சன் சீ தமிழ் அகதிகளில் ஒருவர் கைது

.
கடந்த ஆகஸ்ட் மாதம் தாய்லாந்திலிருந்து கனடாவிற்கு படகு மூலம் சென்ற 492 அகதிகளுள், யுத்த குற்றம் புரிந்தவர் எனும் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய குடிவரவு, குடியகழ்வு சட்டத்தின்படி தீவிரவாத நபரோ யுத்தகுற்றம் புரிந்த நபரோ நாட்டினுள் அனுமதிக்கபடமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு எப்போது நட்டவிரோத அமைப்புகளிற்கு பக்கபலமாக இருக்காது என கனடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பேச்சாளர் விக்டோஸ் தெரிவித்துள்ளார். 80 ஆயிரம் புகலிடக் கோரிக்கை வழக்குகள் இன்னமும் இடம்பெற்றுவருவதாகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு வருடத்திற்கு 30 000 அமெரிக்க டொலர்கள் வரை செலவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 63,000 அகதிகள் நாட்டை விட்டு வெளியேறக் கூறியும் நாட்டில் வசித்து வருவதாகவும், 41,000 பேர்வரை தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என ஐ.ஏ.என.எஸ் அறிக்கை தெரிவித்துள்ளது

நன்றி தேனீ

No comments: