East Meet West பார்த்து ரசித்த நிகழ்வு

.
                    நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

அண்மையில் Bankstown  மண்டபத்தில் நடந்தேறிய நிகழ்ச்சி. பேருக்கு ஏற்ப முதல் பாதி East பின்பாதி West . மேற்க்கத்திய சூழலில் வளர்ந்த ஜனனி பரதத்தையும் அதே நேரம் Western Hippop போன்ற நடனங்களையும் கற்றவர். இவரே இன் நிகழ்ச்சியை நடத்தியவர். இவருக்கு துணையாக நான்கு ஆசிரியைகள். இவர்களும் ஜனனி போன்றே East நடனமான  பரதத்தையும் West  Hippop யாவும் கற்றவர்கள். ௦ 150 மாணவ மாணவியரை மேடை ஏற்றினார்கள்









முன் பாதியில் மாமூலான பரத நிகழ்ச்சிகள் சின்னஞ் சிறுசுகள் முதல் இளம்  பெண்கள் வரை ஆடினார்கள்மேடை நிறைந்த கூட்டம் 12 , 15 மாணவியர் நிரை நிரையாக சாரி சாரியாக ஆடினார்கள்.  வர்ணமும் இவ்வாறே. தில்லானாவில் இயக்குனர் ஜனனியும் அவரது இணை ஆசிரியர்களும்  ஆடினார்கள்.
 

அத்தனை பெரிய கூட்டமானாலும் எந்த வித தங்கு தடை இன்றி நிகழ்ச்சி சுமுகமாக நடைபெற்றமை  நிர்வாக திறைமையை போற்றாமல் இருக்க முடியாது. மாறி வரும் பரத்திற்கு இன் நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டு. புதிய பின்னணியிலே பரதம் கற் மாணவியர் இன்று ஆசிரியர் ஆகி உள்ளனர். பழமையின் பின்னணியான தமிழ் பாரம்பரியத்தில் வளராதவர் கலை ஆர்வம் மிக்க இளமை துடிப்புடன் பரதத்தை எடுத்துச் செல்லும் துணிவை கண்டேன். ஒரு சில வருடங்களுக்கு முன் பரத்தின் வருங்காலம் புதிய சூழலில் எப்படி அமையும் என என்னைப் பார்த்து ஒரு நண்பர் கேட்டார். அப்பொழுது சிறிது குழம்பினேன். அனால் East Meet West இதற்கு விடையாக அமைந்ததா? மேலும் இந்த மேற்கத்திய சூழலில் வளர்ந்தவர் பரத்தை பழக்கி மேடை ஏற்றும்போது பொறுத்திருந்து பாப்போம்


இடை  வேளையின் பின் நிகழ்ச்சிக்கு Bollywood நடனங்களும் மேற்கத்திய நடனமுமாக அமைந்தது. Bollywood பாடல்களுக்கு நாட்டியம் அமைக்கப் பட்டிருந்தது. கண்ணை கவரும் உடைகள் சிட்டாகப் பரந்த சின்னஞ் சிறுசுகள், இவ்வாறு நடனம் தொடங்கியது. வெவ்வேறு  வயதினரும் ஆடி மகிழ்வித்தனர். ஆடல் என்பது ஆடி மகிழ்வதற்கே என்ற கொள்கையுடன் 55 தாண்டிய அம்மைகளும் தங்கள் இன்பத்துக்காகவும் மற்றவரையும் மகிழ்விக்க ஆடினார்கள். அவர்களை கண்டதும் கூடி இருந்த கூட்டம் கரகோஷம் செய்து அவர்களை மகிழ்வித்தது. ஏதோ ஒரு நாட்டியம் தான் ஆடுவார்கள் என நினைத்தேன். ஏன்  நாம் ஆடினால் ரசிக்க மாட்டீர்களா  என்பது போல் சிறிது நேரத்தில் வேற்றுடை மாற்றி ஆட வந்தனர்.

Bollywood    அடுத்து மேற்கத்திய இள நங்கையர் தமது வாழிப்பான  உடல் வாகுடன் வித விதமான உடை அணிந்து ஆடினார்கள். ஏன் ஜமாய்த்து விட்டனர் என்றே கூறலாம். கூடி இருந்த கூட்டம் இன்ப சாகரத்தில் மிதந்தது.
நிகழ்ச்சி நீண்டு விட்டது என்றனர் சிலர். சிலர் அதனால் என்ன என்றனர். மண்டபம் நிறைந்த கூட்டம் 750 பேர் என அறிவிக்கப்பட்டது. 150 மாணவர் இருந்தால் 750 வராதா? என்றனர் சிலர். வழமையாக பார்க்கும் நிகழ்ச்சியில் இருந்து மாறுபட்ட நிகழ்ச்சியை துணிகரமாக மேடை ஏற்றி வெற்றி கண்ட ஜனனியை போற்றாமல் இருக்க முடியாது. முற்று முழுதாக நாட்டியத்தையே தனது தொழிலாக கொண்ட இளம் தாரகை ஜனனி நாட்டியத்தில் ஒரு புதிய பரிணாமத்தின் எடுத்துக் காட்டு. அவரது முயற்சி வெற்றி அடைய எமது ஆசிர்வாதமும் வாழ்த்துக்களும்.

4 comments:

kirrukan said...

55 தாண்டிய அம்மைகளும் தங்கள் இன்பத்துக்காகவும் மற்றவரையும் மகிழ்விக்க ஆடினார்கள். ????????????????????


மற்றவர்களை மகிழ்விக்க ஆடினார்கள் என்பது....... இது கொஞ்சம் உங்களுக்கே ஒவராக தெரியல்ல?தாங்கள் மகிழ ஆடினார்கள் என்பது வாஸ்தவம்....

Ramesh said...

வயசென்ன வயசு மனத்தளவில இளமையா இருக்கிறமில்லயா அதால ஆடுறம் என்ன தப்பு சார்

Gowri said...

நாட்டிய கலாநிதி பரதம் படும் பாட்டை நன்றாக ரசித்திருக்கிறார் போல் தெரிகிறது.தியாகையரும் தீட்சிதரும் ஓடி ஒளிந்துகொள்ள வேண்டியதுதான்.

Anonymous said...

puthumai... ilamai... varavetpoom