மெல்பேர்ன், சிட்னி நகரங்களில் நடைபெற்ற "தேசிய நினைவேந்தல் நாள்

.

ஈழத்தமிழர்கள் வாழ்வில் பேரழிவை ஏற்படுத்திய மே மாதத்தின் துயரநாட்களையும்அப்பேரிடர் மத்தியிலும் மண்ணோடு இணைந்துநின்று மரணித்த எம் உறவுகளையும்விடுதலைக்காக விலையான எம் தேசத்தின் புதல்வர்களையும் நினைவுகொள்ளும்நினைவேந்தல் நாள் நிகழ்வுகள் அவுஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பேண் நகரங்களில்நடைபெற்றுள்ளன.


மே மாதம் 18ம் திகதி மாலை 4.30 தொடக்கம் மாலை 6.30 வரை மெல்பேணில்நடைபெற்ற நினைவேந்தல் நாள் நிகழ்வில் 500 இற்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டுதமது அகவணக்கத்தை செலுத்தினர்.




விக்ரோறியாவின் தமிழர் அமைப்புக்கள் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்வில்அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல சமூக செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
 கிறின் கட்சியின் மத்திய மெல்பேண் நாடாளுமன்ற உறுப்பினர் அடம் பான்ற், கிறின்கட்சியின் மெல்பேண் மாநில செனட்டர் கலாநிதி ரிச்சர்ட் டி நட்டால், விக்ரோறியதொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லூக் டொனலன்ட், நாடு கடந்த தமிழீழ அரசின்பிரதிநிதி ஜனனி, வண.பிதா டீக்கன், லிபரல் கட்சியின் உறுப்பினரும், இந்திய தமிழ்சங்கத் தலைவருமான ஆஸ்டன் அசோக்குமார் மற்றும் ஏனைய அவுஸ்திரேலிய சமூகசெயற்பாட்டாளர்கள் வன் ரட், சூ போல்ற்றன் ஆகியோரும் உரையாற்றினர்முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம் என்ற பாட்டிற்கு இளைஞர் ஸ்ரீராம் சிறப்பாகபரதநாட்டியம் ஆடினார்அவருடைய தங்கை கீதா பூமிப் பாட்டுஎன்ற மைக்கல் ஜக்சனின்ஆங்கில பாட்டை உருக்கமாக பாடி, பலரதும் கவனத்கை ஈர்த்தார்.



நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட ஐநாவுக்கான கையெழுத்துபெறும் நடவடிக்கைகளிலும் மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்இத்துடன் இந்தமனிதப் படுகொலைகளைப் பற்றியும், போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ளவற்புறுத்தும் பதாதைகளும், படங்களும், உருவச்சிலைகளும் அங்கு பல்லின மக்களின்கவனத்தினை ஈர்க்கக்கூடிய வகையில் இருந்ததோடு, பல்லாயிரக்கணக்கானதுண்டுப்பிரசுரங்களும் அந்த வழியால் சென்ற பல்லின மக்களுக்கு தொண்டர்களினால்வழங்கப்பட்டது.
 இதேவேளை மாலை ஆறு மணிக்கு சிட்னியின் மாட்டீன் பிளேசில் ஆரம்பமானநினைவேந்தல் நாள் நிகழ்வில் 600 இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டுமுள்ளிவாய்க்காலில் விதையான உறவுகளுக்கு தமது அகவணக்கத்தை செலுத்தினர்.


முன்னாள் நியுசவுத் வேல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வேர்ஜினியா ஜட்ஜ் (Virginia Judge)கிறீன் கட்சியைச் சேர்ந்த பெடரல் செனட்டர் லீ றேனான் (Lee Rhiannonநியு சவுத் வேல்ஸ்நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் சூபிறிஜ் (David Shoebridgeநாடுகடந்த தமிழீழ அரசின்பிரதிநிதி பாலசிங்கம் பிரபாகரன் மற்றும் தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த சேரன்ஆகியோர் உரையாற்றினர்.
 இதேவேளை மதியம் முதல் மாலை ஆறு மணி வரை தமிழ் இளையோர் அமைப்பினர்சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பான துண்டுப்பிரசுரங்களை, இந் நிகழ்விற்காகபிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட சிறப்பு ஊர்தியில் சென்றும் விநியோகித்தனர். 3000இற்கும் மேற்பட்ட ஏனைய சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு இத்துண்டுப்பிரசுரங்கள்விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நினைவேந்தல் நாள் நிகழ்வுகளில் கலந்துகொண்டோர் சிறிலங்கா அரசின்போர்க்குற்றங்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசை உறுதியான நடவடிக்கைஎடுக்குமாறு கோரியதுடன் அண்மையில் சிறிலங்கா கடற்படைத்தளபதி ஒருவரைதூதுவராக ஏற்றுக்கொண்டமைக்கும் தமது அதிருப்தியையும் தெரிவித்தனர்.
 மரணித்துப்போன எம்முறவுகளை நெஞ்சில் நிறுத்தி குரலடங்கிப்போயுள்ள தாயகமக்களின் குரலாக, பல நூற்றுக்கணக்கான தமிழ் உறவுகள் பெருமளவில் திரண்டு வந்து, முள்ளிவாய்க்காலில் வித்தாகிப்போன எம்மக்களையும் எமது போராளிகளின் கனவைநனவாக்க அனைவரும் தொடர்ந்தும் செயற்படவேண்டும் என கேட்டுக்கொண்டதோடுதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற உறுதியுரையுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.


மெல்பேர்ண் தமிழ் ஊடகம்.

அவுஸ்திரேலியா.

No comments: