ரஜினிக்கு என்னதான் பிரச்சினை... ஒரு முழு ரிப்போர்ட்!

 .
புதன், 18 மே 2011 09:29

ரஜினிக்கு என்னதான் பிரச்சினை என்று நாடு முழுவதிலும் கேள்விகள் எழ ஆரம்பித்துவிட்டன.ரஜினி ஆரம்பத்தில் அஜீரணக் கோளாறு, நீர்ச்சத்து குறைவு மற்றும் சோர்வு போன்றவற்றால் அவதிப்பட்டார்.

இது அவர் ராணாவுக்காக 15 கிலோ வரை எடை குறைத்து ஸ்லிம்மாக மேற்கொண்ட கடும் உடற்பயிற்சி மற்றும் டயட்டின் விளைவு. அதன் தொடர்ச்சியான விளைவுகளாக, நுரையீரலில் நோய்த் தொற்று மற்றும் இரைப்பை அழற்சி போன்றவை அவரைச் சற்று கடுமையாக பாதித்துள்ளன.

நுரையீரலில் தேங்கும் திரவம்


ரஜினிக்கு நீண்ட காலமாக புகைப் பழக்கம் இருப்பதால், நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அவரது அண்ணன் சத்யநாராயணாராவ் கெய்க்வாடும் உறுதிப்படுத்தியுள்ளார். இதனை சரிசெய்ய ஆக்ஸிஜன் மூலம் நோய் எதிர்ப்புக்கான மருந்துகள் செலுத்தப்பட்டு, அந்தப் பகுதியில் உள்ள நோய்த் தொற்றை அடியோடு நீக்கி வருகின்றனர்.

இந்தப் பிரச்சினை காரணமாக அவருக்கு நுரையீரலுக்கும் இதயப் பகுதிக்கும் இடையே திரவம் (Fluid) அதிகளவு தேங்குகிறது. இந்த திரவம் நுரையீரல்களை அழுத்தி மூச்சு விட சிரமப்பட வைக்கும்.

மேலும் ஒரு சிறிய அறுவைச் சிகிச்சை மூலம் தேங்கும் திரவத்தை பெருமளவு அகற்ற முயன்று, அதில் நல்ல வெற்றியும் கிடைத்துள்ளது மருத்துவர்களுக்கு. இந்த சிறிய அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு ரஜினி தெம்பாகியுள்ளார்.

சிறுநீரகம் செயல்படுவதில் சிக்கல்

நுரையீரலில் இத்தனை பிரச்சினைகள் இருப்பதால் சிறுநீரகங்களின் செயல்பாட்டில் ஒழுங்கின்மை காணப்படுகிறதாம். காலில் வீக்கம் ஏற்பட முக்கிய காரணம் இதுவே.

ஆனால் இது மிக ஆரம்ப நிலை என்பதால் சீக்கிரமே சரிப்படுத்திவிட முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நுரையீரல் பிரச்சினை சரியாகிவிட்டாலே, சிறுநீரக ஒழுங்கின்மையும் ஓரளவு கட்டுக்குள் வந்துவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

புற்றுநோய் அறிகுறி இல்லை

இப்போது ரஜினியின் திசுக்கள் சோதனை முடிவும் வந்துவிட்டன. ரஜினிக்கு புற்று நோய்க்கான அறிகுறிகள் இருக்கிறதா என்பதைக் கண்டறிய நடத்தப்பட்ட சோதனை இது. ஆனால் அவருக்கு அப்படி எந்த அறிகுறியும் இல்லை என்பது உறுதியாகத் தெரிந்துள்ளது.

உற்சாகத்தில் ரஜினி - மருத்துவமனை அறிக்கை

ராமச்சந்திரா மருத்துவமனையின் இரண்டாவது செய்திக் குறிப்பில், பொது மற்றும் சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் ரஜினிக்கு இப்போது கிசிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நலத்தை முழுமையாக கண்காணிப்பதற்காக தொடர்ந்து மருத்துவமனையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நூரையீரலில் சிறு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட பிறகு ரஜினி உற்சாகமாக இருக்கிறார். அவருக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது முக்கிய உறுப்புகள் அனைத்தும் இயல்பாக செயல்படுகின்றன.

பார்வையாளர்களை சந்திப்பதை வெகுவாக குறைத்துக் கொள்ளும்படி ரஜினிக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவரை முழு ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவ நிபுணர்கள், என்று கூறப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்வது எப்போது?

நுரையீரல் பிரச்சினை முற்றாக சரியாகிவிட்டால் வெளிநாட்டுக்குச் செல்ல தேவையில்லை என்கிறார்கள். சிறுநீரகக் கோளாறுகளை இங்கேயே சரி செய்துவிட முடியும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி tamilcnn .com

சிறு நீரக கோளாறு::ரஜினிக்கு டயாலிசிஸ் சிகிச்சை - மருத்துவ நிபுணர்கள் விளக்கம்





தமிழ்த் திரைப்பட ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படும் ரஜினிகாந்துக்கு கடந்த மாதம் 29-ந்தேதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் மயிலாப்பூரில் உள்ள செயிண்ட் இசபெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


சிகிச்சை முடிந்து அன்றே வீடு திரும்பினார். ரஜினிகாந்துக்கு சுவாசப் பாதை நோய் தொற்று மற்றும் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக இசபெல் மருத்துவமனை டாக்டர்கள் விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் 4 நாட்கள் கழித்து கடந்த 4-ந்தேதி ரஜினிகாந்த் மீண்டும் இசபெல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் மிகவும் சோர்வாக காணப்பட்டார்.

ராணா படத்தில் மாறுபட்ட வேடங்களில் நடிக்க திட்டமிட்டுள்ள ரஜினி, அதில் குறிப்பிட்ட ஒரு வேடத்துக்காக உடல் எடையை கணிசமான அளவுக்கு குறைத்ததாக தெரிகிறது. மேலும் தண்ணீர் குடிக்கும் அளவும் குறைந்து போனதாம். இத்தகைய காரணங்களால் ரஜினிக்கு அதிகப்படியான சோர்வு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. ரஜினிக்கு உண்மையில் என்ன உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்ற தகவலை, அவரது குடும்பத்தினர் தெரிவிக்காததால் மாறுபட்ட பல வதந்திகள் வெளியானது. இதனால் ரஜினி ரசிகர்களிடம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (மே 13-ந் தேதி) ரஜினி உடல் நிலை குறித்து தமிழகம் முழுவதும் திடீர் பரப்பு ஏற்பட்டது. அன்று அவர் போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவரது ரசிகர்களிடம் பரபரப்பு அதிகரித்தது. அ.தி.மு.க. புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவுக்கு வந்த குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி, சந்திரபாபு நாயுடு ஆகியோர் போரூர் மருத்துவமனைக்கு சென்று ரஜினியை பார்த்து விட்டு வந்து அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக நிருபர்களிடம் கூறினார்கள். இதனால் ரஜினி ரசிகர்கள் சற்று ஆறுதல் அடைந்தனர்.

ரஜினிக்கு கடந்த 14, 15-ந் தேதிகளில் அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்பட்டது. 61 வயதாகும் அவருக்கு நுரையீரலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது நெஞ்சில் அதிகப்படியான நீர்க்கோர்ப்பு ஏற்பட்டிருந்தது. அந்த நீர்க்கோர்ப்பு திரண்டு நுரையீரலை நெருக்கியதால் திடீர், திடீரென ரஜினி மூச்சுவிட சிரமப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கடந்த திங்கட்கிழமை ரஜினியின் நெஞ்சில் இருந்த நீர் கோர்ப்பு அகற்றப்பட்டது. நீர்கோர்ப்பு பிரிக்கப்பட்டாலும் ரஜினியின் சுவாசப்பாதை நோய்த் தொற்று குறையவில்லை. இதனால் டாக்டர்கள் அவருக்கு செயற்கை சுவாசம் அளித்தனர். ஆன்டிபயாடிக் மருந்துகளும் கொடுக்கப்பட்டன.

இந்த நிலையில் ரஜினியின் சுவாச உறுப்புகள் தொடர்ந்து சரிவர இயங்காத காரணத்தால் அவரது சிறுநீரகங்கள் மற்றும் இதய உறுப்புகளின் செயல்பாடுகளில் சற்று மந்தம் ஏற்பட்டது. உடனடியாக ரஜினிக்கு ரத்தப் பரிசோதனை, சிறுநீரகங்கள், நுரையீரல் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை மதிப்பீடு செய்ய அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்த பரிசோதனைகளின் அடிப்படையில் ரஜினிக்கு நுரையீரல், சிறுநீரகங்கள், இதயம் உள்ளிட்ட சில உறுப்புகளுக்கு ஒருங்கிணைந்த சிகிச்சை கொடுப்பது மிகவும் அவசியம் என்று டாக்டர்கள் தீர்மானித்தனர். இதையடுத்து ரஜினிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. நேற்று அவர்கள் ரஜினிக்கு தீவிர சிகிச்சையைத் தொடங்கினார்கள்.

இதற்காக ரஜினி ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். முதல் கட்டமாக ரஜினி எந்தவித திணறலும் இல்லாமல் மூச்சு விடுவதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சை காரணமாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக நேற்றிரவு டாக்டர்கள் தகவல் வெளியிட்டனர். என்றாலும் நுரையீரல் செயல்பாடு சீராகாததால் நேற்று இரவு ரஜினியின் சிறுநீரகங்கள் ஒத்துழைக்கவில்லை. இதனால் ரஜினிக்கு செயற்கை முறையில் ரத்தத்தை சுத்திகரிக்கச் செய்யும் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று நள்ளிரவு ரஜினிக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது: ரஜினியின் சிறுநீரகங்கள் சீராக இயங்கவில்லை. எனவே டயாலிசிஸ் சிகிச்சையை தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. டயாலிசிஸ் சிகிச்சையை ஒத்தி வைக்கவும் முடியாது. சிறுநீரகங்கள் சரிவர இயங்காத காரணத்தால் ரஜினியின் உடம்பில் ரத்த ஓட்டம் குறித்து ஆய்வு செய்ய வேண்டியதிருந்தது. மேலும் அவரது உடம்பில் சோடியம், புரோட்டீன் அளவு குறைந்து போனது. எனவே ரஜினிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறோம். இவ்வாறு டாக்டர்கள் கூறினார்கள்.

ரஜினிக்கு டயாலிசிஸ் சிகிச்சை தொடர்ந்து கொடுக்க வேண்டிய திருக்குமா என்று கேட்கப்பட்டது. அதற்கு டாக்டர்கள் கூறுகையில், அதுபற்றி இப்போது சொல்ல இயலாது. சுவாசப்பாதை நோய்த் தொற்று குணம் அடைந்து விட்டால் ரஜினியின் சிறுநீரகங்கள் நல்ல நிலைக்கு திரும்பி விடும் என்று நம்புகிறோம் என்றார்கள். இன்று (வியாழன்) காலை நிலவரப்படி ரஜினியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் கூறினார்கள். ரஜினி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள தகவல் வெளியானது.

போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு விட்டனர். சில ரசிகர்கள் கதறி அழுதனர். ரஜினியை பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் கோஷமிட்டனர். இதையடுத்து போரூர் மருத்துவமனை முன்பு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் 7-வது மாடிக்கு பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமச்சந்திரா மருத்துவ மனையில் உள்ள இதர பிரிவு டாக்டர்கள், ஊழியர்கள் கூட 7-வது மாடிக்கு செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ரஜினி விரைவில் நலம் பெற வேண்டி தமிழ்நாடு முழுவதும் அவரது ரசிகர்கள் சிறப்பு வழிபாடுகளில் ஈடுட்டுள்ளனர்.
குசும்பு இணையம்

நன்றி jaffnawin.com


ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்!

வியாழன், 19 மே 2011
ரஜினி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி வந்தது முதல் கவலையாக இருந்தது…ரஜினி ஜாதகத்தை பார்த்தால் என்ன என்று தோன்றியது..


அதன் முடிவுகள் என்னை அதிரவே செய்தன….ரஜினி ரசிகர்கள் மனம் தளரவோ..கோபப்படவோ வேண்டாம்..நான் கற்ற ஜோதிடத்தின் பார்வையில்,ஒரு ஜோதிடனாக…

இந்த பதிவை எழுதியிருக்கிறேன்…ரஜினி ரசிகனாக அல்ல..உங்கள் மனம் வருந்தும்படி இப்பதிவில் நிறைய தகவல்கள் இருக்கின்றன…அதற்காக உண்மையில் நான் வருந்துகிறேன்….ரஜினி ரசிகனாக!.

ரஜினி ஜாதகம்;

தேதி;12.12.1950
நேரம்;11.45 இரவு.
இடம்;பெங்களூர்
ராசி;மகரம்
நட்சத்திரம்;திருவோணம்

ரஜினி ஜாதக கட்டம்;



ரஜினி ஜாதகம் மிக சக்தி வாய்ந்தது..தெய்வ அருள் நிரம்பியது…ஐந்தாம் இடத்தில் சுக்கிரன்,புதன் இணைந்து ஸ்ரீவித்யா யோகம் அமைந்துள்ளது..இது லட்சுமி,சரஸ்வதி யோகம்…அருள் ஒருங்கே அமைவதாகும்..இதன் மூலம் செல்வம்,ஞானம் இரண்டுமே கிட்டும்…. 4க்குடையவன் செவ்வாய் வலுத்ததால் நிறைய சொத்துக்கள் சேர்க்கையும் உண்டானது….7ல் குரு நின்றதால் புலிப்பாணி பாடலின் படி,சகல தோசங்களும் நிவர்த்தி…..

7க்குடையவன் ஞானக்காரகன் கேதுவுடன் கூடியதால்…ஞானக்குருவாக மனைவி அமைந்தார். சுக்கிரன்,புதன் இணைவு கலைத்துறையின் உச்சம் தொட்டார்…அதுவும் வெற்றி ஸ்தானமாகிய ஐந்தாம் இடத்தில் இணைவு.இருவரும் இணைந்து 11 ஆம் இடத்தில் பார்வை செய்ததால் உலகப்புகழ் .இரண்டுக்கு அதிபதிக்கு இரண்டில் செவ்வாய் உச்சம்..பணத்துக்கு மேல்..பணம்..புகழுக்கு மேல்..புகழ்….

7ல் குரு நின்றதால் மனைவி வந்தப்பிறகுதான் மனிதன் ஆனார்….அவ்வளவு கெட்டப்பழக்கங்களுக்கு காரணம் நாலில் சூரியன்..இரண்டில் சனி,கேது…ஆறில் செவ்வாய்….சந்திரன்….. ஜாதகத்தின் இன்றைய நிலை; எண்ணிய ஒண்ணின் கோள் ஆறாமிடத்து கோளுடன் உன்னிய ராகு கேது ஒரு தளத்தில் நிற்க,கண்டம் தன்னுடல் சுகமில்லாமல் சஞ்சல மனதனாகி மின்னலாய் வியாதியஸ்தன் என விளம்பலாமே..! -

துய்ய கேரள ஜோதிடம் என்னும் பழைய ஜோதிட நூலில் இருந்து…. இந்த பாடல் சொல்லும் விளக்கம் ரஜினி ஜாதகத்திற்கு பொருந்தி போகிறது. ரஜினிக்கு இப்போது சனி திசையில் சந்திர புத்தி வரும் 2.7.2011 வரை நடக்கிறது. இந்த பாடலின் படி ஆறாம் அதிபதியுடன் ராகுவோ,கேதுவோ சேர்ந்திருந்தால் ,6,8,12 க்குடையவன் திசையில் மின்னலாய் நோய் தாக்கி முடங்குவான் என்கிறது…. ரஜினி ஜாதகத்தில் ஆறாம் அதிபதி சனியுடன் கேது இணைந்து இரண்டாம் இடத்தில் உள்ளது….

நடப்பது ஆறுக்குடையவன் திசை..நடப்பது 12க்குடைய விரயாதிபதி சந்திரன்..புத்தி. சனி-முடக்கும் கிரகம் ஆறாம் இடம்-வயிறை குறிக்கிறது…நோயை குறிக்கிறது… இவர் ஜாதகத்தில் ஆறாம் இடத்தில் செவ்வாய் உள்ளது…இது ரத்தம் மற்றும் மர்ம உறுப்பை குறிக்கிறது…

ஆறில் உள்ள செவ்வாய் மற்றும் சந்திரன் தனது புத்தியில் இந்த உறுப்புகளை முடக்குகிறது..சிறுநீரகம் பாதிப்பு கிட்னி பாதிப்பையும் குறிக்கும்…. சந்திரன் விரயாதிபதி மட்டுமல்ல..உடல்,மனக்காரகன்…ஆக உடலும் மனமும் முடங்கி இருக்கிறது. பாதிப்பு;சிறுநீரகத்தில்….காரணம்..

செவ்வாய் ஆறில். ரஜினி இப்போதைய நிலை; கோட்சாரப்படி சனி கன்னி வீட்டில் இருக்கிறது…ரஜினி பிறக்கும் போது சனி கன்னியில்தான் இருந்தது!…சனி ஒரு முறை சுற்றி தன் ஸ்தானத்திற்கு வர முப்பது வருடம் ஆகும்…இது இரண்டாம் சுற்று…

ஒரு தீய கிரகம் ஒரு ஜாதகன் பிறந்த ஸ்தானத்தில் எங்கு இருக்கிறதோ..அங்கு மீண்டும் வரும்போதெல்லாம் ஒரு கெடுதல் நடந்தே தீரும் என என் குரு சொல்லியிருக்கிறார்..அதன்படி இந்த ஜாதகத்திற்கு பிறந்தபோது இருந்த இடத்திற்கு வந்திருக்கிறார்…

இது கெடுதலே தரும்…. ரஜினி மருத்துவமனையில் எப்படி இருக்கிறார்; ஜோதிட பாடல் குறிப்பிடுவதை பார்த்தால் மின்னலாய் நோய் தாக்கி,வியாதியஸ்தன் ஆவான்…தன்னுடல் சுகமில்லாமல்,சஞ்சல மனதனாகி என்கிறது..ரஜினி முடங்கி இருக்கிறார்…அவர் சிரித்து பேசினார் என்பதும்,டிஃபன் சாப்பிட்டார் என்பதும் பொய்.அவர் தாள முடியாத வயிற்று வேதனையில் இருக்கிறார்..

மனதில் அதிக கவலையும் குழப்பமும் இருக்கிறது…..அதன் படி ரஜினி மருத்துவமனையில் மோசமான நிலையில்தான் இருக்க வேண்டும். கிட்னி பாதிப்பிற்காக அவசர சிகிச்சை நடப்பதாக சொல்கிறார்கள்…மருத்துவமனையில்.. சந்திர புத்தி முடியும் வரை கண்டம் என்கிறது ஜாதகம்.இதை வேதனையுடன்தான் சொல்கிறேன்.

நோய் அகலும் என ஜாதக கணிப்பு சொல்ல வில்லை..அதிகம்தான் ஆகிறது….கேட்டை..பூரட்டாதி,உத்திரட்டாதி,திருவாதிரை,மிருகசிரீடம் நட்சத்திரங்கள் இவருக்கு கெடுதல் செய்யும் நட்சத்திரங்கள். நடந்து முடிந்த குருப்பெயர்ச்சி இவருக்கு சாதகம் இல்லை.இவர் லக்கினபடி…குரு…அஷ்டமாதிபதி..கெட்டவன்..

இவர் ஜாதகத்தில்,உயிர் ஸ்தானமாகிய லக்கினத்தை இப்போது பார்ப்பது..சரியில்லை…வரும் ஐப்பசி மாதம்…சனிப்பெயர்ச்சி தாண்டிவிட்டால் உயிருக்கு கண்டம் இல்லை..ஆனால் சிகிச்சை தொடரும்..அதிக செலவில்…

நன்றி tamilcnn .com








No comments: