தமிழ் சினிமா

.
*கைமாறிய 'சுல்தான்'கவலையை உதறிய ரஜினி
*மலையாளப் படத்தில் நடிக்கிறார் ஏ ஆர் ரஹ்மான்!
*நடிகர் விஜய் செய்த உதவி மரணத்தை வென்ற சிறுவன்

கைமாறிய 'சுல்தான்'கவலையை உதறிய ரஜினி
.

எந்திரனுக்கு முன்பே துவங்கப்பட்டு எந்திரனுக்கு பிறகும் இழுபறியில் கிடந்த படம் சுல்தான் தி வாரியர். என்னென்னவோ நினைத்து படத் தயாரிப்பில் இறங்கிய சவுந்தர்யா ரஜினி, இப்படத்தின் மூலம் கற்றுக் கொண்ட பாடம் வாழ்நாள் முழுக்க தாக்குப்பிடிக்கிற அனுபவம்! அவரது திருமணத்திற்கு பிறகு சுல்தானின் போக்கில் திடீர் முன்னேற்றம்.





இப்படத்தை ஜெமினி லேப் மொத்தமாக வாங்கியிருக்கிறது. படத்தின் இயக்குனரான சவுந்தர்யாவை மாற்றிவிட்டு அவருக்கு பதிலாக கே.எஸ்.ரவிக்குமாரை இயக்க வைக்கவும் முடிவெடுத்திருக்கிறது இந்நிறுவனம். ரஜினி ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தப் போகும் இந்த மாற்றங்கள்தான் இன்டஸ்ட்ரியின் பரபரப்பு செய்தி.

இதுவரை எடுக்கப்பட்ட அனிமேஷன்களை பயன்படுத்திக் கொள்வதுடன், ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரிஜனல் ரஜினியையும் உள்ளே நுழைக்கப் போகிறாராம் கே.எஸ்.ரவிக்குமார். இதற்காக இருபது நாட்கள் கால்ஷீட் கொடுக்க சம்மதித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இமயத்திலிருந்து சென்னைக்கு திரும்பியதும் படப்பிடிப்பு துவங்குகிறது.

ரவிக்குமார் பொறுப்பேற்றுக் கொண்டதால் படத்தில் கரம் மசாலாவுக்கு பஞ்சமே இருக்காது. எந்திரன் தராத நிம்மதியை கூட ரசிகர்களுக்கு இந்த படம் ஏற்படுத்தி தரலாம்!
நன்றி தமிழ்சினிமா.கொம்
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


நடிகர் விஜய் செய்த உதவி-மரணத்தை வென்ற சிறுவன்!

_

  நடிகர் விஜய் சரியான நேரத்தில் செய்த உதவியால் மரணத்தின் விளிம்பிலிருந்த சிறுவன் காப்பாற்றப்பட்டுள்ளான். ஆந்திராவைச் சேர்ந்த சிறுவன் யஷ்வந்த். அவனுக்கு சிறு வயதிலேயே ரத்த அழுத்தம் இருந்தது. வாந்தி, தலைவலியால் அவதிப்பட்டான். மூக்கில் இருந்தும் அடிக்கடி ரத்தம் வழிந்தது.


ஆந்திராவில் நிறைய மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தும் டாக்டர்கள் காப்பாற்ற முடியாது என கை விரித்தனர். அறுவைச் சிகிச்சை செய்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.

நடிகர் லாரன்ஸ் சென்னையில் அறக்கட்டளை வைத்து குழந்தைகளுக்கு மருத்துவ வசதி அளிப்பதை கேள்விப்பட்டு அவரை அணுகினர். லாரன்ஸ் அச்சிறுவனை விஜய்யிடம் அழைத்து சென்றார். சிறுவனைப் பார்த்த விஜய் எவ்வளவு செலவானாலும் நான் பார்த்து கொள்கிறேன். சிறுவனை காப்பாற்றுங்கள் என்றார். மலர் மருத்துவமனையில் அச்சிறுவன் சேர்க்கப்பட்டான்.


அவனைச் சோதித்த டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், சிறுவனின் இதயத்திலிருந்து கிட்னிக்கு செல்லும் வால்வில் கோளாறு உள்ளதென்றும் ஆபரேஷன் செய்தால் பல லட்சங்கள் செலவாகும் என்றும் கூறினார். மொத்த செலவையும் விஜய்யே ஏற்றதால் சிறுவனுக்கு உடனடியாக சிகிச்சைத் தொடங்கப்பட்டது. பெரிய அறுவைச் சிகிச்சை மூலம் சிறுவனைப் பிழைக்க வைத்துவிட்டனர் மருத்துவர்கள். மருத்துவமனையிலிருந்து வெளியில் வந்ததும், விஜய்க்கு நன்றி சொல்லத் தேடினான் சிறுவன்.

காவலன் படப்பிடிப்பிலிருந்த விஜய்யைச் சந்தித்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தான் யஷ்வந்த். அவன் பெற்றோரும் விஜய்யின் கையை பிடித்துக் கொண்டு அழுதனர். இந்த சந்திப்பு மனதை உறுக்குவதாக இருந்தது. அவர்களை ஆறுதல்படுத்தி பத்திரமாக ஊர் போய்ச் சேரும்படி கூறி அனுப்பி வைத்தார் விஜய்.

Nanri virakesari

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


மலையாளப் படத்தில் நடிக்கிறார் ஏ ஆர் ரஹ்மான்!
  சின்ன பட்ஜெட்டில் தயாராகும் மலையாளப் படங்களில் பெரிய சம்பளம் வாங்கும் ரஹ்மான் இசை சாத்தியப்படாது என்று முடிவு செய்து, அவரை நடிக்க வைப்பதில் முனைப்பு காட்டி வெற்றியும் பெற்றுள்ளனர் மலையாளப் படவுலகினர்.

ஜெயராஜ் இயக்கும் புதிய படத்தில் இசையமைப்பாளராகவே நடிக்கிறாராம் ஏ ஆர் ரஹ்மான்.

இந்தப் படத்தில் மம்முட்டியும் ஜெயசூர்யாவும் நடிக்கிறார்கள்.

இந்தப் படம் ஒரு துப்பறியும் கதை. வழக்கம் போல துப்பறியும் நிபுணர் பாத்திரத்தில் மம்முட்டி நடிக்கிறார். அதில் சில காட்சிகளில் ஏஆர் ரஹ்மானிடம் விசாரிப்பது போல எடுக்க வேண்டியிருந்ததால், அவரையே நடிக்க வைத்துவிடலாம் என முடிவு செய்து கேட்டிருக்கிறார்கள். தயங்கித் தயங்கி கேட்டிருக்கிறார்கள்.

ஒருநாள் கால்ஷீட் போதும், அதுவும் வீட்டிலேயே ஷூட்டிங் என்றதும் ஒப்புக் கொண்டாராம் ரஹ்மான்

No comments: