தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவின் அறிவித்தல்

.
தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவின் அறிவித்தல்

தமிழீழ விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்றுவருகின்றன.

இந்தவகையில் அவுஸ்திரேலிய நாட்டிலும் மாவீரர் நினைவு நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவரும் இவ்வேளையில், அவுஸ்திரேலியாவில் வாழும் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் அல்லது உரித்துடையோர் தமது விபரங்களை பதிவுசெய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தாயக மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகப் தம்முயிரை அர்ப்பணித்த மாவீரர்களின் வாழ்வும், அவர்கள் மேற்கொண்ட அர்ப்பணிப்புக்களுமே, தமிழர்களின் தேசிய விடுதலைக்கான உந்துசக்தியாக என்றென்றும் நிலைத்துநிற்கும்.
தமது வாழ்வையே அர்ப்பணித்த மாவீரர்களின் தியாகமும் வரலாறும் பதிவுசெய்யப்படுவதுடன், இன்று தாயகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான காலகட்டத்தில், அவற்றை பேணிப்பாதுகாக்கவேண்டிய பொறுப்பும் கடமையும் புலம்பெயர்ந்து வாழும் நம்மனைவரையுமே சாரும்.
எனவே இதுவரை பதிவுகளை மேற்கொள்ளாத, அவுஸ்திரேலியாவில் வாழும் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் அல்லது உரித்துடையோர் தமது விபரங்களை பதிவுசெய்துகொள்ளுமாறு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்பு இலக்கங்கள்
சிட்னி          - 0435 590 124
மெல்பேண் – 0435 864 203

No comments: