உலகச் செய்திகள்

 .
*சிங்கப்பூரின் பிரதிப் பிரதமராக யாழ்ப்பாண வம்சாவளித் தமிழன்!
* பாகிஸ்தானில் இராணுவ காவலரண் மீது அமெரிக்கா  தாக்குதல்
* சர்வதேச நாணய நிதியத் தலைவர் பதவியை இராஜினாமா செய்தார் 

பாகிஸ்தான் பிராந்தியத்தில் மீண்டும் நேட்டோவின் தாக்குதல்

நேட்டோவுக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று பாகிஸ்தானில் மேற்கொண்ட தாக்குதலில் இரு படைவீரர்கள் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியருகே வடக்கு வஸிரிஸ்தான் பிராந்தியத்தில் டற்றா கெல் பகுதியில் அமைந்திருந்த பாகிஸ்தானிய இராணுவக் காவலரண் மீது குறித்த ஹெலிகொப்டர் தாக்குதல் நடத்தியுள்ளது.

மேலும் அல்ஹைடா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் பாகிஸ்தானில் மீண்டும் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

நேட்டோவால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலினைக் கண்டித்துள்ள பாகிஸ்தான் தனது நாட்டின் இறைமையை மீறும் செயலாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த செப்டெம்பர் மாதம் ஆப்கõனிய எல்லைப்பகுதியருகே நேட்டோ விமானங்கள் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானிலுள்ள நேட்டோப் படைகளுக்கான விநியோகப் பாதையினை பாகிஸ்தான் மூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வட வஸிரிஸ்தான் பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் 7 போராளிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்தே இக் ஹெலிகொப்டர் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பி.பி.சி.

சர்வதேச நாணய நிதியத் தலைவர் பதவியை இராஜினாமா செய்தார் ஸ்ட்ரோஸ்-கான் _

5/19/2011
சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் டோமினிக் ஸ்ட்ரோஸ்-கான் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

பாலியல் புகாரின் பேரில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக அவர் மீது புகார்கள் எழுந்த வண்ணமுள்ளன.

இந்நிலையில் இன்று நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஸ்ட்ரோஸ்-கான் தனது பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை அமெரிக்காவில் உள்ள ஜோன் எப். கெனடி விமானநிலையத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி

பாகிஸ்தானில் இராணுவ காவலரண் மீது அமெரிக்க ஹெலிகொப்டர்கள் தாக்குதல்
பாகிஸ்தானுக்குள் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க ஹெலிகொப்டர்கள் நடத்திய தாக்குதலில் 2 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நேட்டோ படையின் அமெரிக்கப் பிரிவினர், ஆப்கானிஸ்தான் எல்லையான வடக்கு வசீர்ஸ்தான் பகுதியில் பாகிஸ்தானின் இராணுவ காவலரண்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஹெலிகொப்டர்கள் குண்டு மழை வீசியதில் இருபாகிஸ்தான் வீரர்கள் காயமடைந்தனர்.

ஹெலிகொப்டர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் தான் பதிலுக்கு தாக்குதல் நடத்தியதாக நேட்டோ கூறியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியது பாகிஸ்தான் இராணுவத்தினர் என்றும் உறுதியாகியுள்ளது.

மிரான்ஷா என்ற இடத்தில் வச்சா பிபி என்ற இடத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இப்பகுதியில் பாகிஸ்தான் இராணுவ காவலரண்கள் இருந்தாலும் அந்த மாகாணம் முழுக்க முழுக்க பழங்குடியினரின் ஆட்சியில் உள்ளது. இங்கு பாகிஸ்தான் நாட்டு சட்ட திட்டங்கள் செல்லுபடியாவதில்லை. அது ஒரு சுயேச்சையான மாகாணமாகும்.

இதனால் இப்பகுதி, தீவிரவாதிகளின் சொர்க்கமாக திகழ்ந்து வருகிறது. இதற்கிடையே அமெரிக்கப் படையினர் பாகிஸ்தான் வான் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நன்றி வீரகேசரி

சிங்கப்பூரின் பிரதிப் பிரதமராக யாழ்ப்பாண வம்சாவளித் தமிழன்!

இலங்கையின் யாழ்ப்பாணத்து வம்சாவளித் தமிழரான தர்மன் சண்முகரட்ணம் சிங்கப்பூர் நாட்டின் பிரதி பிரதமராக நேற்று முன் தினம் நியமிக்கப்பட்டு உள்ளார். சிங்கப்பூர் நாட்டின் முன்னணி அரசியல்வாதிகளில் ஒருவரான தர்மன் சண்முகரட்ணத்தின் மூதாதையர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். தர்மன் சண்முகரட்ணத்தின் அப்பப்பா ஊரெழு கிராமத்தைச் சேர்ந்தவர்.

தர்மன் சண்முகரட்ணம் 1957 ஆம் ஆண்டு பிறந்தவர் . 2001 ஆம் ஆண்டு தொடக்கம் முழு நேர அரசியல் ஈடுபட்ட இவர் ஏராளமான அமைச்சுப் பதவிகளை வகித்து வந்திருக்கின்றார். 2007 ஆம் ஆண்டு தொடக்கம் நிதி அமைச்சராக உள்ளார்.

நேற்று முன் தினம் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின்போது இவரது நிதி அமைச்சர் பதவியில் மாற்றம் செய்யப்படவில்லை. இவர் 2005 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்து இருந்தார். இவர் ஒரு பொருளாதார நிபுணர் என்பதும் குறிப்பிடத்தக்கது

நன்றி jaffnawin

No comments: