புலி சந்தேக நபர்கள் ஆஸ்திரேலியா பயணம்; இலங்கை எச்சரிக்கை
சட்டவிரோதமாக படகொன்றில் 200 விடுதலைப் புலி சந்தேக நபர்கள் பயணித்திருப்பது தொடர்பில் ஆஸ்திரேலியாவுக்கு, இலங்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு படகொன்றில் 200 விடுதலைப் புலி சந்தேக நபர்கள் ஆஸ்திரேலியாவை நோக்கிப் பயணித்திருப்பது தொடர்பில் தனக்கு தகவல் கிடைக்கப் பெற்றிருப்பதாக ஆஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சேனக வலகம்பய குறிப்பிட்டார்.

 'சன் சீ' என்ற படகில் 200 விடுதலைப் புலி சந்தேக நபர்கள் சென்றிருந்ததாக தகவல் கிடைத்திருந்த போதிலும், எந்த நாட்டுக் கொடியுடன் குறித்த படகு பயணித்திருந்தது என்பது தொடர்பில் எதுவும் தெரியவரவில்லை எனவும் அவர் கூறினார். இது தொடர்பில் ஆஸ்திரேலியாவுக்கு தாம் அறிவித்திருப்பதாகவும் சேனக வலகம்பய தெரிவித்தார். இதேவேளை, இது தொடர்பில் தமக்கு எந்தவித தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை என கடற்படைப் பேச்சாளர் அத்துல செனவிரத்ன தெரிவித்தார். படகொன்றில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் கனடாவை நோக்கி பயணித்திருப்பதாகவும், பின்னர் குறித்த படகு ஆஸ்திரேலியாவை நோக்கிப் பயணத்தை மேற்கொண்டிருப்பதாகவும் ஆஸ்திரேலிய ஊடகமொன்று ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது.

1 comment:

kirrukan said...

இதைப்பற்றி எங்கன்ட தமிழ் பிரதிநிதி ஒருவர் ஒரு வருடத்திற்கு முதலே அவுஸ்ரேலிய ஊடகத்து சொல்லிபோட்டர்...இவர் இப்பதான் எதோ தான் புதுசா கண்டுபிடிச்சமாதிரி அறிக்கைவிடுகிறார்.

புலிகளும் அரசியல் கைதிகள் தான் என்று உந்த தூதுவருக்கு தெரியாதோ?

சிறிலங்காவிலயே புலிகளுக்கு அடைக்கலம் கொடுக்கலாம் என்றால் அவுஸ்ரேலியாவில் கொடுத்தா என்னதப்புங்கோ?