
ஆகாயத்தில் கொன்றாஸ் விமானத்தின் ஒரு இயந்திரம் வெடித்தத்தில் பிரயாணிகளின் அவலம
.
அவுஸ்திரேலியா கொன்றாஸ் விமானம் ஏ380 சிங்கப்பூரிலிருந்து சென்ற வியாழக்கிழமை சிட்னிக்கு புறப்பட்டு சில நிமிடங்களுக்குப் பின்னர் ஒரு இயந்திரம் வெடித்ததில் அந்த விமானம் மீண்டும் சிங்கப்பூருக்கு திரும்பிச் சென்று தரையிறக்கப்பட்டது. அதில் பயணம் செய்த 400க்கும் மேற்பட்ட பிரயாணிகளுக்கு எந்தவிதமான காயங்களோ பாதிப்போ ஏற்படவில்லை. இயந்திரம் வெடித்த சத்தம் பிரயாணிகளுக்கு கேட்டதாகவும் அப்போது அந்த விமானம் அதிர்ந்ததாகவும் பிரயாணிகள் தெரிவித்தார்கள். கொன்றாஸ் நிறுவனம் எல்லா எயர்பஸ் ஏ380 விமானங்களையும் பாவனைக்கு அடுத்த அறிவித்தல் வரை விடப்படமாட்டாது என தெரிவித்துள்ளார்கள்.

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment