சிட்னியில் பரிசளிப்பு விழா 2010

.


அவுஸ்ரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 16 ஆண்டுகளாக நடாத்தப்பட்ட தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் 10வது ஆண்டிலிருந்து அவுஸ்ரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கத்தின் தலைமையின் கீழ் நடாத்தப்பட்டு வருகின்றன. இந்த வருடம் சிட்னியில் மட்டும் 300க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குகொண்டனர். மேலும் அவுஸ்திரேலிய-நியூசிலாந்தின் மற்ற ஐந்து மாநகர்களில் இந்தப் போட்டிகள் நடாத்தப்பட்டன. சிட்னி தவிர மற்ற மாநகர்களிலிருந்து 250 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தப் போட்டிகளில் பங்குபற்றினர்.இந்தப் போட்டிகள் வேறு மாநிலங்களில் எமது பிரதிநிதிகள் கொண்ட போட்டி உபகுழுக்கள் மூலம் நடாத்தப்பட்டு வருகின்;றன. மாநில மட்டத்திலான போட்டிகளும் பரிசளிப்பும் அந்தந்த மாநிலத்திலேயே நடைபெறுகின்றன.


சிட்னியில் பரிசளிப்பு விழா 2010 Prize Giving Ceremony-Sydney
தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா ஒக்டோபர் மாதம் 3ம் திகதி மாலை 4.30 மணியிலிருந்து, ‘றைட் சிவிக்’ (Ryde Civic Centre) மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்தப் பரிசளிப்பு விழாவில் மொத்தமாக 350 பரிசுகளும், 32 வெற்றிக் கேடயங்களும், 10 தங்கப் பதக்கங்களும் பரிசாக வழங்கப்பட்டன. இம்முறையும் எழுத்தறிவுப் போட்டி, கவிதைமனனப் போட்டி, பேச்சுப் போட்டி என 10 போட்டிகள் அகில அவுஸ்திரேலிய, நியூசிலாந்து மட்டத்தில் நடாத்தப்பட்டு முதற்பரிசுகளாக தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

போட்டிகளின் முதல் நாளான சனிக்கிழமை, 2ம் திகதி ஒக்டோபர் மாதம், ஐந்து தேசிய நிலைப் போட்டிகள் சிட்னியில் நடைபெற்றன. இதில் மொத்தமாக 59 போட்டியாளார்கள் வௌ;வேறு மாநிலங்களிலிருந்து வந்து பங்குபற்றினார்கள். தேசிய மட்டத்தில் கவிதை மனனப் போட்டிகளிலும், பேச்சுப் போட்டிகளிலும் சிட்னியிலிருந்து 21 மாணவர்களும் மற்றைய மாநகர்களிலிருந்து 37 மாணவர்களும் பங்குபற்றினர். இப்போட்டிகளில் பரிசு பெற்றவர்களுக்கும் சிட்னியில் பரிசளிப்பு நடைபெற்றது.பரிசளிப்பு விழாவிற்கு வருகை தந்தோரை செல்வி கார்த்திகா மனோகரன் வரவேற்றுப் பேசினார். தேசியப் பேச்சுப் போட்டிகளிலும், தேசிய கவிதை மனனப் போட்டிகளிலும் முதற்பரிசான தங்கப் பதக்கங்களை வெற்றி பெற்ற மாணவர்களின் சிறப்புப் பேச்சுக்களும் கவிதைகளும், மாநில நிலைகளில் பரிசுபெற்ற தனிநடிப்பு நிகழ்வுகளும் பரிசளிப்பு விழாவில் இடம்பெற்றன.

தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளின் தேசிய இணைப்பாளர், திரு. க. நரேந்திரநாதன், தனது அறிக்கையை வழங்கிப் பேசினார். அவர் தனது உரையில் இந்தப் போட்டிகள் நாடத்;தப்படும் விதம் பற்றி எடுத்துக் கூறி, போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களைப் பாராட்டினார்.

‘ஸ்ரத்பீல்ட்’ உள்ளுராட்சி சபையின் உருப்பினர், திரு. சுந்தர் ஈஸ்வரன் அவர்கள் இந்த விழாவிற்கு பிரதம அதிதியாக வருகை தந்து கௌரவித்தார். மங்கள விளக்கை ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்த பிரதம அதிதி அவர்கள் தனது உரையில், பரிசு பெற்ற சிறார்களை வாழ்த்தியதுடன், தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் போன்ற விடயங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் நடாத்தப்பட வேண்டியதன் அவசிம் பற்றி எடுத்துக் கூறினார்.

முதலில் தேசிய மட்டத்தில் முதற்பரிசு பெற்ற மாணவர்களுக்கு தங்கப்பதக்கமும் மற்றைய மாணவர்களுக்கு விசேட பரிசுகளும் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சிட்னிப் போட்டிகளில் பரிசு பெற்ற சிறார்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. இந்தச் சிறுவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பரிசுகளைப் பெற்றுக் கொண்டனர். பரிசுகளை பிரதம விருந்தினர் திரு. திருமதி. சுந்தர் ஈஸ்வரன் வழங்கிக் கௌரவித்தனர்.

திரு அன்டன் தேவரன்ஜித் நன்றியுரை வழங்கினார். செல்வி கார்த்திகா மனோகரனும்இ திரு பைரஜன் யோகராஜாவும் இந்த நிகழ்ச்சிகளை சிறப்பாகத் தொகுத்து வழங்கினர். இவர்களும் கடந்த ஆண்டுகளில் இந்தத் தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்றவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டிகளில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் இது ஒரு மறக்கமுடியாத நிகழ்வாக அமைந்ததாக தெரிவித்தனர்.தேசிய நிலையில் தங்கப்பதக்கம் பெற்றோர் பட்டியல்:
(Gold Medallists)

1) கீழ்ப் பிரிவில் (6-7 வயது) எழுத்தறிவுப் போட்டி – முதற் பரிசு

செல்வன். காவியன் பத்மஸ்ரீ
Mas. Kaaviyan Pathmasiri (VIC)

2) மத்திய பிரிவில் (8-9 வயது) எழுத்தறிவுப் போட்டி – முதற் பரிசு

செல்வி. மோ~pகா பிரேமதாசா
Miss. Moshika Premathasa (VIC)

3) மேற் பிரிவில் (10-11 வயது) எழுத்தறிவுப் போட்டி – முதற் பரிசு

செல்வி. ஓவியா பவனேந்திரகுமார்
Miss. Oaviya Bavanendrakumar (QLD)


4) அதிமேற் பிரிவில் (12-14 வயது) எழுத்தறிவுப் போட்டி – முதற் பரிசு

செல்வி. கடாச்சனி ரவிராஜ்
Miss Kadachchini Raviraj (VIC)


5) விசேட இளைஞர் பிரிவில் (15-17 வயது) எழுத்தறிவுப் போட்டி –

முதற் பரிசு செல்வி. பார்க்கவி மோகனசுந்தரம்
Miss Barkavi Mohanasundaram (NSW)

6) கீழ்ப் பிரிவில் (6-7 வயது) பாடல்மனனப் போட்டி – முதற் பரிசு

செல்வன். நிரோஷ் பிரபாகரன் Mas. Nirosh Prabaharan (NSW)

7) விசேட மேற்பிரிவில் (10-12 வயது) கவிதை மனனப் (திருக்குறள்)

போட்டி – முதற் பரிசு

செல்வி. ஓவியா பவனேந்திரகுமார்
Miss. Ovaiya Bavanendrakumar (QLD)

8) மத்திய பிரிவில் (8-9 வயது) பேச்சுப் போட்டி – முதற் பரிசு

செல்வி மயூரியா மயூரதாஸ்
Miss Mayuria Mayurathas (NSW)

9) மேற் பிரிவில் (10-11 வயது) பேச்சுப் போட்டி – முதற் பரிசு

செல்வி. ஓவியா பவனேந்திரகுமார்
Miss. Ovaiya Bavanendrakumar (QLD)

10) அதிமேற் பிரிவில் (12-14 வயது) பேச்சுப் போட்டி – முதற் பரிசு

செல்வன். ஜனார்த்தன் குமரகுருபரன்
Mas Janarthan Kumarakuruparan (NSW)மேலதிக விபரங்களுக்கு கலப்பை இணையத்தளத்தைப் பார்க்கவும்.
(http://www.kalappai.org/)

நிர்வாகம்
தமிழ் ஊக்குவிப்புக் குழு 2010
No comments: