வெள்ளிப் பாதசரம் - சிறுகதை -இலங்கையர்கோன் -



தன் வீட்டுக்கு ஒரு அடுக்குப் பெட்டியும் தனக்கு ஒரு தையற் பெட்டியும்வாங்கவேண்டும் என்று நினைத்து வந்தவளுடைய உள்ளம் விம்மும்படிகோவில் வீதியெல்லாம் பெட்டிகளும் கடகங்களும் மலைமலையாய்க்குவிந்திருந்தனகுஞ்சுப்பெட்டிஅடுக்குப்பெட்டிதையற்பெட்டிமூடற்பெட்டி,பின்னற்பெட்டி... எத்தனை வகைஅருகில் மாட்டை அவிழ்த்து அதன்வாயில் பொங்கிய நுரையை வழித்து அதன் மினுமினுக்கும் கரிய முதுகில்தேய்ப்பதில் கண்ணுங் கருத்துமாய் நின்ற தன் கணவனின் கையில் மெதுவாகநுள்ளி 'மாடு தன்பாட்டுக்கு நிற்கட்டும் வாருங்கோஎன்று கெஞ்சினாள்.

அஸ்தமிக்கும் சூரியனின் கடைசிக் கிரணங்கள் பனை மரங்களின் தலைகளைஇன்னும் தடவிக்கொண்டிருந்தனகிழக்கு அடிவானத்தில் சந்திரன் வெளுக்கஆரம்பித்தான்.
அன்று வல்லிபுரக் கோவில் கடைசித் திருவிழா. 'எவ்வளவு சனம் பாத்தியளே!இதுக்காலை எப்பிடிப் போறதுஎன்று சொல்லிக்கொண்டே நல்லம்மா தன்கணவனின் அருகில் ஒதுங்கினாள்செல்லையா தன் தோளில் கிடந்தசால்வையை எடுத்து இடுப்பில் வரிந்து கட்டிக்கொண்டு 'பயப்பிடாமல்என்னோடவாஎன்று தன் மனைவியின் கையைப் பற்றினான்.

கோவில் வீதிகளிலும் கடைகளிலும் காணப்பட்டதெல்லாம் நல்லம்மாவின்மனதில் ஒரு குதூகலத்தை உண்டாக்கினவாய் ஓயாது தன் கணவனுக்குஏதோ சொல்லிக்கொண்டே சென்றாள்ஐந்து வயதுச் சிறுமியபைபோல,முழங்கால்கள் தெரியும்படிதன் ஆடையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டுவீதியைச் சுற்றி ஒரு 'கெந்தல்போட வேண்டும் போல் அவளுக்குத்தோன்றியது... செல்லையா மௌனமாகத் தன் மனைவியின் குதூகலத்தில்மெய்மறந்து அவள் இழுத்த வழியெல்லாம் போய்க்கொண்டிருந்தான்.

யாழ்ப்பாணத்தின் நீர்வளமற்ற சொற்ப நிலத்தைத் தம் தளராத முயற்சிஒன்றினாலேயே வளம்படுத்திச் சீவியம் நடத்தும் புதல்வர்களில் அவனும்ஒருவன்இரக்கமற்ற பூமியுடன் தினசரி நடத்தும் போரினால் அவனுடையதசை நார்கள் முறுக்கடைந்து வச்சிரம் போல இருந்தனமனஒருமைப்பாட்டினால் வாய் மௌனமாகவே இருந்தது.

மூன்று மாதங்களுக்கு முன்புதான் அவன் தன் வாழ்;க்கைத் துணைவியைத்தேடிக்கொண்டான்அவளுடைய கலகலத்த வாயும்விடையில்லா ஒருகேள்வியைக் கேட்பது போல அவனுடைய பார்வையை முறித்து நோக்கும்அவளுடைய விழிகளும்மார்பின் பாரம் தாங்கமாட்டாதது போல் ஒசியும்நூலிடையும்நிர்மலமாக இருந்த அவனுடைய தனிமை வாழ்வில் ஒருகிளர்ச்சியை உண்டாக்கினசதா மண்ணைக் கிண்டுபவனுக்கு மண்ணிற்குள்எத்தனையோ ரகஸ்யங்களும் மணங்களும் புதுமைகளும் மறைந்திருக்கும்.ஆனால் அவைகளை விட மேலான ரகஸ்யங்களும் மணங்களும்,புதுமைகளும் வாழ்க்கையில் எத்தனை மறைந்து கிடக்கின்றனவாழ்வுஎவ்வளவு அற்புதமானதுசெல்லையா இன்று அணிந்திருக்கும் நாற்பது ரூபாபெறுமதியுள்ள மாறுகரைச் சால்வையை விட இதற்கு வேறு என்ன அத்தாட்சிவேண்டும்?

கோவிலிலுள்ள சனங்கள் தங்கள் இஷ;டப்படி கூக்குரலிட்டுக்கொண்டிருந்தனர்மூலைகளில் கிடத்தப்பட்டிருந்த  கைக்குழந்தைகள்அழுதனபஞ்சகச்சம் அணிந்த பூசகர்கள் அங்குமிங்கும் ஓடினர்இந்தஆரவாரங்களுக்கிடையில் கர்ப்பக்கிரகத்தில் மணிச்சத்தங் கேட்டதுகூப்பியகைகள் தலைகளுக்கு மேல் உயர்ந்தனசெல்லையா ஒரு தூணருகேகைகளைக் கட்டியபடி சனங்களின் தலைகளைப் பார்த்துக்கொண்டு நின்றான்.நல்லம்மா அவனருகில் கை கூப்பியபடி மூலஸ்தானத்தை ஒரு தரம்பார்ப்பதற்காக அங்கும் இங்கும் தலையை அசைத்தாள்எங்கோ தொலைவில்இருளில் சில தீபங்கள் மின்னினஅவைகளின் அருகில் ஒரு தொந்தி பெருத்தபூசகரின் கரும்பட உருவம் கைகளை அசைத்துக்கொண்டு நிற்பது தெரிந்தது.அதற்குப் பின்னால் - அதுதானோ வல்லிபுரப்பெருமாள்?

திருமாலின் திருமண பிரசாதத்தைப் பெறுவதற்கு ஆரவாரப்பட்ட சனங்கள்ஒரு பக்கத்தில் மேளச்சமா ஆரம்பமாகவே அவ்விடம் நோக்கி நகர்ந்தனர்.

செல்லையாவும் நல்லம்மாவும் கோவிலை வலம் வந்து வணங்கினர்.

தவிற்காரன் தாளவரிசைகளை மெய்மறந்து பொழிந்துகொண்டிருந்தான்.அவனுடைய குடுமி அவிழ்ந்த தலையோடு வேறும் ஆயிரந் தலைகள்அசைந்தனநல்லம்மாவுக்குச் சிரிப்பாகவிருந்ததுதன் கணவனின் உடலோடுதன் உடலை உராய்ந்துகொண்டு 'எல்லாருக்கும் பைத்தியம் பாருங்கோ'என்றாள்மௌனியான செல்லையா மௌனம் கலைந்து, 'போதும் இனி,வாணை வெளியாலை போவம்என்றான்.

வெளி வீதிகளிலும் தெருக்களிலும் சன சமுத்திரம் அலைமோதிப் புரண்டது.முத்தையும் வைரத்தையும் பொடியாக்கிச் சிதறிவிட்டது போன்ற அந்தஅகன்ற வெண்மணற் பரப்பிலே கன்னித் தாயின் உள்ளத்திலே அன்புவெள்ளம் பாய்வதுபோல நிலவு வெள்ளத்தை அள்ளிப் பெருக்கும் முழுச்சந்திரனின் கீழ் இரண்டொரு இரவுகளுக்கு வாழ்க்கைப் போரினால் ஏற்பட்டஅலுப்பைக் கொஞ்சம் தீர்த்துக் கொள்வதற்காக யாழ்ப்பாணத்தின் ஒவ்வொருமூலையிலிருந்தும் வந்து மனிதர்கள் நிரம்பியிருந்தனர்.

சர்பத் கடைக்காரன் பல வர்ணங்கள் கொண்ட போத்தல்களை ஒரு தடியால்அடித்து ஜலதரங்கம் வாசித்தான்மினுக்கு மினுக்கு என்று எரியும் ஒருகைவிளக்கின் அருகில் உட்கார்ந்துபொலிஸ்காரர்களின் காக்கியுடுப்புஎங்காவது தெரிகிறதா என்று கடைக் கண்ணால் பார்த்தபடி 'ஒண்டுக்குநாலு'க்காரன், 'ஓடிவா ஓடிவா – போனல் கடலைக் காசுவந்தால் தேத்தண்ணிக்காசுஎன்று ஓலமிட்டான்.

நல்லம்மாவும் செல்லையாவும் தம்மை அறியாமலே ஒரு வளையற்கடையின் முன்னால் போய் நின்றனர்விளக்கொளியில் சுடர்விடும்கண்ணாடி வளையல்களின் லாவண்யத்தில் நல்லம்மாவின் மனம் லயித்தது.செல்லையா அவளுக்கு ஐந்து ஜதை வளையல்கள் வாங்கிக் கொடுத்தான்ஒருகண்ணாடிப் பெட்டியில் அழகாக வளைத்து வைக்கப்பட்டிருந்த புதுமாதிரியான ஒரு பாதசரம் செல்லையாவின் கண்களை ஈர்த்தது.நெருக்கமாகப் பின்னப்பட்ட வெள்ளி வளையம் ஒவ்வொன்றிலிருந்துஒவ்வொரு வெள்ளிக் குண்டும் வேல்போன்ற ஒரு தகடும்தொங்கிக்கொண்டிருந்தனமுகப்பில் சிங்க முகம்அதுபோன்ற ஒரு பாதசரம்அவன் முன் ஒருபோதும் பார்த்ததில்லை... அவன் தன் மனைவியின்முகத்தைப் பார்த்தான்.

குவளை மலரைப் பழித்த அவளது விழிகள் 'காஸ்லைட்ஒளியில் அகலவிரிந்து பளபளத்தன.

அவளிடம் சாதாரணமான காற்சங்கிலிகூட இல்லைஉருண்டையாகவும்வழுவழுப்பாகவும் இருந்த அவளுடைய கணைக் கால்களில் இதுபோன்ற ஒருபாதசரத்தை அணிந்து பார்க்கவேண்டும் என்ற ஆசை செல்லையாவின்மனத்தில் தோன்றியதுஇந்த ஆசையோடு வேறு எத்தனையோ ரகஸ்யமானஇன்ப நினைவுகள் அவன் உள்ளத்தை மயக்கின.... அதை எப்படியும்வாங்கிவிட வேண்டும்அதன் விலை என்னவென்று கடைக்காரனைக்கேட்டான்.

'முப்பத்தைந்து ரூபாய்வேறு விலை கேட்க வேண்டாம்செல்லையாவின்மடியில் முப்பத்தொரு ரூபாய் தான் இருந்தது.

'இருபத்தைந்து தரலாம்சாமானைக் குடுத்துப்போடு'

'தம்பிஇது நாட்டுப் பெண்டுகள் போடுகிற கால்ச் சங்கிலிகள் அல்ல.ராசாத்தியின் கால்களுக்கேற்றதுஇந்தியாவிலிருந்து ஸ்பெஷலாய் வந்தது.உமக்கு இது சரிவராது ராசாகடைசி விலைமுப்பது ரூபாய்குடுப்பீரா?'

'சரி இந்தா....'

பாதசரங்கள் கைமாறிஅவ்விடத்திலேயே நல்லம்மாவின் பாதங்களில் ஏறின.

வெண் மணலில் கால்கள் புதைய இருவரும் மறுபடி கடைகளைச் சுற்றிவந்தனர்மிச்சமாக இருந்த ஒரு ரூபாயைக் கொண்டு ஒரு தையற் பெட்டியும்வாங்கிஆளுக்கொரு சர்பத்தும் குடித்தனர்அடுக்குப் பெட்டி வாங்கவில்லை.

நல்லம்மாவின் கால்கள் ஓய்ந்துபோயின. 'இனி வண்டிலடியில் போய்க்கொஞ்ச நேரம் இருந்திட்டுதிருவிழாப் பாத்துக்கொண்டு விடியப் போவம்'என்று இருவரும் முடிவு செய்தனர்செல்லையா அவளை ஒருசனக்கும்பலுக்கூடாகக் கையில் பிடித்து நடத்திக்கொண்டு சென்றான்கும்பல்கழிந்து கொஞ்சம் வெளியான இடத்திற்கு வந்ததும் நல்லம்மா திடீரென நின்றுதன் இடக்காலை உயர்த்திக் கையால் தடவிப்பார்த்தாள்.

'ஐயோகாற் சங்கிலியைக் காணேல்லை...'

'என்ன..... வடிவாய்ப் பார்!'

'ஒரு காலான் எங்கையோ மணலுக்குள்ளை கழண்டு விழுந்திட்டுது'

'கொஞ்சம் கவனமாய் வாறதுக்கென்னஉனக்கு ஆட்டம் மெத்திப் போச்சு.ஊதாரி நாய்!'

மறுகணம் செல்லையா தன் நாக்கைக் கடித்துக்கொண்டான்.

குண்டூசியால் துளைக்கப்பட்ட றப்பர் பலூனைப் போல நல்லம்மாவின்உற்சாகம் அப்படியே சப்பளிந்து போய்விட்டதுமூன்றுமாதமணவாழ்க்கையில் இதுதான் முதல் தடவையாக இப்படி ஏச்சுக் கேட்கவேண்டிவந்ததுஅதுவும் அம்பலத்தில் கூட்டிக்கொண்டு வந்துவிட்டு...! அவள்மனத்தில் கோபம்அவமானம்துயரம் ஆகிய எல்லா உணர்ச்சிகளும் ஒருங்கேதோன்றினகண்களில் நீர் மல்கியது.

'போதும்உங்களோட கோவிலுக்கு வந்த வண்டவாளம்இனி நடையைக்கட்டுவம்'

செல்லையா ஒரு படி கீழே இறங்கினான். 'நல்லம்மா ஆத்திரத்திலைசொல்லிப்போட்டன்இஞ்சை பார்....'

'வேண்டாம்இப்பவே போகவேணும்வண்டிலைக் கட்டுங்கோநீங்கள்வராட்டி நான் தனியாக் கால் நடையாய்ப் போறன்வழியிலை காறுக்குள்ளைவசுவுக்குள்ளை ஆப்பிட்டு நெரிஞ்சு போறன்'

செல்லையா மறுவார்த்தை பேசாமல் தன் திருக்கல் வண்டியை இழுத்து,மாட்டை அவிழ்த்துப் பூட்டினான்அவன் ஆண் மகன்.

மாட்டின் கழுத்தில் கட்டியிருந்த வெண்டயங்களின் தாளத்திற்கு ஏற்பக்கரடுமுரடான தெருவில் வண்டிச் சக்கரங்கள் 'கடக்கடக்என்று சப்தம்செய்தனயாரோ மணமகன் ஊர்வலம் வருவதற்காக விரித்துவிட்டநிலபாவாடை போல் வளைந்து கிடந்த தெருவின் இரு மருங்கிலும் நெடியபனைமரங்கள் மௌனப் பூதங்கள்போல் வரிசையாக நின்று ஆலவட்டம்பிடித்தன.

செல்லையா நாணயக் கயிற்றை இளக்கிவிட்டுமாட்டின் கால்களுக்கிடையில்தன் காலை வைத்தான்ரோசம் மிகுந்த அந்த இளம்காளை உன்மத்தம்கொண்டது போல் ஏற்காலைத் தன் ஏரியில் பட்டும் படாமலும்தாங்கிக்கொண்டு பறந்தது.... ஆத்திரத்தில் சிந்தனையில்லாமல் கூறியவார்த்தைக்கு இவ்வளவு கோபமாநிலத்தில் வியர்வை சொட்டகை கால்வலியினால் செயலற்றுப் போகபுகையிலைத் தோட்டத்தைக் கிண்டிப்பாடுபட்டவனுக்குத்தான் காசின் அருமை தெரியும்அவன் ஆண்பிள்ளை,இரண்டு வார்த்தை பேச உரிமையுண்டுஅதைப் பெண்பொறுத்துக்கொண்டால் என்ன...? கொண்டு வந்த காசெல்லாம்அவளுக்காகத்தனே செலவு செய்தான்...? தனக்கு ஒரு சுருட்டுக்கூட வாங்கிக்கொள்ளவில்லையே...

கால்களை வண்டியின் பின்புறம் தொங்கப் போட்டுக்கொண்டுவண்டியின் கீழ்ஓடும் தெருவைப் பார்த்தபடி நல்லம்மா சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.எவ்வளவு அற்ப காரியம்!

ஒரு கஷ;டமும் இல்லாமல் திருவிழாப் பார்த்துவிட்டுச் சந்தோஷமாகவந்திருக்கலாமே... எல்லாம் அவளுடைய பிழைதான்கணவன் இரண்டுவார்த்தைகள் கடுமையாகச் சொல்லிவிட்டால்தான் என்ன?

மாடு களைப்பினால் பலமாக மூச்சுவாங்கியதுநெல்லியடிச் சந்தியில்ஒருபூவரச மரத்தின் கீழ்ச் செல்லையா வண்டியை நிற்பாட்டினான்அந்தநடுயாமத்திலும் கோவிலுக்குப் போகிறவர்களுக்காகக் கடைகள் எல்லாம்திறந்து வைக்கப்பட்டிருந்தனசந்தையில் இரண்டு பெண்கள் அப்பம் சுட்டுக்கொண்டிருந்தனர்தேநீர்க் கடைகளில் தேநீர் கலக்கும் 'கட கடஎன்றசத்தத்தை விடமற்றெங்கும் ஆழ்ந்த நிசப்தம் குடிகொண்டிருந்தது.

செல்லையா மாட்டின் களை தீர அதைத் தடவிக் கொடுத்தபின்ஒரு தேநீர்க்கடை இருந்த பக்கமாகச் சென்றான்அவனுடைய மடியில் ஒரு ஐந்துசதம்தான் இருந்ததென்பது நல்லம்;மாவுக்குத் தெரியும்அன்று மத்தியானம்வீட்டில் சாப்பிட்டதுதான்அதன் பிறகு ஒன்றுமே இல்லை... 'ஐயோ அவருக்குஎவ்வளவு பசியாயிருக்கும்வாய் திறந்து ஒன்றும் சொல்லாமல்இருக்கிறாரே...' என்று அவள் அங்கலாய்த்தாள்அவளுடைய இதயம் இளகிக்கரைந்ததுதன் கணவனுடைய மனத்தின் பண்பும் அவன் தன்பால் வைத்துள்ளஅன்பின் ஆழமும் அவள் மனத்தில் தெளிவாயிற்றுவிவாகம்செய்துகொண்ட புதிதில் ஒருநாள் அவன் கூறிய வசனம் ஒன்றை அவள்ஞாபகப்படுத்திக் கொண்டாள். 'பெட்டை உனக்காக வேணுமெண்டால் என்ரைஉசிரையும் கொடுத்துவிடுவேன்நீ ஒன்டுக்கும் பயப்பிட வேண்டாம்'

அவளுடைய நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று உடைவது போல் இருந்தது... கண்கள்பொருமி உவர் நீரைப் பொழிந்தனதன் கணவனை ஒரு குழந்தைபோல்மடியில் வைத்துத் தாலாட்டி அவனுடைய உடலின் ஆயாசத்தையும் மனக்கவலையையும் போக்க வேண்டும்போல் அவளுக்குத் தோன்றியது....

செல்லையா வாயில் ஒரு சுருட்டுடன் வந்துமனைவியருகில் ஒருவெற்றிலை பாக்குச் சுருளை வைத்துவிட்டுஅவளுடைய முகத்தைப்பார்த்தான்... அவளுடைய கண்ணீர் தோய்ந்த முகத்தின் ஒளி அவனைஉலுக்கியதுதன்னுடைய நாற்பது ரூபா பெறுமதியுள்ள மாறுகரைச்சால்வையால் அவளுடைய கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்று அவன்மனம் அவாவியது.

'என்ன நல்லம்....'

நல்லம்மாவின் கண்ணீர் வடிந்த முகத்தில்நாணம் கலந்த ஒரு புன்னகைஅரும்பியது. 'ஒன்டுமில்லைஉங்களுக்குப் பசி இல்லையே?வெளிக்கிடுங்கோவென் கெதியாய் வீட்டை போவம்....'

செல்லையா அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டான்மாட்டின் வெண்டயம்மறுபடியும் பனந்தோப்புகளில் எதிரொலித்தது.

வல்லைவெளி!

இந்த அகன்ற பூமிப் பரப்பின் மகிமையை அறிந்தது போல இதுகாறும்வேகமாய் ஓடி வந்த மாடுதன் சுதியைக் குறைத்து அடிக்குமேல் அடி எடுத்துவைக்க ஆரம்பித்தது.

பேய்க் காற்று 'ஹோஎன்று சுழன்றடித்தது.

வானம் கவிந்துநாற்புறமும் நிலத்தைக் கவ்விக் கொண்டிருந்ததுவெளியின்நடுவே தேங்கி நின்ற நீரோடைஒரு அரக்கனது பிரம்மாண்டமான மார்பில்அணியப்பட்ட மரகதச் சரடுபோல் ஜ்வலித்ததுவான முகட்டின் உச்சியில்தொங்கிக் கொண்டிருந்த பளிங்குத் தகடுபோன்ற சந்திர தீபம் கீழேவிழுந்துவிட எத்தனிப்பது போலக் கனிந்து பிரகாசித்தது.

சின்ன மனிதர்களையும் பெரிய எண்ணங்கள் எண்ணும்படி தூண்டும் இந்தவெளிப் பிரதேசத்தில்தான் மனிதனின் ஜீவநாடி நவநாகரிக முறைகளால்நலிந்து படாமல் இன்னும் அந்தப் பழைய வேகத்தோடு அடித்துக்கொண்டிருக்கிறது.

எங்கோ வெகு தொலைவில் நிலத்தில் இருந்து இரண்டு அடி உயரத்தில்பொட்டிட்டது போன்ற ஒரு ஒளி தோன்றிக் கொஞ்சம் கொஞ்சமாகத் தெருவைநோக்கி நகர்ந்து வந்தது.... செல்லையா அதைக் கண்டதும் அதை நோக்கிக்காறியுமிழ்ந்தான்நல்லம்மா, 'அது என்ன?' என்று கேட்டாள்.

'ஆரோ மீன் பிடிகாரர் சூள்கொண்டு போகிறான்கள்என்று ஒரு பொய் சொல்லிமழுப்பிவிட்டுச் செல்லையா மாட்டின் வாலைப் பிடித்து முறுக்கினான்.

அந்த வெளிச்சம் தெருவைக் கடந்து வேகமாய் மற்றப் பக்கத்தில் போய் 'பக்'கென்று அவிந்தது....

செல்லையாவின் இடக்கை அவன் மனைவியின் இடையை நோக்கி நகர்ந்தது.

அவனுடைய மனம் வல்லை வெளிபோல் விரிந்ததுமெய்மறந்த ஒருமகிழ்ச்சி அவனை ஆட்கொண்டதுதன் குரலை எழுப்பி, 'ஞானகுமாரிஎன்றதேவகாந்தாரி ராகப்பாட்டைப் பாடினான்..... அவனுக்குப் பசியில்லைதாகம்இல்லைதூக்கம் இல்லைஎத்தனை கொள்ளிவாய்ப் பிசாசுகள் சேர்ந்தும்அவனை என்ன செய்துவிட முடியும்?.

நன்றி :ஈழத்து சிறுகதைகள்  

2 comments:

திருநந்தகுமார் said...

இலக்கியம் காலக்கண்ணாடி என்பார்கள். அந்தக்கால எம்மூர் வாழ்க்கையை அற்புதமாகப் படம்பிடித்துகாட்டிய சிறுகதை.
நாம் பெற்றோல்மாக்ஸ் விளக்கு என்பது தான் அந்த ’காஸ்லைட்’ போலும். நல்ல வருணனை.
மீள் பிரசுரத்திற்கு நன்றி

Ramesh said...

இலங்கையர்கோனின் நல்ல சிறுகதையை மீள் பிரசுரம் செய்த ஆசிரியர்குழுவிற்கு நன்றி. இப்படியான காலத்தால் அழியாத இலக்கியங்களை பிரசுரியுங்கள். தகழி சிவசுப்பிரமணியனின் நல்ல சிறுகதைகள் பல உள்ளது அதையும் மீள் பிரசுரம் செய்யலாம்