மரணம் இரைந்த தெருக்கள் - கவிதை - வித்யாசாகர்

.

கைமாற்றி கைமாற்றிக்
கொண்டுவந்த
அறிவுத் திரள்களின் பிதற்றலில்
எப்படியோ கொப்பளிக்கிறது ஞானம்;
அல்லது மரணம்!

தீக்குச்சி உரசி வீசும்
நேரத்திற்குள்
அணைந்துவிடுகின்றன
உயிர் விளக்குகள்;
அல்லது பூத்துவிடுகிறது உயிர்ப் பூ!!



காற்றுப் பையின்
வெற்று இடத்தில்
கண்ணுக்குத் தெரிவதேயில்லை
மரணம்;
அல்லது பிறப்பின் காரணம்!

ஞானத்தை அடையாளம்
காட்டாமலேயே
மரணம் நிகழும்
கடவுளர்கள் வாழும் வீதி;
வீதி நிறைய கோபுரக் கோவில்களும்; குடிசைகளும்!!

கைநிறைய வைத்திருக்கும்
மரணத்தை
அவர்களின் விருப்பமின்றியே
வாரி இரைக்கிறது - ஒவ்வொரு
மரணம் நிறைந்த தெருக்களின் நெடுகும்;
நாம் தெரிந்தும்; தெரியாமல் செய்த தவறுகளும்!!
-----------------------------------------------------------------------------------------

No comments: