்கானி்ன் கிழக்கு மாகாணத் தலைநகரில் அமெரிக்கத் தூதரகம் அமைந்துள்ள கிரீன்வில்லேஜ் வளாகம் உட்பட வேறு சில பகுதிகளிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகத்தெரிவிக்கப்படுகின்றது.

இத் தாக்குதலில் குறைந்தபட்சம் 6 பேர் வரை பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வீரகேசரி இணையம்



No comments: