.
.
அவு/தமிழ் இலக்கிய கலை சங்கம்
ஆண்டுக் கொரு தரம் கூடும்
எழுத்தாளும் மனங்கள் எல்லாம்
ஏங்தி நிற்கும் விழாக் கோலம்
கருத்தரங்கு, கவியரங்கு_நல்ல
கதை சொல்லும் சிறு அரங்கு
மழலைகளின் குரல் அரங்கு
மாணவர்க்கு தனி அரங்கு-எம்
மகளிர் தரும் சுவை அரங்கு
மகிழ்ந்து நிற்க உண்ணவரங்கு
தனிப்பட்ட விருப்பு வெறுப்பை
தனியாக எடுத்து வைப்போம்-எழுதும்
தமிழர் நாம் என்று-இதை
எல்லோர்க்கும் எடுத்துரைப்போம்
ஒரு நாளில் நாம் கூடி
ஒன்றாக மகிழ்ந்திருபோம்
இலக்கியமும் இருகலையும்
இருகண்ணாய் நாம் வளர்ப்போம்,
உலகத் தமிழர் எல்லோரும்
உற்று பார்க்க நாம் நடப்போம்
ஒற்றுமையின் இலக்கணத்தில்
ஒரு குடையாய் இணைந்திருப்போம்.
கவிஞர் ஆவூரான்.
No comments:
Post a Comment