உள்ளங்கள் இரண்டு கவிதை

.

ஒண்றணக் கலந்த
உன்னத நாள் நினைவுகள் இன்று
உணர்வுகள் அலைபாய
கண் இமைகள் நடனமாட
இதயம் இசை போட
இன்பத்தில் நான் மகிழ்ந்து
ஒரு நொடி ஊமையான
அந்த நாள் நினைவுகள்.
அன்பான துனைவி எனக்கு
ஹலாலாக தாரமான தத்துவனாள்
இன்னாள் எங்கள் திருமண நாள்
செல்வியானவள் திருமதியாகி
சேவகம் செய்த செம்மையான
எட்டாண்டுகள் எட்டிய நினைவுகள் இன்று
பக்கத்து வீட்டிலிருந்து பார்த்த நாள் போய்
உணர்வு புர்வமாக உறவாக மாறிய உத்தம நாள்.
எங்களின் திருமண நாள் நினைவு இன்று.


மாதானவள் மதுவாகி
இல்லறம் இன்பமாகி
உணர்வுகள் உதயமாகி
உள்ளாசமாய் இணைந்து
வாழ்க்கைப் பாதையில் முதல் முதல்
பாதம் வைத்து குடும்ப பொறுப்பேற்ற நாள் இன்று.

மலர் சேர்த்து அலங்கரித்த படுபக்கை அழகை
பார்த்து ரசித்த அந்த நாள் ஞாபகம்
எட்டாண்டு எட்டியது இன்று.
இல்லரம் சேர்ந்து ஒண்றண கலந்து
இன்பமாய் சிரித்து மகிழ ஆசைதான் இன்று
விதியின் வழியில் சென்ற பாதையில்
மத்திய கிழக்கின் கத்தாரில் நான்.
மண்வாசனையோடு சொந்த மண்ணாம் சிலோனில் அவள்….
அடுத்த நினைவாண்டில் பிரிவின்றி இனைந்து வாழத்தான் ஆசை..
வாழனும் வாழ்த்துங்கள் வாழ்கவெண்று….

No comments: