தமிழ் சினிமா

.
போட்டா போட்டி

கிரிக்கட் உலகின் நட்சத்திர நாயகன் சச்சினுக்கு தனது முதல் படமான ”போட்டா போட்டி”யை அற்பணித்துள்ளார் இயக்குனர் யுவராஜ்.

கிராமத்து பாவாடை தாவணி நாயகியான ஹரிணிக்காக முறைப்பையன்களான கொலை வாணன், கொடை வாணன் இருவரும் மோதிக்கொள்கிறார்கள்.

கிரிக்கட் வீரர் சடகோபன் ரமேஷை கடத்தி வந்து, தன் கிரிக்கட் அணிக்கு பயிற்சியாளராக போட்டு விடுகிறார் கொடை வாணன். கிராமத்து ஆட்களுக்கு கிரிக்கட் சொல்லித்தர படாத பாடுபடும் ரமேஷ், நாயகி ஹரிணி மனதுக்குள் நிலைத்து நின்று மட்டையை சுழற்றுகிறார்.

இரு அணியினரும் பயிற்சி எடுத்து, போட்டியில் மோத தயாராகிறார்கள். கிரிக்கட் மேட்ச் பிளஸ் கொமெடி என ஜாலியாக படத்தை நகர்த்தியுள்ளார் இயக்குனர் யுவராஜ். பசுமையான கிராமத்தில் வெள்ளந்தியாக முறைப்பொண்ணு ஹரிணி மேல் ஆசை வைக்கிறார் கொடை வாணன். ஹரிணியின் இன்னொரு முறைப்பையன் கொலை வாணன், சொத்துக்காக ஹரிணியை திருமணம் செய்து கொள்ள திட்டமிடுகிறார்.

கிரிக்கட் போட்டியில் வெற்றி பெறுகிறவருக்கு பெண்ணை கட்டித்தர ஹரிணியின் அப்பா சம்மதிக்கிறார். அதற்கு பிறகு தான் ரகளையே ஆரம்பமாகிறது. போலி கிரிக்கட் பயிற்சியாளரான மயில்சாமி, வில்லன் கொலை வாணன் ஆட்களுக்கு கிரிக்கட் சொல்லித் தருவது சிரிப்போ சிரிப்பு. கொடை வாணன், அவதாரம் கதாபாத்திரங்கள் வரும் காட்சிகள் சரியான கொமெடி பீஸ்.

சில இடங்களில் கொமெடியில் ”மேன் ஆப் த மேட்ச்” பட்டத்தையும் தட்டி செல்கிறார்கள். நாயகன் சடகோபன் ரமேஷ், நாயகி ஹரிணியிடம் ரொமான்ஸ் பண்ணும் காட்சிகளில் பவுண்ட்ரி, சிக்சர்களை விளாசியிருக்கிறார்.

கொமெடியான திரைக்கதையில் அலுப்பு தட்டாமல் படத்தை கொண்டு செல்கிறார் இயக்குனர் யுவராஜ். கொமெடி கிரிக்கட் படத்திலும் ரசிகர்களுக்கு தகவல் சொல்லியே தீருவதென உறுதி காட்டியுள்ளார்.

நடிகர்கள்: சடகோபன் ரமேஷ், ஹரிணி, சிவம், அவதார் கணேஷ், உமர், மயில்சாமி மற்றும் பலர்.

இசை: அருள் தேவ்.
பாடல்கள்: ஜெய முரசு.
ஒளிப்பதிவு: கோபி அமர்நாத்.
எடிட்டிங்: ராஜ முகமது.
தயாரிப்பு: வி.முரளி ராமன்.
பி.ஆர்.: செல்வ ரகு.
எழுத்து, இணை தயாரிப்பு, இயக்கம்: யுவராஜ்



No comments: