``அவுஸ்திரேலிய ஈழமுரசு பத்திரிக்கையின் நகைச்சுவை இரவு.’’


.

ஒரு இனத்தின் அடையாளமாக மொழி இருக்கும் போது அந்த  மொழியின் அடையாளத்தையும் மொழி வளர்ச்சியையும் சுமந்து நிற்பது பத்திரிக்கையே. அந்த வகையில் அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் ஈழமுரசுப் பத்திரிக்கை  எமது தேசத்தின் நினைவுகளையும் வலிகளையும் சுமந்து எவ்வளவோ தடைகளையும் தாண்டி வெளிவருகின்றது. இந்தப் பத்திரிக்கையின் வளர்ச்சிக்காக கடந்த வாரம் சிரிப்போ சிரிப்புஎன்ற நிகழ்ச்சியை றிங்வூட் மண்டபத்தில் சிறப்பாக நடாத்தியது. 


6.30 மணிக்கு பொதுச் சுடர்களை திரு மாமனிதர் தில்லை ஜெயக்குமார் அவர்களின் துணைவியார் திருமதி யோகா அவர்களும், கலைவளன் சிசு நாகேந்திரன் அவர்களும்ஈழமுரசின் முன்நாள் நிறுவாகி யாதவன் அவர்களும். ஈழமுரசின் இன்றைய ஆசிரியர் குழுவின் நிர்வாகி நந்தா அவர்களும் ஈழமுரசின் நிவாகக் குழுவின் உறுப்பினர் பரணி அவர்களும் ஈகைச்சுடரை  ஏற்றி வைக்க கொடிய யுத்தத்தில் இளந்துபோன எமது உறவுகளுக்காக 2 நிமிட அகவணக்கத்தை நிறைவு செய்து கொண்டு நிகழ்ச்சிக்குள் நுழைகின்றோம்.
முதலாவது நிகழ்ச்சியாக காதுக்கினிய கவியரங்கம் DR மணிவண்ணன் அவர்களின் தலைமையில்;பத்திரிக்கை என்ற தலைப்பில் அறிவழகனும் ``வீட்டில் தமிழ் மொழி தமிழ் பொடியன்  றமணா அவர்களும்,``மறந்து போகுமோ என்ற தலைப்பில் உதையாசிறிஅவர்களும்``காலங்கள்என்ற தலைப்பில் ஆவூரான் அவர்களும் கவிமழை பொழிந்தனர்.

பாடும்மீன் சு.சிறிகாந்தராசா தலைமையில் நகைச்சுவைப் பட்டிமன்றம். ``இலக்கியச்சுவை விஞ்சி நிற்பது கண்ணதாசனின் பாடல்களில்என்று திரு      DR மணிவண்ணன் அவர்களும்,திரு வெள்ளையன் தங்கையன் அவர்களும் வாதிட இவர்களை எதிர்த்து இல்லை``கண்ணதாசனின் பாடல்களில் இலக்கியச் சுவை விஞ்சி நிற்கவில்லை என்று மிகவும் உதாரணங்களை முன்வைத்து வாதிட்டார்கள் திரு சசிதரனும் திரு.சிவசம்பு மாஸ்ரர் அவர்களும்.பட்டிமன்றத்தை மிகவும் சுவார்சியமாகவும் நகைச்சுயாகவும்,
பாடியும் சபையோரை மகிழ்வித்தார் பட்டிமன்றத்தலைவர் பாடும்மீன் அவர்கள்.
நாடகம்: ``கிழித்து விட்டுப் படிக்கிறார்கள்.
எட்வேட் அருள்நேசதாசனின் பார்வையில் ``ஓசி பாய்ஸ்களான எட்வேட் பாலசிங்கம் பிரபாகரன், சொப்பார்நானா, மனோகரன், நவா மாஸ்ரர் ஆகியோரின் நடிப்பாற்றலினால் சபையோரை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்தார்கள் இதனால் தானோ ``சிரிப்போ சிரிப்புஎன்று இந்த நிகழ்ச்சிக்கு
பெயர் வைத்தார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.       
அவுஸ்திரேலிய ஈழமுரசு பத்திரிக்கை மூன்று வித்தகர்களை சிறப்புக் கெளரவம் செய்து வைத்தது.

 வானொலி வித்தகர் திரு. பாலசிங்கம் பிரபாகரன், வானொலி அறிவிப்பாளாரும் நாடக நடிகருமான ,திரு. எட்வேட் அருள் நேசதாசன்,நகைச்சுவை நடிகர் சொப்பார் நானா திரு.ரவிபத்மநாதன்.ஆகியோரை மாமனிதரின் தில்லை ஜெயக்குமாரின் துணைவியார் திரு.திருமதி யோகா,கலைவளன் திரு.சிசு நாகேங்திரன்,திரு.கணேஸ் அவர்களும். முறையே ஈழமுரசுக் கேடயம் கொடுத்து  கெளரவித்தார்கள்.
வாய் விட்டு வயிறு குலுங்கி சிரித்திருந்தவர்களை வாய்க்கு ருசியான உணவளித்து வயிறு நிறைத்து மகிழ்வித கையோடு சிட்னி மெல்பேர்ண் கலைஞர்கள் இணைந்து படைத்த இன்னிசை கானங்கள் தேனிசை மழையாய் பொழியத் தொடங்கியது.பெரும் குளிரையும் அடைமழையையும் பொருட்படுத்தாது. ஈழமுரசின் நிகழ்ச்சிக்கு வங்திருந்து மண்டபம் நிறைத் திருந்த ரசிகப் பெருமக்கள் குறை என்ற வார்த்தைக்கே இடமின்றி நிறைவா


க வீடு போக மகிழ்வித்தவர்களான சிட்னி மெல்பேர்ண் கலைஞர்கள் இம்முறை நிறையப் புதிய கலைஞர்களை இந்த மேடையில் காணக்கூடியதாக இருந்தது.இவர்கள் அனைவருக்கும் நீண்ட பட்டியலில் நன்றியுரையினை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திரு.றமேஸ் அவர்கள் உரையாற்றி நின்றார்.  
          
 ஆவூரான்.    

No comments: