இசை விழா - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்


.

சிட்னியில் யூன் மாதம் 11, 12, 13ம் திகதிகளில் இசை விழா. இவ்வாறு புலம் புயர்ந்த நாட்டிலே இசை விழா. எந்தவித பிரச்சனையும் இல்லாது நம்மை தேடி இசைவிழா வந்தது நாம் செய்த பாக்கியம்தான்.

இசைவிழா எனும்போது என்மனதிலே அலைபோதும் இனிய பழய ஞாபகங்கள். அதை உங்களுடன் பகிர்வதில் ஒரு திருப்தி ஏன் ஆனந்தம் என்றே கூறலாம். நான் எனது குருநாதர் ஆன வழுவூரார் வீட்டிலே குருகுல  வாசம் செய்த காலத்து அனுபவங்கள் பலப்பல.
Music Accadamy  மார்கழி விழா ஆரம்ப நாள் பெரிய வித்துவான்களும் விதூஷிகளும் அழைக்கப்பட்டிருப்பார்கள். எனது ஆசானும் என்னையும் அவரது மகள் பாக்கிலக்ஷிமியையும் எங்கும் அழைத்து போவது வழமை. அவ்வாறே விழாவிற்கு சென்றிருந்தேன். பெரிய பெரிய மேதாவிகளின் மத்தியிலே நானும் ஒருத்தியாக நின்றிருந்தேன். M.S.சுப்புலக்ஷிமி கணவர் சதாசிவம் சதிதம் வந்தார். அவருக்கே உரிய நீலபட்டு புடவை வைர மூக்குத்தி நெத்தியிலே பொட்டு, மேலே பொட்டு, 4 பொட்டுகள் இருக்கும் என நம்புகிறேன். தோழிலே இளுத்து போத்திய சேலை. லக்ஷிமியோ சரஸ்வதியோ அந்த இடத்தை அலங்கரிப்பது போன்ற தோற்றம்.

வீணை பாலச்சந்தர் நெடிய அழகிய உருவம். அருகிலே பெண்மையின் அழகெல்லாம் குடிகொண்டது போல பிரமையை ஊட்டும் மனைவி. பாலச்சந்தர் பிறவிமேதை யாருடமும் கற்றுக் கொள்ளாது வீணை வாசித்தவர். “அந்த நாள்” என்ற பாடலே அற்ற சினிமா படத்தை எடுக்கும் அழவு துணிச்சல் காறர். முகத்திலே தெரிவது மேதமையா? வசீகரமா? அந்த 18 வயதிலே அந்த தம்பதிகள் என்னைக் கவர்ந்தனர். 25 வருடங்கள் கழித்து பாலச்சந்தரின் மனைவியும் மகனும் மறைந்த மேதை பாலச்சந்தருக்கு மைலாபூர் Fine Arts இல் விழா எடுத்தார்கள். பலரும் வந்து பாடினார்கள் வந்து பாடிய வித்துவான்களுக்கு திருமதி பாலச்சந்தர் நன்றி தெரிவிக்கும் முகமாக பரிசில்களை வழங்கினார். உண்மையிலேயே அதிர்ந்து போனேன். இத்தனை அழகியா இப்படியாகிவிட்டார் என, ஆனால் பாலச்சந்தர் நினைவு மடலிலே அந்த மேதை தனது கை எழுத்தை வீணைவடிவிலே போட்டதையும் பார்த்து வியந்தேன் பொக்கிஷமாகவும் பாதுகாத்தேன்.

D.K. பட்டம்மாள் வைர கம்மல் மூக்குத்தி, இழுத்தி போர்த்த பட்டுப்புடவை அழகு என வசிகரம் கிடையாது. ஆனால் மனம் விட்டு சிரித்து பேசும் அவா முகத்திலே 888888 எதும் தெரியாது. கணவர் ஈஸ்வர அய்யர் சகிதம் வந்தார் பிற்காலத்திலே இவரது வீட்டு சாப்பட்டை எல்லாம் உண்டு, சங்கீதம் பற்றி பேசி அவர்கள் குடும்பத்துடன் இணைவேன் என்பது அப்போது எனக்கு தெரியாது.

இசையிலே பெண் மும்மணிகழாக திகழ்ந்தவர்கள். M.S. சுப்புலக்ஷிமி, D.K. பட்டம்மாள், M.L வசந்தகுமாரி, M.L.V இரட்டை நாடி சரீரம். அருகிலே மகள் வித்தியாமூர்த்தி. 15 வயது பெண் பாவாடை தாவணி பருவத்திலேயே சேலை கட்டுவாள். அம்மாவுக்கு தம்புரா போடுவது சேர்ந்து பாடுவதெல்லாம் இந்த வித்தியாமூர்த்தியேதான். மேடையிலே உட்கார்ந்தால் அம்மா மாதிரி செக்கசேவேரெண்டு இருக்கமாட்டாள். சிறிது நிறம் குறைவுதான் அழகிய கண்ணும் எடுப்பான தோற்றமும் யாவரையும் கவரும் இந்த பெண்ணே பிற்காலத்திலே சினிமாவில் தனக்கென இடம் பிடித்த ஸ்ரீவித்தியா இந்திரலோகத்து சக்கரவாகமாக இரசிகர் உள்ளத்திலே வாழ்பவள்.

அங்கு வந்திருந்த பெரிய வித்துவான்கள் நடுவிலே நின்றிருந்த 3 பெண்கள் எனது குருநாதர் மகள், நான், வித்தியாமூர்த்தி மாத்திரமே. எமக்கு இடம் ஒதுக்கீடு செய்திருந்தார்கள். வீடு திரும்பும்போது எனது குருநாதர் மகன் பாக்கியாவும் நானும் M.L.V இன் மகள் மிக அழகா இருக்கிறார். haccoba சேலை அணிந்து வெகு சாதாரணமாக வந்துள்ளார். இப்படி எல்லாம் பேசிக்கொண்டோம். இன்றைய பெண் படாகிகள் எல்லாம் கச்சேரிக்கு போவதற்கு முன் faciyal செய்ய ஒப்பனைகூடம் போவார்களாம். ஆனால் அன்றைய படாகிகள் இதை அறியார். M.L.V மேடையிலே உட்கார்ந்து பாடும் போது அவரது சிவந்த நிறத்தை அணிசெய்வது அவரது சிவந்த உதடும். ஏன் சிவப்பு நிற வாயுமே. அத்தனையும் வெற்றிலை சாயம். அவர்கள் பாடிய சங்கீதம் தேனாக பாய்ந்தது. மக்கள் அதிலே மயங்கினார்கள். இன்றோ சினிமா மோகம் நிறைந்த உலகம். புதிய பாடகிகளை ஒப்பனைக் கூடம் செல்ல வைக்கிறது. குரல் வழம் பத்தாது அழகும் வேண்டியுள்ளது.

ஆண் பாடகர் என்றால் பட்டு வேஷ்டி அங்கவஸ்திரம் மாமுல், அதுமட்டுமா சங்கீதத்துடன் இணைந்தது. அத்தர் – அல்லது ஜவ்வாது வாசைன திரவியம். இத்தகைய வாசைன திரவியம் எல்லாம் அப்படியே கடையில் விற்பதை வாங்கி போட்டுக் கொள்ள மாட்டார்கள்.

ராஜஸ்தானில் இருந்து வெவ்வேறு வகையான வாசனை திரவியங்களை வரவழைத்து தமக்கு பிடித்த அழவிலே கலந்து புதிய வாசைன திரவியத்தையே தயார் செய்துவிடும் வித்தகர்கள் இவர்கள். எனது குருநாதரான வழுவூர் இராமையா பிள்ளை அவர்கள் இதைக்  கலப்பதைப் பார்த்துள்ளேன். இவ்வாறு படாடோபம் நிறைந்த ஆடை அலங்காரம் அங்கவஸ்திரம் ஜவ்வாறு காது கடுக்கன் எல்லாம் மாறி, இன்றைய வித்துவான்கள் குர்த்தா பைஜாமா ஒரு காதில் மின்னும் கம்மல் என மொடன் ஆகி விட்டார். 

இவை எல்லாம் வேண்டாம் என வாழ்ந்த கலைஞாகளும் உண்டு. படாடோபமே அறியாது விரும்பாது வாழ்ந்த மேதை செம்மங்குடி ஸ்ரீநிவாச அய்யர். இவரோ தன் கையால் தறியிலே தனது வேஷ்டிகளை நெய்தே உடுத்தி வந்தார். இவர் தேசியவாதி. கொள்கை பிடிப்புள்ளவர். புலமை பரிசு அரசால் வழங்கப்பட்டு தேர்ந்த மாணவர்கள் இவரிடம் இசை கற்க அனுப்பபடுவது வழமை அவ்வாறும் வந்த மாணவருக்கு அரசு வழங்கும் பணத்தை தனியாக ஒரு வைப்பு பணத்தில் போட்டு மாணவர் கற்று முடிந்து வெளியேறும் போது அப்பணத்தை மாணவர் கையிலேயே கொடுத்துவிடுவார். வாழ்க்கையை ஆரம்பிக்க உனக்கு பணம் வேண்டும் இது அரசு உனக்காக தந்தது என்பாராம் செம்மங்குடி என்ற அந்த செம்மல்.

இந்த செம்மங்குடி ஸ்ரீநிவாச ஜயரிடம் சங்கீதம் கற்ற மேதைகள் பலர் இவர்களுள் M.S.சுப்புலக்ஷிமியும் யேசுதாசும் அடங்குவர்.

செம்மை வைத்தியநாதபாகவதர் மாபெரும் மேதை. இவருக்காக கேரளத்திலே ஒரு சிலை அமைத்தார் யேசுதாஸ். இவர் பாடல்களை வீட்டிலே பாடிக்கொண்டிருக்கும் போது வீட்டோரமாக ஒரு றிக்க்ஷோகாறன் கேட்டு இரசிப்பதை பார்த்த செம்மை வைத்தியநாதபாகவதர் அவனை அழைத்து உனக்கு பாட்டு கத்துக்க ஆசையா என கேட்டாராம். அவனும் கத்து தந்தால் கத்துப்பேன் என்றாராம். செம்பை வைத்தியநாதபாகவதரோ அவனுக்கு சில பாடல்களை கற்று கொடுத்து மகிழ்ந்தார்.

மேதை என்பவன் தான் கொண்ட கலையிலே தன்னை ஈடுபடுத்தி மகிழ்பவன். படாடோபமும் ஆடம்பரமும் ஏன் இந்த உலகம் கொடுக்கும் அந்தஸ்தும் ஒரு பொருட்டல்ல என வாழ்ந்த இந்த மேதைகளின் வாழ்வு மூலமாக அறிகிறோம்.

அரசன் பணமும் பொண்ணும் பல்லக்கும் கொடுத்தனுப்பி தன்னை தன்புகளை பாட அழைத்தபோது உன்னை பாடுவது ஸ்ரீராமனை பாடுவதற்கு ஒக்குமா? அந்த இராமனையே பாடுவேன் என கூறி “நிதிசால சுகமா” என பாடிய தியாகராஜாருக்கு இணையானவரே நாம் இங்க கண்ட செம்மங்குடியாரும்.

1 comment:

திருநந்தகுமார் said...

சிட்னி இசைவிழாவை முன்னிட்டு கார்த்திகா கணேசர் அவர்கள் தம் உள்ளத்தில் எழுந்த நினைவுகளை இங்கு மீட்டியது பொருத்தமானதே! மிகவும் சுவையாக தமது நினைவுகளை இங்கு வடித்திருக்கிறார். ஒரு கூட்டத்தில் அவர் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். பேச்சாளர்களுக்குப் போட்டியாக ஒரு நாட்டியக் கலைமணி பேசியது வியப்பாக இருந்தது. அம்மையார் எத்தனை பெரிய மனிதர்களுடன் பழகியிருக்கிறார் என்று அறியும்போது வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. தமிழ்ச் சுவை தொட்டு உங்கள் அனுபவப் பகிர்வு தொடரட்டும்.