.
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணியை 2-0 என்ற வெற்றிக் கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி சூறையாடியதைப் பொறுத்துக் கொள்ள முடியாத காமன்வெல்த் போட்டிக்காக வந்திருந்த ஆஸ்திரேலிய வீரர்கள், கேம்ஸ் வில்லேஜ் அறைகளை சூறையாடினர். சச்சின் டெண்டுல்கரையும் சரமாரியாக விமர்சித்து திட்டியுள்ளனர்.
ஆஸ்திரேலியர்களுக்கு விளையாட்டு உணர்வை விட நிறவெறியும், இனவெறியும்தான் அதிகம். இது உலகம் அறிந்த ஒன்று. ஆஸ்திரேலியா வுக்கு விளையாட வரும் எந்த ஆசிய நாட்டு வீரரையும், குறிப்பாக புகழ் பெற்றவர்களை, திறமையாளர்களை அவர்கள் அவமதிக்காமல் திருப்பி அனுப்பியதில்லை. இது வரலாறு.
இந்த நிலையில் கிரிக்கெட்டில் ஏற்பட்ட படு தோல்விக்காக, காமன்வெல்த் போட்டி கேம்ஸ் வில்லேஜ் அறைகளை நாசப்படுத்தி தங்களது வெறித்தனத்தை வெட்டவெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர் ஆஸ்திரேலியர்கள்.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியில் 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா படு தோல்வியடைந்தது. இது காமன்வெல்த் போட்டிக்காக விளையாட வந்திருந்த ஆஸ்திரேலிய வீரர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியது.
காமன்வெல்த் போட்டியில் நாம் முதலிடத்தைப் பிடித்த நிலையில், இந்தியாவிடம் கிரிக்கெட்டில் தோற்றுப் போய் விட்டோமே என்று ஆத்திரமடைந்த அவர்கள் தாங்கள் தங்கியிருந்த 8வது மாடி அறையில் வெறியாட்டத்தில் குதித்தனர்.
மின்சார விளக்குகள், டேபிள்கள், சேர்கள், கட்டில்கள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கி ரவுடித்தனமாக நடந்துள்ளனர். மேலும் ஒரு வாஷிங் மெஷினையும் மேலேயிருந்து கீழே தூக்கிப் போட்டு வெறித்தனத்தைக் கொட்டியுள்ளனர்.
அத்தோடு நில்லாமல் இந்திய கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கரையும் அவர்கள் சகட்டு மேனிக்கு திட்டித் தீர்த்தனராம். அவரை கடுமையான வார்த்தைகளாலும் விமர்சித்துள்ளனர்.
அங்கிருந்த இந்திய ஊழியர்கள் ஆஸ்திரேலிய வீரர்களை எச்சரித்தும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. உடனடியாக கேம்ஸ் வில்லேஜிலிருந்து போலீஸாருக்குத் தகவல் போனது. ஆனால் அவர்களோ அப்படியா என்று கொட்டாவி விட்டபடி கேட்டுக் கொண்டதோடு முடித்துக் கொண்டனர்.
இந்திய, ஆஸ்திரேலியா இடையிலான தூதரக உறவுகள் பாதிக்கப்படும் என்ற அக்கறையால்தான், ஆஸி வீரர்களின் இந்த வன்முறை வெறியாட்டத்தை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனராம்.
இதுகுறித்து காமன்வெல்த் போட்டிக்கான ஆஸ்திரேலியக் குழுத் தலைவர் பெர்ரி கிராஸ்ஒயிட் கூறுகையில், யாராவது ஆஸ்திரேலியர்கள் இதுபோல நடந்திருந்தால் அது எனக்கு ஆச்சரியத்தையே கொடுக்கும். ஆனால் உண்மையில் அப்படி யாரும் ஈடுபடவில்லை.
8வது மாடியிலிருந்து வாஷிங் மெஷின் தூக்கி வீசப்பட்டது உண்மைதான். ஆனால் அப்போது வேறு சில நாட்டவர்கள் அங்கிருந்தனர். அவர்கள்தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்றார்.
டெல்லி போலீ்ஸாரிடம் இப்படி ஒரு வன்முறை நடந்ததாமே என்று கேட்டபோது, வன்முறை நடந்தது உண்மைதான். ஆனால் எங்களுக்கு போட்டி அமைப்புக்குழுவிடமிருந்து இதுவரை புகார் வரவில்லை. வந்தால்தானே நடவடிக்கை எடுக்க முடியும் என்று படு கூலாக கூறினர்.
நஷ்ட ஈடு கோரும் இந்தியா:
இந்த நிலையில், ஆஸ்திரேலிய வீரர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தால் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு தருமாறு ஆஸ்திரேலியாவைக் கோரியுள்ளது இந்தியா.
இதுகுறித்து காமன்வெல்த் போட்டி அமைப்புக் குழுவின் பொதுச் செயலாளர் லலித் பேனட் கூறுகையில், ஆஸ்திரேலிய வீரர்கள் நடத்தியது வன்முறை அல்ல. கொண்டாட்டம்தான் அது. அதில் வாஷிங் மெஷினைத் தூக்கிப் போட்டு விட்டனர்.
இதற்கான சேதத் தொகையை வழங்க வேண்டும் என ஆஸ்திரேலியக் குழுவிடம் கோரியுள்ளோம். அவர்களும் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். இதனால் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்கிறார்.
இதற்கிடையே, ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த ஒருவர் மோசமான நடத்தை காரணமாக சில தினங்களுக்கு முன்பு நாட்டுக்குத் திருப்பி அனுப்பட்டுள்ளார். அவர் யார் என்ற விவரத்தை ஆஸ்திரேலியத் தரப்பு தெரிவிக்கவி்ல்லை.
நன்றி தேனீ
2 comments:
யோவ் வாழுகிறது அவுஸ்திரெலியாவில், ஆனால் இந்தியப் புழுகுகளை இங்கே இணைத்து அவுஸ்திரெலியா இனவாத நாடு என்று சொல்கிறீர்கள்.
விளையாட்டில இது எல்லாம் சகஜமப்பா.....
40 ஆயிரம் மக்கள் கொலை செய்யும் பொழுது வராத உணர்வு இப்ப மட்டும் புட்டுகொண்டு வருகிறது இந்தியாவுக்கு..
அது சரி இப்ப அவுஸ்ரேலியாக்காரன் இப்படி செய்து போட்டான் என்று அவுஸ்ரேலியாவில இருக்கிற டமிழ்ஸ் எல்லாம் போர் முரசு கொட்ட வேண்டும் என்று தேனீ காரர் நினக்கினம்போல, அவர்களுடன் சேர்ந்து ...................
Post a Comment