வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற 14 இலங்கை அகதிகள் கைது

.
நாகப்பட்டினம், நவ. 2: தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களிலிருந்து வெளியேறி, ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 14 பேர், நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் திங்கள்கிழமை இரவு பிடிபட்டனர்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதியில் இலங்கை அகதிகள் தங்கியிருப்பதாக கியூ பிரிவு போலீஸப்ருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, கியூ பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், ஆய்வாளர் முருகன் ஆகியோர் தலைமையிலான போலீஸப்ர் அந்த விடுதியைச் சுற்றி வளைத்து, அங்கு தங்கியிருந்த இலங்கை அகதிகள் 14 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு அகதிகள் முகாம்களிலிருந்து வெளியேறி, வேளாங்கண்ணி வழியாகக் கடல் மார்க்கமாக ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.மேலும், 40 இலங்கை அகதிகள் வெளிநாட்டுக்குச் செல்லத் திட்டமிட்டு, முகவர் ஒருவரிடம் ரூ. ஒரு லட்சம் தருவதாக ஒப்பந்தம் செய்து கொண்டு, ரூ. 40 ஆயிரம் முதல் ரூ. 60 ஆயிரம் வரை அகதிகள் ஒவ்வொருவரும் அந்த முகவரிடம் அளித்திருந்ததாகவும், செவ்வாய்க்கிழமை காலை அகதிகளை வெளிநாட்டுக்கு அனுப்ப அந்த முகவர் திட்டமிட்டிருந்ததாகவும் போலீஸப்ரிடம் தெரிவித்தனர். வெளிநாட்டுக்கு செல்லத் திட்டமிட்டு பிடிபட்ட 14 அகதிகளைத் தவிர, மீதமுள்ள 26 பேரின் நிலை என்ன என்பது குறித்து கியூ பிரிவு போலீஸப்ர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தற்போது, பிடிபட்ட 14 அகதிகளின் பெயர்கள், அவர்கள் எந்தெந்த முகாம்களிலிருந்து வெளியேறியவர்கள் என்ற விவரத்தை உடனடியாகத் தெரிவிக்க போலீஸப்ர் மறுத்துவிட்டனர்

நன்றி தேனீ

No comments: