சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு: மொழிபெயர்ப்பு அரங்கு

.
இலங்கையில் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டில் மொழிபெயர்ப்பு அரங்கும் இடம்பெறவுள்ளது.

குறிப்பிட்ட அரங்கில், கண்காட்சிக்காக இதுவரையில் வெளியான தமிழ் - ஆங்கில, ஆங்கிலம் - தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள் எதிர்பார்க்கப்படுகிறது. படைப்பாளிகள் மற்றும் இலக்கிய மொழிபெயர்ப்பாளர்களின் முயற்சியினால் ஏற்கனவே வெளியான நூல்களை அனுப்பிவைக்கலாம்.

சிறுகதை, நாவல், கவிதை, வரலாறு, சிறுவர் இலக்கியம் மற்றும் பிறமொழி இலக்கியங்கள் இக்கண்காட்சியில் இடம்பெறவுள்ளன.

குறிப்பிட்ட மொழிபெயர்ப்பு நூல்களை இக்கண்காட்சியில் இடம்பெறச்செய்வதற்காக எழுத்தாளர்களினதும் மொழிபெயர்ப்பாளர்களினதும் ஆதரவு கோரப்படுகிறது. எனவே மொழிபெயர்ப்பு நூல்கள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கண்காட்சி முடிவுற்றதும் உரியமுறையில் அவை அனுப்பிவைக்கப்படும்.

மொழிபெயர்ப்பு நூல்களை 20-12-2010 ஆம் திகதி முன்பதாக அனுப்பவேண்டிய முகவரி:

International Tamil Writers Forum

3 B, 46th Lane, Colombo-06. Srilanka.

மேலதிக விபரங்களுக்கு:

திக்குவல்லை கமால்
00 11 94 38 22 92 118

E.Mail:  international.twfes@yahoo.com.au

editor@gnanam.info
dickwellekamal@gmail.com

No comments: