சிட்னி தமிழ் அறிவகம் நடாத்திய கொடிவார விழா- கரு

.

யாழ் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட தினத்தை நினைவு கூர்வதற்காக சிட்னி தமிழ் அறிவகம் கொடிவார விழாவை கடந்த சனிக்கிழமை யூன் மாதம் 4ம் திகதி ஹோம்புஷ் ஆரம்ப பாடசாலையில் மாலை 6 மணிக்கு நடாத்தியது. 
படப்பிடிப்பு: சோதிராஜா


இவ்விழாவை திரு திருமதி ஞானசேகரம் அவர்கள் மங்கள விளக்கேற்றி தொடக்கிவைத்தார்கள்.


தமிழ்மொழி வாழ்த்தையும் தேசிய கீதத்தையும் ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலைய மாணவர்கள் பாடினார்கள். ஒரு நிமிட மௌன அஞ்சலியைத் தொடர்ந்து உபதலைவர் திரு ந கருணாகரன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

அடுத்த நிகழ்ச்சியாக, திருமதி அபிராமி குமாரதேவனின் மாணவர்களின் பரதநாட்டியம் மிக சிறப்பாக நடைபெற்றது.தலைவர் திரு வீ குணரஞ்சிதன் அவர்களின் தலைவர் உரையைத் தொடர்ந்து ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலைய மாணவர்ளால் மாணவர் அரங்கம் “கற்றதும் பெற்றதும்” என்ற தலைப்பில்  வழங்கப்பட்டது. ஜினோதா லோகேந்திரன் தலைமையில் நடாத்தப்பட்ட இந்த மாணவர் அரங்கத்தில் அஷ்வீனா சிற்சபேசன், ஹெலென் அசோகன், ஜனார்த்தன் குமரகுருபரன், பார்கவி மோகனசுந்தரம் கஸ்து}ரி முருகவேல், தக்ஷினா ராஜேந்திரன், பிரணவி இராஜசிங்கம், தேவிகிருஷ்ணா தேவேந்திரன், விதுஷனா சந்திரசேகர், பெஞ்சமின் நடராஜா, ஆதித்தன் திருநந்தகுமார் மற்றும் பானு போல்(வென்ற்வேத்வில் தமிழ்க் கல்வி நிலைய மாணவர்) ஆகியோர் பங்குபற்றினார்கள்.


நன்றியுரையைத் தொடர்ந்து திருமதி கார்த்தியாயினி கதிர்காமநாதன் அவர்களின் சிறப்புச் சொற்பொழிவு “தமிழ்ப் பண்பாடும் கலை இலக்கியமும்’ என்ற தலைப்பில் எல்லோரையும் ஈர்க்ககூடியதான முறையில் பாடல்கள் சிலவற்றைப் பாடியும் மிகச் சிறந்த சொற்பொழிவை நடாத்தினார்..

கொடி விற்பனை நடைபெற்ற போது எல்லோருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.


1 comment:

திருநந்தகுமார் said...

நல்லதோர் தொகுப்பு.
வருடந்தோறும் நடைபெறும் கொடிதினத்தில் பங்குபற்றிவந்த எனக்கு இம்முறை எழுத்தாளர் விழா காரணமாகப் பங்குபற்ற முடியவில்லை.
கற்றதும் பெற்றதும் நிகழ்ச்சி முழுக்க முழுக்க மாணவர்கள் நிகழ்ச்சி. தலைமை தாங்கியவரும் பங்குபற்றியவர்களுமாக மொத்தம் 13 பேர் பங்கு கொண்ட நிகழ்ச்சி. கடந்த ஏழு வருடங்களாக தமிழ்ப் பாடசாலை மாணவர்களுக்கு சிட்னி தமிழ் அறிவகம் களம் அமைத்துத் தருவது பாராட்டிற்குரியது. இன்னமும் மூத்த குடிமக்களில் சிலர் தான் அயராது பாடுபட்டு அறிவகத்தை நடத்த உதவுகின்றனர். வாரத்தில் இரு மணி நேரங்களைச் செலவிடக் கூடிய தொண்டர்கள் கிடைத்தால் மிகுந்த உதவியாக இருக்கும் என அறிவக நிர்வாகிகள் அடிக்கடி சொல்வர். யாராவது முன்வந்தால் நன்று.
வாழ்க தமிழ் அறிவகம்.