உலகச் செய்திகள்

*டுனீசியா படகு விபத்தில் 200 பேர் பலி
*தென் சீனாவில் வெள்ளம்: 21 பேர் பலி
*ஜேர்மனி நாட்டு பண்ணையிலே இ -கோலி பிரச்சினை _
*இஸ்ரேல் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் 25 பேர் பலி 325 பேர் காயம்

fighting2ஜெருசலேம்:இஸ்ரேல்பாலஸ்தீன எல்லைப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பாலஸ்தீன ஆர்வலர்கள் மீது இஸ்ரேல் துருப்புக்கள் மேற்கொண்ட துப்பாக்கி

பிரயோகத்தில் 25 பேர் பலியானதுடன் 325 பேர் காயமடைந்துள்ளனர். மத்திய கிழக்கு போரின் 44 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போதே இஸ்ரேல் படைகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளன.

பொதுமக்களின் உயிரிழப்பு குறித்து தாம் குழப்பமடைந்திருப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதுபோன்ற ஆர்ப்பாட்டம் கடந்த மாதம் நடைபெற்ற போது ஆர்ப்பாட்டக்காரர்கள் எல்லைகளைத் தாண்டிச் சென்றிருந்தனர்.இதனைத் தொடர்ந்து இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதைத் தடுப்பதற்கு இஸ்ரேல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.


ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளைத் தடுத்து அனைவரும் அமைதிபேண வேண்டுமென அமெரிக்கா கோரியுள்ளது. பாலஸ்தீனக் கொடிகளை தாங்கிய பல ஆர்ப்பாட்டக்காரர்கள் எல்லை வேலிகளுக்கு மேலால் கற்களை வீசியுள்ளனர். ஆனால்,ஆர்ப்பாட்டக்காரர்களை எச்சரிக்கும் முகமாகவே இஸ்ரேல் படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர் என இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.

பி.பி.சி.
நன்றி தினக்குரல்

டுனீசியா படகு விபத்தில் 200 பேர் பலி

6/4/2011 6:24:32 PM
லிபியாவில் இருந்து இத்தாலி நோக்கி பயணித்த படகொன்று டுனீசியா அருகே விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் மேற்கொண்ட சுமார் 200 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்விபத்தானது கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தின் போது படகில் சுமார் 800 பேர் வரை பயணித்துள்ளனர்.
இவர்களில் 500 இற்கும் மேற்பட்டோர் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. படகில் இருந்தவர்களில் பெரும்பாலோனோர் மேற்கு ஆப்ரிக்கா, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


நன்றி வீரகேசரி


தென் சீனாவில் வெள்ளம்: 21 பேர் பலி

6/7/2011 5:24:49 PM

சீனாவின் தென் மேற்கு மாகாணமான கியிஸொயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சுமார் 21 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ் வெள்ளத்தால் பொதுச் சொத்துக்களுக்கும் பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளன.

இவ்வனர்த்தித்தினால் சுமார் 270000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 45000 பேர் வரை இடம்பெயர்ந்துள்ளனர்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் காணாமல் போனோரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நன்றி வீரகேசரிஜேர்மனி நாட்டு பண்ணையிலே இ -கோலி பிரச்சினை _


6/6/2011 3:02:42 PM
ஸ்பெய்ன் வெள்ளரிகாய்களால் ஏற்பட்டதாக் நம்பப்பட்ட இ- கோலி பக்டீரியா தொற்று வட ஜேர்மனிய பண்ணையொன்றில் இருந்தே உருவாகியுள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இ- கோலி பக்டீரியாவானது அவ்ரை இனத் தாவர விதை முளையினாலே பரவியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கான உத்தியோகபூர்வ பரிசோதனை முடிவுக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் குறித்த ;பண்ணையை மூடிவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தப்பண்ணையானது ஜேர்மனியின் தென் ஹம்பேர்க்கில் உள்ளதுடன் இதுவே நகரப்பகுதி மற்றும் ஜேர்மனியிலுள்ள உணவகங்களுக்கும் சந்தைகளுக்கும் உற்பத்திகளை வழங்குகின்றது.

சுமார் 38 பாகை செல்சியசில்; இதனைப் பீடிக்கும் பக்டீரியா உருவாகிறதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நன்றி வீரகேசரி

No comments: