தமிழ் சினிமா

.
* எனக்கும் ஜெனிலியாவுக்கும் செம பொருத்தம், கூறுகிறார் தனுஷ்
* பாடல் மூலம் அம்பு விடும் 'மன்மதன் கமல்'!
* ஒஸ்கார் பிலிம்ஸின் மருதநாயகம் அவதாரம் எடுக்கும் கமல்
* விக்ரம் படத்தில் அமலா 
உத்தமபுத்திரன் படத்தில் எனக்கும் நாயகி ஜெனிலியாவுக்கும் நல்ல பொருத்தம், சரியான கெமிஸ்ட்ரி என்று புளகாங்கிதப்பட்டுக் கூறியுள்ளார் நடிகர் தனுஷ்.

தனுஷ், ஜெனிலியா நடித்துள்ள படம் உத்தமபுத்திரன். தீபாவளிக்குத் திரைக்கு வருகிறது. வழக்கம் போல இதுவும் தனுஷ் டைப் படம்தான். காமெடி, காதல், குடும்பக் கதை என்று கலவையாக உருவாக்கியுள்ளனர்.

இப்படத்தில் தனுஷுடன் ஜோடி போட்டுள்ளார் ஜெனிலியா. இதுகுறித்து சந்தோஷமாக உள்ளார் தனுஷ். காரணம், அவருக்கும், இவருக்கும் கெமிஸ்ட்ரி சரியாக ஒத்து வந்ததாம்.

இதுகுறித்து தனுஷ் கூறுகையில், ஜெனிலியா ஒரு பக்கா புரபஷனல். திரையில் எங்களுக்கிடையிலான கெமிஸ்ட்ரி சிறப்பாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

இப்படம் ஒரு முழு நீள குடும்பப் படமாகும். கலப்படமில்லாத காமெடியைக் கொடுத்துள்ளோம். இயக்குநர் மித்ரன் ஜவஹருடன் இணைந்து நான் தரும் 3வது படம். இது சந்தோஷமாக உள்ளது என்றார் தனுஷ்.

பாடல் மூலம் அம்பு விடும் 'மன்மதன் கமல்'!சினிமா உருவாக்கம் என்று வந்தால் கமல்ஹாஸன் ஒரு நிஜமான சகலகலா வல்லவன். இயக்கம், பாடுவது, நடனம், நடிப்பு என அவர் அனைத்து துறையிலுமே வல்லவர்தான்.ஏற்கெனவே தன்னை ஒரு திறமையான பாடலாசிரியராக, ஹே ராம் படத்தில் நிரூபித்தார். இளையராஜா இசையில் எப்போது கேட்டாலும் இதயத்தை வருடும், 'நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி...' பாட்டு கமல் எழுதியதுதான்.
அடுத்து மன்மதன் அம்பு படத்துக்காக தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் 4 பாடல்களை எழுதியுள்ளார் கமல்.

இதுகுறித்து இயக்குநர் டிசம்பர் 10-ம் திகதி வெளியாகிறது.

ஒஸ்கார் பிலிம்ஸின் மருதநாயகம் அவதாரம் எடுக்கும் கமல்


எந்திரன் என்னயா எந்திரன், இதே வரார் எங்க மருத நாயகம் கமல் ரசிகர்கள் தொடை தட்ட தயாராகுங்கள்.. ஆம் கமலின் கனவு நனவாக போகிறது. மருதநாயகத்தை ஒஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்க போகிறார்கள். செய்தி இதோ..
தசாவதாரம்

படப்பிடிப்பிற்குப் பிறகு ஒஸ்கார் ரவிசந்திரனுக்கும், கமல்ஹாசனுக்கும் இடையே பிரச்சனை உண்டானது. இப்படத்தின் வெளியீடு பற்றிக் கூட கமல் பேசவில்லை என்பன போன்ற செய்திகள் வேகமாக வலம் வந்தன. கமலும், ரவிச்சந்திரனும் இனி இணையவே மாட்டார்கள் என வதந்திகள் பரபரப்பாக பரவின.

ஆனால், சமீபத்தில் தாங்கள் மீண்டும் இணைந்து பணியாற்ற வாய்ப்பிருப்பதாக கூறி அனைத்து வதந்திகளுக்கும் கமல்ஹாசன் முற்றுப்புள்ளி வைத்தார். 'மருதநாயகம் நிச்சயம் உருவாகும்" என கமல் சமீபத்திய விழா ஒன்றில் கூறியது, மொத்த திரைத்துறையையும், ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தற்பொழுது ஒஸ்கார் ரவிசந்திரன் மருதநாயகத்தை தயாரிப்பது உறுதியாகியுள்ளது. மருதநாயகத்தை தயாரிக்கப் போகிறீர்களா? என அவரிடம் கேட்கப்பட்ட போது, கமல்ஹாசனுடன் தொடர்ந்து விவாதித்து வருவதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

உலகநாயகனின் ரசிகர்களுக்கு இச்செய்தி இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. கமலின் தலைவன் இருக்கிறான் படத்தையும் ஆஸ்கார் பிலிம்ஸே தயாரிக்கலாம் என்றும் தெரிகிறது. இருப்பினும், ரசிகர்கள் மருதநாயகம் படத்தையே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். மருதநாயகம் உருப்பெற்றால், அது தமிழ் சினிமா வளர்ச்சியின் பிரதிபலிப்பாக அமையும்.

விக்ரம் படத்தில் அமலா


ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு அலை. தமிழ்நாட்டில் இனி அமலா அலை அடித்தாலும் ஆச்சர்யமில்லை! மைனா படத்திற்கு பிறகு முக்கியமான படங்களில் எல்லாம் கமிட் ஆகியிருக்கிறார் அமலா.

களவாணி பட இயக்குனர் சற்குணம் இயக்கவிருக்கிற புதுப்படத்தில் விமலுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்பதை முன்பே எழுதியிருந்தோம். இப்போது மேலும் ஒரு முக்கியமான படத்தில் சைன் பண்ணியிருக்கிறாராம் அமல்.

மதராசப்பட்டினம் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் தான் இந்த பிரமோஷன். விக்ரமுக்கு ஜோடியாக அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இன்னொரு முக்கியமான கேரக்டரில் நடிக்க அமலாவை கேட்டாராம் விஜய். இது விக்ரமின் ஒப்புதலோடுதான் நடந்திருக்கிறது.

சிந்து சமவெளி பார்த்த பின் இந்த கேரக்டருக்கு இந்த பொண்ணு சூட் ஆவுமே என்றாரார் விக்ரம். உடனடியாக கேரளாவில் இருந்த அமலாவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

அனுஷ்காவுக்கு ஈக்குவலான ரோல் வேணும். விக்ரமுடன் காம்பினேஷன் இருக்கணும் என்றெல்லாம் ஆசைப்பட்ட அமலா, சம்பளத்தையும் கணிசமாக கேட்டதாக கேள்வி. எல்லாவற்றுக்கும் எஸ் சொல்லிதான் கமிட் பண்ணியிருக்கிறார்கள் அமலாவை.

ஹ்ம்ம்... ஒரு பட்டாம்பூச்சி கொஞ்சம் கொஞ்சமாக பறவையாகிக் கொண்டிருக்கிறது!

நன்றி வீரகேசரிNo comments: