உலகச் செய்திகள்

.
@  ஆண்டின் மிகச்சிறந்த கிரிக்கட் வீரராக சச்சின் டெண்டுல்கர்.
 @ கனடாவை நோக்கி அகதிகளுடன் இன்னும் ஒரு கப்பல்?

 ஆண்டின் மிகச்சிறந்த கிரிக்கட் வீரராக சச்சின் டெண்டுல்கர்


சர்வதேச கிரிக்கட் பேரவையின்(ஐ.சி.சி) ஆண்டின் மிகச்சிறந்த கிரிக்கட் வீரருக்கான சேர் காபீல்ட் சோபர்ஸ் விருதை இந்திய நட்சத்திர கிரிக்கட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வென்றெடுத்துள்ளார்.

இந்தியாவின் பெங்களுரில் இன்று மாலை இடம்பெற்ற 2010ம் ஆண்டிற்கான ஐசிசி விருதுவழங்கும் விழாவிலேயே சச்சினுக்கு இந்த உயர் விருது கிடைத்துள்ளது. சாதனைகளால் நிறைந்த சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கட் வாழ்;வில் இந்த விருது கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.விருதுகளுக்காக கருத்தில் கொள்ளப்பட்ட கடந்தாண்டு ஓகஸ்ட்; 24 ஆம் திகதி முதல் இவ்வாண்டு ஓகஸ்ட் 10 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில்; வீரர்களும் அணிகளும் வெளிப்படுத்திய ஆற்றல் வெளிப்பாடுகளைக் கவனத்தில் கொண்டே விருதுகள் ஐசிசியால் வழங்கப்பட்டது.

இந்தக் காலப்பகுதியில் சச்சின் டெண்டுல்கர் 10டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1064 ஓட்டங்களைக் குவித்திருந்த அதேவேளை 17 ஓருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி 914 ஒட்டங்களையும் குவித்திருந்தார் .இதில் சர்வதேச ஒருநாள் கிரிக்கட் வரலாற்றில் பெறப்பட்ட முதலாவது இரட்டைச்சதமும் அடங்கும் என்பது குறி;ப்பிடத்த்ககது.

ஆண்டின் மிகச்சிறந்த கிரிக்கட் வீரருக்கான சேர் காபீல்;ட் சோபர்ஸ் விருது ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கட் வீரருக்கான விருது ஆண்டின் சிறந்த சர்வதேச ஒரு நாள் கிரிக்கட் வீரருக்கான விருது என மூன்று முக்கிய பிரிவுகளிலும் டெண்டுல்கர் பெயர் பரிந்துரைசெய்யப்பட்டிருந்தது.

இதில் மிக உயர்விருதான ஆண்டின் சிறந்த கிரிக்கட் வீரருக்கான சேர் காபீல்ட் சோபர்ஸ் விருது சச்சின் டெண்டுல்கருக்கு கிடைத்த அதேவேளை சிறந்த டெஸ்ற் வீரருக்கான விருது இந்திய அணியின் ஆரம்பத்துடுப்பாட்டவீரர் வீரேந்தர் ஷேவாக்கிற்கும் ஆண்டின் சிறந்த ஓருநாள் சர்வதேச கிரிக்கட் வீரருக்கான விருது தென் ஆபிரிக்க மத்திய வரிசைத் துடுப்பாட்டவீரர் ஏபிடி விலியர்ஸிற்கும் வழங்கப்பட்டது.

வீரர்களும் அவர்கள் பெற்ற விருதுகளின் விபரங்களும் பின்வருமாறு

ஆண்டின் சிறந்த கிரிக்கட் வீரருக்கான சேர் காபில்ட் சோபர்ஸ் விருது
-சச்சின் டெண்டுல்கர் (இந்தியா)

ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருது
வீரேந்தர் ஷேவாக் (இந்தியா)

ஆண்டின் சிறந்த ஒருநாள் சர்வதேச கிரிக்கட் வீரர்
ஏபிரஹாம் டி விலியர்ஸ் (தென் ஆபிரிக்கா )

வளர்ந்துவரும் இளம் வீரருக்கான விருது (26வயதிற்குட்பட்ட வீரர்களுக்கு வழங்கப்படுவது )
ஸ்டீவன் பின் -Steven Finn( இங்கிலாந்து )

ஐசிசியின் இணை உறுப்பு நாடுகளில் சிறந்த வீரர்களுக்கான விருது ( டெஸ்ட் கிரிக்கட் விளையாடும் நாடுகளைத் தவிர்த்து ஐசிசியின் உறுப்புரிமை பெற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்குரியது
ரெயான் டென் டுயஸ்சாட்டே ( நெதர்லாந்து )

ஆண்டின் மிகச்சிறந்த டுவன்டி டுவன்டி சர்வதேச கிரிக்கட் ஆற்றல் வெளிப்பாடு

பிரன்டன் மக்கலம் (நியூஸிலாந்து ) அவுஸ்திரேலிய அணிக்கெதிராக ஆட்டமிழக்காது பெற்ற 116 ஓட்டங்கள்

ஆண்டின் மிகச்சிறந்த மகளிர் கிரிக்கட் வீராங்கனை
ஷெலி நிற்ஸ்செக் (அவுஸ்திரேலியா)

ஆண்டின் மிகச்சிறந்த நடுவர்
அலிம் டர் (பாகிஸ்தான் )

ஆண்டின் சிறந்த ஆர்வமிகு அணிக்கான (Sprit of Cricket) விருது நியூஸிலாந்து

ஆண்டின் டெஸ்ற் கிரிக்கட் அணி

வீரேந்தர் ஷேவாக் - சைமன் கடிச் - ஹஸீம் அம்லா -சச்சின் டெண்டுல்கர்- ஜக் கலீஸ் - குமார் சங்ககார -மஹேந்திரசிங் டோனி ( அணித்தலைவர் ) டேல் ஸ்டெய்ன் - கிரஹாம் ஸ்வான் -ஜேம்ஸ் அன்டர்ஸன் -டக் பொலிங்ஜர்

ஆண்டின் சிறந்த ஒருநாள் சர்வதேச அணி

சச்சின் டெண்டுல்கர் -ஷேன் வொட்ஸன் -ரிக்கி பொன்டிங் (அணித்தலைவர்)-மைக்கல் ஹஸி ஏபி டி விலியர்ஸ் -போல் கொலிங்வுட் - மஹேந்திரசிங் டோனி –டானியல் வெட்டோரி -ஸ்டுவர்ட் புரோட் -டக் பொலிங்ஜர் -ரெயான் ஹரிஸ்

நன்றி வீரகேசரி

2. கனடாவை நோக்கி அகதிகளுடன் இன்னும் ஒரு கப்பல்?


டொரன்டோ: இலங்கை தமிழ் அகதிகளை ஏற்றிக் கொண்டு இன்னும் ஒரு கப்பல் கனடாவை நோக்கி வந்து கொண்டிருப்பதாக கனடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் ஈழத்துக்கான இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மவுனித்த பிறகு, இங்கையில் தமிழர் வாழ முடியாத நெருக்கடியான சூழல் நிலவுகிறது.

ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு வாழப் பிடிக்காமல், தோணிகள், படகுகள், சிறுகப்பல்களில் வேறுபகுதிகளுக்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர். பிழைப்புக்காகச் செல்லும் இவர்களை, "விடுதலைப் புலிகளாக இருக்கக் கூடும், எச்சரிக்கையாக இறுங்கள்" என இந்தியா எச்சரிக்கை அனுப்பியுள்ளதால், பக்கத்து நாடுகள் எவையும் அவர்களை ஏற்க மறுக்கின்றன.

எனவே கனடா, நியூஸிலாந்து போன்ற நாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர் இலங்கை தமிழர்கள் .

ஏற்கெனவே சன் ஸீ என்ற கப்பலில் 300க்கும் அதிகமான தமிழர்கள் அகதிகளாக கனடாவில் தஞ்சமடைந்தனர். அவர்களை துறைமுகப் பகுதியில் கூடாரம் அமைத்து தங்க வைத்துள்ள கனடா, சிலருக்கு அகதி அந்தஸ்தும் வழங்கியுள்ளது. மற்றவர்களுக்கும் அந்த அந்தஸ்தை வழங்க பரிசீலனை செய்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், மேலும் ஒரு கப்பல் அகதிகளுடன் கனடா நோக்கி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

கனடாவில் பனிக்காலம் துவங்கவுள்ளது. இந்த சீஸனின் நீர்நிலைகள் கூட உறைந்துபோகும். கடல் பகுதிகள் ஆங்காங்கே உறைந்துவிடும்.

எனவே அதற்கு முன் இந்தக் கப்பல் கனடா வரலாம் என எதிர்ப்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து கனடிய போலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இன்னும் இரண்டு வாரத்துக்குள் இந்தக் கப்பல் வரக்கூடும் என தங்களுக்கு தகவல் கிடைத்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கனடிய வெளியுறவுத் துறை அமைச்சக பேச்சாளர் லோரா மார்கேய்ல், கூறுகையில், "கிடைத்துள்ள தகவலை ஆராய்ந்து வருகிறோம். ஒருவேளை அந்தக் கப்பல் வேறு பகுதிக்கும் கூட செல்லலாம். இருந்தாலும் நாங்கள் எச்சரிக்கையுடன் கண்காணிக்கிறோம்" , என்றார்.

நன்றி தேனீ

No comments: