கிரிக்கெட்

.
அவுஸ்திரேலியா அணி இலகுவாக இலங்கை அணியை 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியது.     இதில் மெல்பர்னில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

சிட்னியில நடந்த இரண்டாவது போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டம் மழையால் சிறிது தடைப்பட்டது.  நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 41.1 ஓவரில் 3 விக்கெட் இழந்து 213 ஓட்டங்களை எடுத்தது.  போட்டி மழையால் தடைப்படவே, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி, அவுஸ்திரேலிய அணிக்கு 38 ஓவரில் 240 ஓட்டங்கள் எனற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அவுஸ்திரேலிய அணி 37.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 210 ஓட்டங்களை மட்டும் எடுத்தது. கடந்த 7 போட்டிகளாக அவுஸ்திரேலிய அணி தொடர் தோல்வியை சந்தித்து வருவதால் அந்த அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பிறிஸ்பனில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் அவுஸ்திரேலியா அணி இலகுவாக இலங்கை அணியை 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. முதலில் ஆடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 115 ஓட்டங்களையே பெற்றது. அவுஸ்திரேலியா அணி மிக இலகுவாக 2 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து வெற்றியீட்டியுள்ளது.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் மெத்தியுஸ் மற்றும் மலிங்கவின் அபாரத்தால் இலங்கை எதிர்பாராத வெற்றியை பெற்றது.


இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 239 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஆரம்பமே தடுமாற்றத்தை எதிர்நோக்கிய அவுஸ்திரேலிய அணி இடைநிலை வீரராக களமிறங்கிய ஹசியின் நிதான துடுப்பாட்டத்துடன் சற்று வலுவான நிலையை அடைந்து.

மைக்கேல் ஹஸ்ஸி மட்டுமே சிறப்பாக துடுப்பெடுத்தாடி 71 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காது இருந்தார்.

இதில் அஸ்திரேலியா மொத்தம் 14 பவுண்டரிகளையே அடித்திருந்தது. அதுவும் 17 ஓவர்களுக்குப் பிறகு அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் 3 பவுண்டரிகளையே அடித்தனர்.

இலக்கை பந்து வீச்சாளர்களில் திசரா பெரேரா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மலிங்க 39 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் சுராஜ் ரந்திவ் 35 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டையும் கைப்பற்ற முரளிதரன் 9 ஓவர்களில் 36 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து சிறப்பாக பந்து வீசினார். முன்னதாக காயத்திலிருந்து மீண்டு வந்த விக்கெட் காப்பாளர் பிராட் ஹெடின் 55 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 49 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வொட்சனை 10 ஓட்டங்களில் மலிங்க வீழ்த்தினார். அணி தலைவர் கிளார்க் 27 ஓட்டங்களுடன் திரும்பினார்

1 comment:

kalai said...

ausi ausi ausi oi oi oi