சச்சின் புதிய சாதனை - டெஸ்ட் கிரிக்கெட்டில் 14,000 ஓட்டங்கள்:

.
டெஸ்ட் போட்டிகளில் 14 ஆயிரம் ஓட்டங்களை கடந்த உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை சச்சின் டெண்டுல்கர் பெற்றுள்ளார்.

பெங்களுர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று அவர் இந்த சாதனையை புரிந்துள்ளார்.

சச்சின் இதுவரை 171 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 48 சதங்களையும், 57 அரைச்சதங்களையும் பெற்றுள்ளதோடு இதுவரை 14002 ஓட்டங்களை பெற்று சாதனை படைத்துள்ளார். இதில் அதிகபட்ச ஓட்டமாக 248 ஓட்டங்களை பெற்றமை குறப்பிடத்தக்கது.
டெஸ்ட் போட்டியில் 56.22 சராசரி வைத்துள்ள சச்சின், ஒரு நாள் போட்டியில் 45.12 சராசரி வைத்துள்ளார்.

இந்நிலையில் டெஸ்ட் வரலாற்றில் சச்சின் 14002 ஓட்டங்களை பெற்று முதலிடத்தில் உள்ளதோடு, அவுஸ்திரேலிய அணி தலைவர் பொன்டிங் 12,178 ஓட்டங்களை பெற்று இரண்டாவது இடத்திலும், மேற்கிந்திய அணியின் வீரர் பிரைன் லாரா 11,580 ஓட்டங்களுடன் 3 ஆவது இடத்திலும் உள்ளனர்.

No comments: