மெல்பேர்ன் மாநகரில் உரும்பிராய் இந்துக் கல்லூரி நூறாவது ஆண்டுவிழா

  .

 கடந்த சித்திரை மாதம் 3 ம் திகதி (03 .04 .2011 ) பார்ம்ஸ் உணவகம் சின்டலில் நூறாவது ஆண்டுவிழாவை   உரும்பிராய் மக்கள் ஒன்றுகூடி கொண்டாடினார்கள்.பழைய மாணவர் திரு.சற்குணம் அவர்கள் தமது பாரியாருடன் மங்கள விளக்கு ஏற்றி வைக்க கல்லூரி கீதத்தினை அனைவரும் இசைத்தனர்.

இதனைத் தொடர்ந்து 100 வது   ஆண்டுவிழா கேக்கினை   மூத்த பழைய மாணவர்களாகிய திரு.அருளேஸ்வரனும், திருமதி.ப.கனகரத்தினமும்  வெட்டினார்கள்திருமதிஅனந்தநாதன் வரவேற்புரை கூறி,  நூறாவது ஆண்டுவிழா வாழ்த்து வாசித்தார். உரும்பிராய் மக்கள் ஒன்று கூடலை ஊக்குவித்தவரும், உதவிகளைச் செய்தவருமாகிய திரு. வீ . அனந்தநாதன், எதிர்காலத்தில் நாம் ஆரம்ப பாடசாலைகளுக்கும் உதவ வேண்டும் என்ற தமது கருத்தைக் கூறினார்.


இக்கொண்டாட்டத்திற்கு இன்பத்தமிழ் ரேடியோ அலை வரிசை மூலம் ஒலிபரப்பியும், தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டும் உதவி புரிந்த திரு. ந. அல்லமதேவர் அவர்கள், அண்மை காலத்தில் உரும்பிராய் சென்று கல்லூரி அதிபரையும், ஆசிரியர்களையும், ஊர் மக்களையும் சந்தித்து அறிந்து கொண்ட விடயங்கள் பற்றி உரை நிகழ்த்தினார்.
மேலும் பழைய மாணவராகிய திரு.ச.சற்குருநாதன் பாடசாலை பசுமை நினைவுகளைக் கூறி எல்லோரையும் சிரிக்க வைத்தார்.
அடுத்து டாக்டர். பொ. நந்தன் தனது பாடசாலை பழைய நினைவுகளைக் கூற, எதிர்காலத்தில் தான் எந்தவகையில் உதவ விரும்புவதாக தனது கருத்துத் தெரிவித்தார்
மெல்பேர்நில் வசித்தவரும், உரும்பிராயில் தற்போது வசிப்ப்வ்ருமாகிய திரு. நித்தி கனகரட்ணம் அவர்கள் அங்குள்ள மக்கள் வாழ்க்கை முறைகள் அவர்கள் தேவைகள் பற்றியும் தெளிவாக கூறினார்.திரு. இரவீந்திரன் அவர்கள் நாம் இங்கிருந்து கொண்டு எவ்வகையில் செயற்பட முடியும் என்ற ஆலோசனையைக் கூறியதுடன் இதற்கான சங்கம் உருவாக்குவதில் ஆர்வம் காட்டினார்.இறுதியாக திருமதி.அனந்தநாதன் சிட்னியில் நடக்கவிருக்கும் கொண்டாட்டம் பற்றி அறிவித்து அவுஸ்திரேலியாவிலும் உரும்பிராய் பாடசாலைகள் பழைய மாணவர் சங்கம் இயங்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து அனைவர்க்கும் நன்றி கூறினார்.
முதன் முறையாக உரும்பிராய் மக்கள் ஒன்று கூடலும் நூறாவது ஆண்டுவிழாவும் மதியபோசனத்துடன் இனிதே நடைபெற்ற மகிழ்ச்சியுடன் அடுத்த ஒன்று கூடலை ஒழுங்குசெய்ய திரு.அல்லமதேவரிடம் பொறுப்பைக் கையளித்து விடை பெற்றார் திருமதி.அனந்தநாதன்
3 comments:

kirrukan said...

புலத்தில் இருந்து பழைய மாணவர்கள் பணம் சேர்த்து அனுப்ப ஊரில் பாடசாலை அதிபர்கள் ஜாலியாக பேண்ஸ் கார் ஒடுயினம் என்று நண்பர் ஒருவர் வந்து சொன்னார்

Anonymous said...

Nanpare
I am glad to know who is the car dealer selling Benz worth A$500 - A$1000 in Srilanka.

Nerran

Ramesh said...

"கதைகட்ட ஒருவன் இருந்து விட்டால் கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு" நல்லவிடயங்கள் நடக்கும்போது இப்படியான கதைகளையும் கேட்க வேண்டி வரும். யாராவது ஒருவர் தவறு புரிந்திருக்கலாம்.அதற்காக எல்லோரையும் பொதுவாக பார்ககூடாது.