உலக சாதனை விருது பெற்ற உலகின் மிகப்பெரிய ஆலயம்.
உலகின் மிகப்பெரிய ஆலயம் என்று கின்னஸ் விருதை பெற்ற அக்ஷர்தம் என்ற ஆலயம் டெல்லியில் யமுனா நதிக்கரையருகில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலயம் முழுக்க முழுக்க மார்பிள் கற்கள் மற்றும் மரக்கட்டைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஆலயத்தின் சிற்பங்களை போன்று அக்ஷர்தம் ஆலயத்தின் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.அக்ஷர்தம் ஆலயத்தின் மொத்த பரப்பளவு 32 ஏக்கர். 11.000 பணியாளர்களைக் கொண்டு சுமார் 5 ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தை ஒரு நாளைக்கு பார்வையிடுபவர்களின் எண்ணிக்கை 1,00,000.
No comments: