அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு இந்தியா காட்டும் அக்கறை

.
தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விவகாரம் முன்னரைப் போன்று அதிக ஆர்வம் தீவிரம் கொண்டதாக இல்லாத நிலையில் அவ்வப்போது பேசப்படும் விடயமாக மாறியுள்ளதையே காணமுடிகின்றது. எவ்வாறெனினும் தேசிய இனப்பிரச்சினைக்கு உறுதியானதும் இறுதியானதுமான அரசியல் தீர்வு ஒன்றின் அவசியத்தையும் புறந்தள்ளிவிடமுடியாது.

தேசிய இனப்பிரச்சினையின் பின்னணியிலேயே இந்த நாடு பாய மனித அவலங்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்ததுடன், நாட்டில் இரத்த ஆறு ஓடவும் வழிவகுத்தது. அதுமாத்திரமின்றி அதன் அவலங்களை தொடர்ந்தும் சுமந்தவர்களாகவே இன்றும் தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

தமிழ் மக்களின் அபிலாஷைகளை புறிந்து, தேசிய இனப்பிரச்சினைக்கு சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப்பரவலாக்கலுடன் கூடிய தீர்வு அவசியம் என்பதனை இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் பலவும் அவ்வப்போது வலியுறுத்திவருகின்றன.

இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் ஈடுபாடும் விசேடமாக தமிழகத்தின் கசனையும் தொடர்ந்து இருந்துவருவது குறிப்பிடத் தக்க ஒன்றாகும். அரசியல் தியான வரலாற்றுத் தொடர்புகளுடன் பூகோள தியாகவும் இலங்கைக்கு அணித்தான நாடாக இந்தியாவே இருந்துவருவதால் பிராந்திய நலன் கருதியும் பரஸ்பரம் இரு நாடுகளும் “ஓர் இணக்கமான' அணுகுறையை சகல விடயங்களிலும் கடைப்பிடித்து வருவதை தெளிவாக காணமுடிகின்றது.

இவ்வாறன போக்குகள் அரசியல் தியாக ஏற்ற இறக்கங்களை கொண்டிருந்தபோதிலும் இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியா முற்றுமுழுதான பார்வையாளர் போக்கை தொடர்ந்தும் கடைப்பிடிக்கும் சாத்தியம் எந்தளவு தூரம் உள்ளது என்பது இலங்கை விவகாரத்தில் இதர நாடுகளின் ஆர்வம் எந்தளவு தூரம் “ஊடறுத்துள்ளது' என்பதனைப் பொறுத்தே அமையும் என்பதும் அரசியல் ஆய்வாளர்க ளின் கருத்தாக இருந்து வருகின்றது.

வரலாற்றை சற்று புரட்டிப்பார்த்தால் இலங்கை தமிழர் விவகாரத்தில் அன்னை இந்திரா காந்தி மிகுந்த அக்கறை காட்டிய ஒருவராக விளங்கினார். 1983ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இனக் கலவரத்தையடுத்து இந்திய லோக் சபாவில் இந்திரா காந்தி அம்மையார் உரையாற்றுகையில் கண்டிக்கவும் செய்தார். தமிழ் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளை உலகறியச் செய்த பங்கு அன்னை இந்திராவையே சார்ந்ததாகும். அவரின் படுகொலைக்கு பின்னர் பிரதமராக பொறுப்பேற்ற ராஜீவ் காந்தி இலங்கை விவகாரத்தில் அதேயளவு கசனையை கொண்டவராகவே காணப்பட்டார்.

இந்நிலையில், 1985 ஆம் ஆண்டு டில்லி யில் கடமையாற்றிய இலங்கைத் தூதுவர் பேர்னாட் திலகரட்னவை அழைத்து, தான் இலங்கை இனப்பிரச்சினையை தீர்க்க விரும்புவதாக ராஜீவ் காந்தி தெவித்திருந்தார்.

அது தொடர்பில் ஜெயவர்த்தனாவை சந்திக்க விரும்புவதாகவும் அவர் கூறினார். அர சியலில் முதிர்ச்சியும் ராஜதந்திரம் கொண்டவராக விளங்கிய ஜே.ஆர். ஜெயவர்த்தன அதனை தவிர்த்தார். இந்நிலையில், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சராக இருந்த பி. சிதம்பரம், வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக இருந்த நட்வர் சிங் ஆகி யோரை ராஜீவ் காந்தி அனுப்பி பேச்சுக்களை நடத்தினார்.

இவ்வாறான அழுத்தங்களின் பின்னணியில், 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன ஏற்றுக்கொண்டதுடன், இரு நாட்டுத் தலைவர்களும் கைச்சாத்திட்டனர். ஒரு வகையில் அன்று வடக்கையும் கிழக்கையும் ஒரு நிர்வாக அலகாக இணைப்பதற்கு காலஞ்சென்ற பிரதமர் ராஜீவ் காந்தியின் பங் களிப்பு மகத்தான ஒன்றாகவே இருந்தது.

எனினும், 1991ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற ராஜீவ் படுகொலையைத் தொடர்ந்து, இலங்கை விவகாரம் புதிய தொரு பமாணத்தை அடைந்ததுடன் இந்திய மத்திய அரசின் போக்குகளிலும் மாற்றங்கள் ஏற்பட வழிவகுத்தது.

எவ்வாறு இருந்தபோதிலும், தேசிய இனப் பிரச்சினையின் பின்னணியில் உருவான யுத்தம் இன்று மனிதப் பேரவலங்களுக்கும் துயரங்களுக்கும் வழிவகுத்த நிலையில் முடிவுக்கு வந்துள்ளது.

இந்தவிதமான வரலாற்று ரீதியான அனுபவங்களின் பின்னணியில் தேசிய இனப்பிரச் சினை தமிழ் மக்களுக்கு எவ்வாறான அனுகூலங்களுடன் தீர்க்கப்படும் என்ற எதிர் பார்ப்பு எழுந்துள்ளது. இதேவேளை அரசியல் தீர்வுக்கான பேச்சுக்கள் தொடர்பில் இந் தியா மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக இலங்கைக்கõன இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்த் தெவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினரை கொழும்பில் இந்திய இல்லத்தில் திங்களன்று இரவு சந்தித்துப் பேசிய இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்த், அரசியல் தீர்வு தொடர்பில் இலங்கை அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சு வார்த்தை நடத்துவது குறித்து இந்தியா மிகுந்த அக்கறை கொண் டுள்ளது. பிரச்சினைக்கு உய அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இனப்பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் விரைவில் பேச்சுக்களை நடத்தும் என எதிர்பார்க்கப்படும் இவ்வேளையில், இந்தியா இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இக் கலந்துரையாடலில் வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பவும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

அத்துடன், போரினால் பாதிக்கப்பட்ட மக்களை மீளக்குடியேற்றுவதில் துரிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

உயர் பாதுகாப்பு வலயங்கள் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இடங்கள் தொடர்ந்தும் விடுவிக்கப்படாமையினால் ஆயிரக்கணக்கான மக்கள் இடைத்தங்கல் முகாம்களிலேயே வாழ்ந்துவருகின்றனர். இவர்களை விரைவில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கான ஒத்துழைப்புக்களையும் அழுத்தங்களையும் இந்தியா கொடுக்கவேண்டுமெனவும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தியத் தூதுவன் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளனர்.

போருக்குப் பின்னரான சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதுடில்லியில் இந்தியத் தலைவர்கள் பலரை சந்தித்து இணக்கமான பேச்சுக்களை நடத்தியுள்ள அதேவேளை, அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நடத்த இருக்கும் பேச்சுக்கள் தொடர்பில் இந்திய மத்திய அரசு கொண்டுள்ள அக்கறையும் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறான பின்னணியில், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல் தியான நெருக்கடிகளுக்கு சாத்தியமான தீர்வு முன்வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பையே மீண்டும் எங்கோ ஓர் மூலையில் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

சாபக்கேடாகத் தொடரும் தமிழர் பிரச்சினை, இச் சந்தர்ப்பத்திலேனும் முடிவுக்கு வரவேண்டும் என்பதே தமிழ் பேசும் மக்களின் விருப்பமாகும். இதனை சகல தரப்பினரும் இதயசுத்தியுடன் அணுக முன்வர வேண்டும். இன்றேல், “மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதை'யாகவே நிலைமைகள் தொடர்வதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விவகாரம் முன்னரைப் போன்று அதிக ஆர்வம் தீவிரம் கொண்டதாக இல்லாத நிலையில் அவ்வப்போது பேசப்படும் விடயமாக மாறியுள்ளதையே காணமுடிகின்றது. எவ்வாறெனினும் தேசிய இனப்பிரச்சினைக்கு உறுதியானதும் இறுதியானதுமான அரசியல் தீர்வு ஒன்றின் அவசியத்தையும் புறந்தள்ளிவிட டியாது.

தேசிய இனப்பிரச்சினையின் பின்னணியிலேயே இந்த நாடு பாய மனித அவலங்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்ததுடன், நாட்டில் இரத்த ஆறு ஓடவும் வழிவகுத்தது. அதுமாத்திரமின்றி அதன் அவலங்களை தொடர்ந்தும் சுமந்தவர்களாகவே இன்றும் தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

தமிழ் மக்களின் அபிலாஷைகளை புரரிந்து, தேசிய இனப்பிரச்சினைக்கு சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப்பரவலாக்கலுடன் கூடிய தீர்வு அவசியம் என்பதனை இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் பலவும் அவ்வப்போது வலியுறுத்திவருகின்றன.

இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் ஈடுபாடும் விசேடமாக தமிழகத்தின் கசனையும் தொடர்ந்து இருந்துவருவது குறிப்பிடத் தக்க ஒன்றாகும். அரசியல் தியான வரலாற்றுத் தொடர்புகளுடன் பூகோள தியாகவும் இலங்கைக்கு அணித்தான நாடாக இந்தியாவே இருந்துவருவதால் பிராந்திய நலன் கருதியும் பரஸ்பரம் இரு நாடுகளும் “ஓர் இணக்கமான' அணுகுறையை சகல விடயங்களிலும் கடைப்பிடித்து வருவதை தெளிவாக காணடிகின்றது.

இவ்வாறன போக்குகள் அரசியல் தியாக ஏற்ற இறக்கங்களை கொண்டிருந்த போதிலும் இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியா முற்றுமுழுதான பார்வையாளர் போக்கை தொடர்ந்தும் கடைப்பிடிக்கும் சாத்தியம் எந்தளவு தூரம் உள்ளது என்பது இலங்கை விவகாரத்தில் இதர நாடுகளின் ஆர்வம் எந்தளவு தூரம் “ஊடறுத்துள்ளது' என்பதனைப் பொறுத்தே அமையும் என்பதும் அரசியல் ஆய்வாளர்க ளின் கருத்தாக இருந்து வருகின்றது.

போருக்குப் பின்னரான சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு புதுடில்லியில் இந்தியத் தலைவர்கள் பலரை சந்தித்து இணக்கமான பேச்சுக்களை நடத்தியுள்ள அதேவேளை, அரசாங்க ம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நடத்த இருக்கும் பேச்சுக்கள் தொடர்பில் இந்திய மத்திய அரசு கொண்டுள்ள அக்கறையும் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறான பின்னணியில், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல் தியான நெருக்கடிகளுக்கு சாத்தியமான தீர்வு ன்வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பையே மீண்டும் எங்கோ ஓர் லையில் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

சாபக்கேடாகத் தொடரும் தமிழர் பிரச்சினை, இச் சந்தர்ப்பத்திலேனும் முடிவுக்கு வரவேண்டும் என்பதே தமிழ் பேசும் மக்களின் விருப்பாகும். இதனை சகல தரப்பினரும் இதயசுத்தியுடன் அணுக முன்வர வேண்டும். இன்றேல், “மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதை'யாகவே நிலைமைகள் தொடர்வதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி வீரகேசரி

No comments: