கணேச விசர்ஜன் திருவிழா 4 – 9 – 2011

.

கணேச சதுர்த்தியை அடுத்து வரும் கணேசவிசர்ஜன் திருவிழா இவ்வருடம் செப்ரம்பர் மாதம் 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஹெலன்ஸ்பேர்க் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயிலில் வழக்கம் போல் விமரிசையாகக் கொண்டாடப்படும்.

காலை 9 மணிக்கு விசேட ஹோமம் ஆரம்பமாகும். காலை 10.30 மணிக்கு ஸ்ரீவரசித்தி விநாயகருக்கு விசேட அபிஷேகம் நிறைவேறிய பின், பூசை, அர்ச்சனைகள் நடைபெறும். பிற்பகல் 2.30 மணிக்கு கணபதி ஊர்வலம் மங்கள வாத்தியத்துடன் ஸ்ரன்வெல்


பார்க் (Stanwell Park)  கடற்கரைக்கு புறப்படும். பக்தர்கள் எல்லோருக்கும் கோயிலிருந்து கடற்கரைக்கு செல்ல இலவச பஸ் சேவை செய்யப்பட்டுள்ளது.

இத்தினத்தன்று, கலைநிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கு ஒவியப் போட்டிகள் முதலியன கோயில் பிரகாரத்தில் நடைபெறும். கோயில் சிற்றுண்டிச்சாலை நாள் முழுவதும் திறந்திருக்கும். பக்தர்கள் பெரும் திரளாக வருகை தந்து ஸ்ரீவரசித்தி விநாயகரின் அருளைப் பெறுமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

இத்தினத்தன்று, அதாவது செப்ரம்பர் மாதம் 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஹோம்புஷ்  (Hombush) இலிருந்து ஸ்ரத்பீல்ட் (Strathfield ) வழியாக ஒரு விசேட பஸ் சேவை இருக்கிறது. இது சம்பந்தமான விபரங்களுக்கு திரு தர்மபாலனை 9649 4507 என்ற தொலைபேசி எண்ணில் விரைவில் தொடர்பு கொண்டு ஆசனங்களை ஒதுக்கிக்கொள்ளுங்கள்.

No comments: