உலக சாதனைகளிலேயே மிகவும் மகத்தான மாபெரும் சாதனையை நிலை நாட்டியிருக்கிறது சிலி நாடு. தங்கச் சுரங்கத்துக்குள் சிக்குண்டு இறந்து விட்டனர் எனக்கருதப்பட்ட 33 தொழிலாளர்களை 68 நாள்கள் மேற்கொண்ட கடும் முயற்சியின் விளைவாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சிலி நாட்டின் இந்த மனிதநேய சாதனை, இதற்கு முன்னர் உலகின் வேறெந்தத் தேசத்தினாலும் அடையப்படாத ஒன்று
உலக வரலாற்றிலேயே, ஏன் மனித வரலாற்றிலேயே சிலியின் சாதனை பிரமிக்கத்தக்க ஒன்றாகும்
அபிவிருத்தி அடைந்த, தொழில்நுட்பத்திலும் விஞ் ஞான வளர்ச்சியிலும் முன்னணி வகிக்கும் நாடுகள், வல் லரசுகள் என்ற பெயர் வாங்கிய நாடுகள், தம்மால் எதுவும் முடியும் என்று அளவுக்கு அதிகமாகப் பீற்றிக்கொள்ளும் விஞ்ஞானிகள் மலிந்த நாடுகள், எதுவுமே இயற்ற முடி யாத சாதனையை உலகப் படத்தில் சிறு கீற்றாகத் தெரி யும் சிலி நாடு நிலைநாட்டியுள்ளது.
தென்அமெரிக்க நாடான சிலியைப் பற்றி உதைபந் தாட்டப் போட்டிகளில் மட்டுமே அறிந்திருக்கிறோம். வடக்கே "அட்டகாமா' என்ற பாலைவனத்தையும் தெற்கே பனிக்கண்டமான "அந்தாட்டிக்' கண்டத்தையும் தொடு வதாக சிலி நாட்டின் அமைவிடம் உள்ளது. இது நேரெ திர் தன்மையான ஒருபுறம் வரண்ட பாலைநிலமும் மறு புறம் உறைந்த பனிக்கட்டிகளையும் கொண்ட புவியி யல் நிலையை கொண்டதாகும். குறுகலான, அதே வேளை மிக நீளமான நிலப்பரப்பை உடைய நாடு என்ற சிறப்பும் சிலிக்கு உண்டு. 7 லட்சத்து 56 ஆயிரத்து 950 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவை உடைய சிலி நாட்டில் 16 லட்சத்து 958 ஆயிரம் மக்களே வசிக்கின்றனர். நாட் டின் தனிநபர் வருமானம் 9 ஆயிரத்து 879 அமெரிக்க டொலர்களாகும். தனிநபர் வருமானத்தில் உலகில் 51 ஆவது இடத்தை வகிக்கிறது.
அடிக்கடி நிலநடுக்கங்களைச் சந்திக்கும் நாடாகவும் சிலி விளங்குகிறது. பதிவுகளின்படி 1730 முதல் இது வரை 24 பாரிய நிலநடுக்கங்கள் சிலியில் ஏற்பட்டு உயி ரிழப்புகளும் அழிவுகளும் உண்டாகியுள்ளன. நிலத்துக் குக் கீழ் படிந்திருக்கும் கனிய வளங்களிலேயே இதன் பொருளாதாரம் தங்கியுள்ளது.
அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வலுச் சேர்க்கும் தங்கச் சுரங்கங்களும் தாமிரச் சுரங்கங்களும் நிறைந்து காணப்படும் கோயியாபோ நகருக்கு அருகே சான்ஜோல்மைன் என்ற பகுதியில் இந்த வியத்தகு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
620 மீற்றர் ஆழமான சுரங்கம் ஒன்றில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அதிலிருந்து வெளியே வரமுடியாத வாறு அது இடிந்து விழுந்ததில் இந்த மிகப்பெரும் விபத்து நேர்ந்தது. முப்பத்திமூன்று மனித உயிர்களி னதும் அருமை பெருமையை உணர்ந்த அந்நாட்டு அரசாங்கம் அவர்களை மீட்டு எடுப்பதற்குப் பதினேழு நாள்களாகப் பெரும் பற்றுதியோடு, பலப்பல சிரமங் களைத் தாங்கிப் பாடுபட்டது.
தமது நாட்டுப் பிரஜைகள் 33 பேரையும் உயிருடன் காப்பாற்றிவிடவேண்டும் என்ற ஓர்மத்துடனும் உறுதியு டனும் அந்நாட்டு அரசாங்கமும் அதிகாரிகளும் செயற் பட்டனர். அதற்கான உத்திகளையும் வியூகங்களையும் செயலாக்கினர். பதினேழு நாள்களாக இடைவிடாது உழைத்தனர். இதுவிடயத்தில் சிலி நாட்டின் ஜனாதிபதி செபஸ்ரியன் பினேரா அதிக அக்கறை காட்டினார். தமது நாட்டுப் பிரஜை ஒருவர்தானும் மரணிக்க இடம்தராத வகையில் மீட்புப் பணிகளை முடுக்கிவிடச் செய்தார். அதில் வெற்றியும் கண்டார். மீட்புப் பணி நடைபெறு வதை நாள்தவறாது நேரில் சென்று அதில் ஈடுபட்ட வர்களுக்கு ஊக்கமளித்தார்.
சிலி நாட்டில் அந்தநாட்டு அரசின் நாட்டுத் தலை வரின் மனிதநேயம் வெற்றிகண்டது. ஒரு தொழிலாளி யின் உயிர்தானும் பிரிந்துவிடாமல் மீட்பதற்கு அந்தப் பணியில் ஈடுபட்டவர்களைத் தட்டிக்கொடுத்தார். வெற்றியும் கண்டார். உலக சாதனையை நிலைநாட்டி மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்திருக்கிறார்.
சிலி நாட்டின் இந்தச் சாதனையை, அந்த நாட்டு அரசாங்கத்தின் நாட்டின் தலைவரான ஜனாதிபதியின் மனித நேயத்தையும், மனித உயிர்களை மதிக்கும் மாண்பையும் கேள்விப்பட்டதுமே
எங்கள் நாட்டில் தமிழ் மக்களின் உயிர்கள் அரசாங் கப் படைகளாலேயே காவுகொள்ளப்பட்ட நினைவுகள் எவர் மனதிலும் நிழலாடாது போகா. உயிர், அது மனித னுடையதோ; கடவுளின் இயற்கையின் கொடையால் உற்பவித்த ஏனையவற்றினுடையனவோ கௌர வத்துடன் பேணப்பட்டு, பாதுகாக்கப்படவேண்டும் என்பது மனுநீதி.
ஆனால் இலங்கை நாட்டில் தமிழ்மக்களின் உயிர்கள் மதிக்கப்படாமையும் மனிதநேயம் அறவே வேரறுந்து போனமையும் 1958 ஆம் ஆண்டின் இனக்கலவரத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
அதன் பின்னர் தொடர்ந்து நிலைகொண்ட ஆயுதப் போராட்டமும் அதனை அடக்குவதென்ற போர்வையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட இராணுவ அடக்கு முறையும் இந்நாட்டின் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் உயிர்களை துடிக்கத்துடிக்கப் பறித்த பாழ்பட்ட தேசமாக மாறிநிற்கிறது. விடுதலை பெற்ற பின்பும் தாழ்வுற்றுக் கெட்டு நிற்கும் இந்தத் தேசந்தன்னை வாழ்விக்க இன்னொரு காந்தி பிறக்கும் வரை காத்திருக்க வேண் டுமோ என்ற கேள்வியே இலங்கையில் எல்லோர் மனதையும் நெருடுகிறது.
Nanri Uthayan
3 comments:
விடுதலை பெற்ற பின்பும் தாழ்வுற்றுக் கெட்டு நிற்கும் இந்தத் தேசந்தன்னை வாழ்விக்க இன்னொரு காந்தி பிறக்கும் வரை காத்திருக்க வேண் டுமோ என்ற கேள்வியே இலங்கையில் எல்லோர் மனதையும் நெருடுகிறது.
--------------------------------
காந்தியினால் இந்தியா சுதந்திரம் அடையவில்லை. 2ம் உலகப் போரின் இழப்பினால் தான் பிரித்தானியா இந்தியா, இலங்கை போன்ற நாடுகளை விட்டு வெளியேறியது.
சிலி நாட்டில் அந்தநாட்டு அரசின் நாட்டுத் தலை வரின் மனிதநேயம் வெற்றிகண்டது. ஒரு தொழிலாளி யின் உயிர்தானும் பிரிந்துவிடாமல் மீட்பதற்கு அந்தப் பணியில் ஈடுபட்டவர்களைத் தட்டிக்கொடுத்தார். வெற்றியும் கண்டார். உலக சாதனையை நிலைநாட்டி மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்திருக்கிறார். எங்கள் நாட்டில் தமிழ் மக்களின் உயிர்கள் அரசாங் கப் படைகளாலேயே காவுகொள்ளப்பட்ட நினைவுகள் எவர் மனதிலும் நிழலாடாது போகா. உயிர், அது மனித னுடையதோ; கடவுளின் இயற்கையின் கொடையால் உற்பவித்த ஏனையவற்றினுடையனவோ கௌர வத்துடன் பேணப்பட்டு, பாதுகாக்கப்படவேண்டும் என்பது மனுநீதி.
ஆனால் இலங்கை நாட்டில் தமிழ்மக்களின் உயிர்கள் மதிக்கப்படாமையும் மனிதநேயம் அறவே வேரறுந்து போனமையும் 1958 ஆம் ஆண்டின் இனக்கலவரத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
அதன் பின்னர் தொடர்ந்து நிலைகொண்ட ஆயுதப் போராட்டமும் அதனை அடக்குவதென்ற போர்வையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட இராணுவ அடக்கு முறையும் இந்நாட்டின் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் உயிர்களை துடிக்கத்துடிக்கப் பறித்த பாழ்பட்ட தேசமாக மாறிநிற்கிறது.
-----------------------------------------------------
சிங்கள நாட்டில் சிங்களவர்களுக்கு சிங்கள அரசு மனித நேயம் பார்க்கிறது. தமிழர்களை மனிதர்களாக சிங்களம் பார்ப்பதில்லை-
[quote]இன்னொரு காந்தி பிறக்கும் வரை காத்திருக்க வேண் டுமோ என்ற கேள்வியே இலங்கையில் எல்லோர் மனதையும் நெருடுகிறது.[/quote]
இன்னோரு காந்தி பிறக்க வேணுமோ? காந்தி பிறந்த தேசத்திலயே சுதந்திரம் இல்லாமல் சனம் இருக்குது ,இந்த இலட்சணத்தில் சிறிலங்காவில ஒரு காந்தி பிறக்க வேணும் என்று கட்டுரையாளர் கனவுகாணுகிறார்........ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...கற்பனைகு,ம் ஒரு எல்லை வேணுமுங்கோ
Post a Comment