புருஷோத்தமா மாதம் - இரண்டாம் பகுதி



ஹரே கிருஷ்ணா! பத்ம புராணத்தில் இருந்து புருஷோத்தமா மாதத்தின் புகழின் முதல் பகுதியினை போன வாரம் பார்த்தோம். இரண்டாம் பகுதியினை இந்த வாரக் கட்டுரையில் பார்ப்போம்.





முழுமுதற் கடவுளின் இருப்பிடம் சென்றவுடன் பகவான் விஷ்ணு, கோபியர் சூழ இருந்த பகவான் கிருஷ்ணரை சந்தித்தார். ரமாதேவியின் கணவரான பகவான் விஷ்ணு, பகவான் கிருஷ்ணருக்கு தனது மரியாதையை தெரிவித்துக்கொண்டார். அழுதுக்கொண்டிருப்பினும், மல மாதத்தையும் பகவான் கிருஷ்ணரின் கமல பாதத்தில் மரியாதை செய்யும்படி பகவான் விஷ்ணு கூறினார். உடனே பகவான் கிருஷ்ணர் வினவினார்"அவள் ஏன் அழுதுக்கொண்டிருக்கிறாள்? கோலோக விருந்தாவனத்தில் இருப்பினும் அவள் அழுகிறாளே ஏன்?" என்றார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து இந்த வார்த்தைகளை கேட்ட பகவான் விஷ்ணு, இருக்கையிலிருந்து எழுந்து மல மாதத்தின் துயரமான நிலைமையை பற்றி எடுத்துரைக்க ஆரம்பித்தார். பாதுகாப்பின்றி இருந்த அந்த உபரி மாதத்தை காக்கும்படி மன்றாடினார். "பகவான் ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை தவிர இந்த நரக நிலையில் இருக்கும் உபரி மாதத்தை காத்து இரட்சிக்க யாராலும் முடியாது". இவ்வாறாக கூறி, பகவான் விஷ்ணு கை கூப்பியவாறு, பகவான் கிருஷ்ணர் முன் நின்றார்.

அதன் பிறகு ஸுத கோஸ்வாமி பேச ஆரம்பித்தார், "ஒ முனிவர்களே! பகவான் விஷ்ணு இருக்கையில் அமர்ந்த பிறகு, பகவான் கிருஷ்ணர் அவரிடம் மிகவும் தனிப்பட்ட விஷயத்தை பற்றி கூறினார். அந்த வார்த்தைகளை உங்களிடம் கூறப்போவதால், நீங்கள் அனைவரும் மிகவும் கவனமாக கேளுங்கள்".

புருஷோத்தமரான ஸ்ரீ கிருஷ்ணர் கூறியதாவது, "ஒ விஷ்ணு, இந்த உபரி மாதத்தை இங்கே கூட்டிக்கொண்டு வந்தது நீ செய்த நல்ல காரியமாகும். இந்த நடவடிக்கையால் உனது புகழ் இன்னும் அதிகரிக்கும். இந்த மல மாசத்தை நீ ஒப்புக்கொண்டதால், நானும் அவளை ஒப்புக்கொள்கிறேன். நான் இந்த மலமாசத்திற்கு என்னை போலவே தரம்,புகழ் , செல்வம், உணர்வு, வெற்றி மற்றும் பக்தர்களுக்கு வரம் அளிக்கும் குணங்களை தருகிறேன். இந்த மாதம் என்னை போலவே சக்தி வாய்ந்ததாக இருக்கும். நான் எனது எல்லா தெய்வீக குணங்களையும் இந்த மாதத்திற்கு அளிக்கிறேன், எனது பெயரை கொண்டு இந்த மாதம் புருஷோத்தம மாதமென்று இந்த உலகில் புகழப்படும்.

ஓ ஜனார்த்தனரே ! இவள் எனது எல்லா குணங்களையும் பெற்று இருக்கிறாள்,நானே இந்த புருஷோத்தம மாதத்தின் பாதுகாவலரும்,கணவனுமாய் இருப்பேன்.எனக்கு சமமாய் இருப்பதால் இவள் மற்ற எல்லா மாதங்களுக்கு தலைவியாய் இருப்பாள். இப்பொழுது முதல் இந்த மாதம் எல்லோராலும் வணங்கப்படும் .அனைவரும் இவளுக்கு நமஸ்காரங்ககளை செலுத்த வேண்டும் மற்றும் இவளை வணங்க வேண்டும். இந்த மாதம் என்னை போலவே அதனை பின்பற்றுபவர்களுக்கு எல்லா வரங்களையும் தர வல்லது. இந்த மாதத்தை வழிபடுபவர்களின் எல்லா பாவ விளைவுகளும் சாம்பலை போல எரிந்து விடும்,இந்த ஜட உலகில் எல்லா இன்பங்களையும் பெற்று இறை நாட்டிற்கு திரும்புவார்கள்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மேலும் கூறினார் "ஓ கருடத்வஜா!தபஸ் செய்பவர்கள்,நற்காரியங்களில் ஈடுப்பட்டுள்ள மகாத்மாக்கள்,பிரம்மசாரியத்தை கடைபிடிப்பவர்கள்,வாழ்நாள் முழுவதும் நோன்பு மேற்கொள்பவர்களால் கூட எனது கோலோகத்தை அடையமுடியாது. அனால் இந்த புருஷோத்தம மாதத்தை கடை பிடித்து பக்தர்கள் ஆகுபவர்கள் இந்த ஜட உலகை கடந்து எனது இறை நாட்டிற்கு திரும்புவார்கள். அனைத்து தவங்களை காட்டிலும் புருஷோத்தமா மாதத்தை கடைபிடிப்பதே சிறந்ததாகும். எவ்வாறு உழவன் சிறந்த அறுவடையை, பயிரினை செழுமையான நிலத்தில் விதைப்பதால் பெறுகிறானோ அவ்வாறே அறிவுள்ளவன் இந்த புருஷோத்தம மாதத்தில் பக்தி தொண்டினை முழுமுதற் கடவுளிடம் செலுத்தி அதன் பயனாய் இந்த உலகில் மகிழ்ச்சியான வாழ்வையும், இந்த உடலை நீத்த பின்பு இறை நாட்டிற்கும் செல்கிறான்".

துரதிர்ஷ்டமான அறியாமையில் இருக்கும் மனிதன் , எந்த விதமான் ஜபங்களையும் செய்யாமல் இருப்பவன், யாருக்கும் தானம் வழங்காமல் இருப்பவன், பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும்,அவரது பக்தர்களுக்கும் மரியாதை அளிக்காமல் இருப்பவன், பிராமணர்களிடம் தவறாக நடந்து கொள்பவன் , மற்றவர்களிடம் பகைமையை வளர்த்து கொள்பவன் , புருஷோத்தம மாதத்தை தூற்றுபவன் ஆகியோர் அளவற்ற காலம் நரகத்தில் இருப்பார்கள்". பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மேலும் கூறினார் "எவ்வாறு ஒரு மனிதன் இந்த புருஷோத்தம மாதத்தில் பக்தி தொண்டினை செய்யாமல் தனது வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்? "எவன் ஒருவன் புலன் இன்பங்களில் முழ்கி இந்த புனித மாதத்திற்கு முக்கியத்துவம் தர மறுக்கிறானோ அவன் நரகம் செல்லுவதற்கு தகுதியானவன் ஆகிறான். எல்லா மனிதர்களும் இந்த புருஷோத்தம மாதத்தில் சில பக்தி தொண்டினையாவது கீழ்கண்டவாறு செய்ய வேண்டும்.

· பகவான் ஸ்ரீ கிருஷ்ணரான என்னை எனது நாமங்ககளால் ஜபம் செய்தல்
· பகவத் கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தை பாரயணம் செய்தல்,முக்கியமாக பதினைந்தாவது அத்தியாயமான புருஷோத்தோம யோகத்தை பாரயணம் செய்தல்
· தானம் தருதல்
· தினமும் நெய் விளக்கு காண்பித்தல் போன்றவையாகும்

எனது ஆணையை ஏற்று எவன் ஒருவன் இந்த புருஷோத்தம மாதத்தை முறையாக நம்பிக்கையுடன் கடைபிடிக்கிறானோ அந்த அதிர்ஷ்டமிக்க நபர் புகழ், செல்வம்,நல்ல புத்திரனை இந்த ஜென்மத்திலேயே அடைவான். இந்த மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவித்த பின்னர் அவர்கள் எனது கோலோக தாமிற்கு வருவான்.ரமா தேவியின் கணவரே (விஷ்ணு) உங்களது இந்த மாதத்தை பற்றியான எல்லா சந்தேகங்களையும் விட்டு விடுங்கள். இந்த புருஷோத்தம மாதத்தை தங்களுடன் உங்களது வைகுந்தத்திற்கு அழைத்து செல்லுங்கள் என்றார்.

புருஷோத்தம மாதத்தின் சிறிய வரலாற்றை கூறிய பின்னர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், மிகுந்த கருணையோடு யுதிஷ்டரையும் திரோபதியையும் நோக்கி பின்னர் அர்ஜுனரிடம் பேச தொடங்கினார்.

ஓ சிங்கம் போன்றவனே ! இப்பொழுது புரிகிறதா ஏன் பாண்டவர்களாகிய நீங்கள் துன்ப படுகிறீர்கள் என்று ? சிறிது காலத்திற்கு முன்பு முடிந்த புருஷோத்தம மாதத்தை நீங்கள் அங்கீகரிக்கவில்லை ,அதனை கௌரவிக்கவுமில்லை.விருந்தவன சந்திரனின் அன்பிற்குரிய புருஷோத்தம மாதத்தை காட்டில் வாழ்ந்து வந்த பாண்டவர்களாகிய நீங்கள் வழி படவில்லை .அதனால் நீங்கள் துன்ப படுகிறீகள்.வியாசர் உங்களுக்கு கொடுத்த சடங்குகளை செய்தீர்கள், அனால் புருஷோத்தம மாதத்தை வழிபடாதவர்களுக்கு என் மீதான தூய பக்தி கிட்டாது.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மேலும் கூறினார்.நான் தற்போது திரௌபதியின் முந்தய ஜன்மத்தின் மிக முக்கியமான வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்ச்சியை பற்றி கூறபோகிறேன்.பூர்வ ஜன்மத்தில் திரௌபதி ஒரு பெரிய பிராமண ரிஷியான மேதாவியின் புதல்வி. அவளது தாயார் அவள் சிறு குழந்தையாக இருந்தபொழுதே இறந்ததால் அவள் அவளது தந்தையின் பராமரிப்பிலே வளர்ந்தாள்.அவள் ஒரு அழகி இருப்பினும் அவளுக்கு திருமணம் செய்ய அவளது தந்தை சிறிதும் அக்கறை காட்டவில்லை. அவளது தோழியர்கள் தமது கணவனுடனும், குழந்தைகளுடனும் மகிழ்ச்சியாக இருப்பதை கண்டு தனது நாட்களை மிக துயரத்துடன் கழித்தாள்.சிறிது காலத்தில் அவளது தந்தை இந்த ஜட உலகை விட்டு ஹரியின் புனித நாமங்களை கூறியவாறு சென்றார்.

இது அவரது மகளை மிகவும் துயரமடைய செய்தது.அதிர்ஷ்டவசமாக சிறந்த முனியான துர்வாசர் அவளது தந்தையின் மறைவிற்கு பின்னர் அவளது ஆஷ்ரமத்திற்கு வந்தார். முனிவரை கண்ட அந்த பெண் அவருக்கு நமஸ்காரங்களை தெரிவித்து, மிகுந்த மரியாதையுடன் அவரை வழிப்பட்டாள்.அவருக்கு பூவும், பழமும் அளித்தாள்.அவளது வரவேற்பில் மகிழ்ந்ததை முனி தெரிவித்த பொழுது அவள் புலம்பி அழ தொடங்கினாள். கவலைப்பட்ட முனி அவளது புலம்பலைப் பற்றி வினவத்தொடங்கினார்.அந்த பிராமண பெண் கூற தொடங்கினாள் "ஓ முனி துருவாசரே!எனது கடந்த காலம்,நிகழ் காலம் மற்றும் எதிர் காலத்தை நீர் அறிவீர்!எனக்கு எந்த விதமான பாதுகாப்பும் இல்லை.நான் எனது உறவினர்களை இழந்துவிட்டேன்.எனது பெற்றோர்கள் இறந்து விட்டனர்.எனக்கு மூத்த சகோதரன் என்று யாரும் இல்லை.எனக்கு திருமணமும் ஆகவில்லை ஆதலால் என்னை காப்பாற்ற கணவரும் இல்லை. ஆதலால் முனிவரே தயவு செய்து எனக்கு எதவது செய்து உதவுங்கள்.இந்த துயரத்திலிருந்து விடுப்பட ஏதேனும் உபாயம் கூறுங்கள் என்றாள்.இவளது பிரார்த்தனையை கேட்ட துருவாசர் இவளது துயர நிலையை கண்டு இவள் மீது இரக்கம் கொண்டார்.

துருவாச முனி கூறினார் "ஓ அழகியே !இப்பொழுது முதல் மூன்று மாத காலங்களில் மிக சிறந்த மாதமான புருஷோத்தம மாதம் தொடங்கும்.இது ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிக உகந்த மாதம் ஆகும்.இந்த புனித மாதத்தில் புனித தீர்த்தத்தில் குளிப்பதால் ஆணோ,பெண்ணோ அவர்களது பாவம் அனைத்தும் அவரை விட்டு நீங்கும். இந்த புருஷோத்தம மாதமானது எல்லா மாதங்களை காட்டிலும் , ஏன் கார்த்திகை மாதத்தை காட்டிலும் சிறந்தது.மற்ற அனைத்து மாதங்களின் புகழ் இதன் பதினாறின் ஒரு பங்கை கூட பெறாது. இந்த மாதத்தில் புனித தீர்த்தத்தில் நீராடும் ஒருவருக்கு கிடைக்கும் தகுதியானது 12,000 வருடம் கங்கையில் நீரடுவதால் ஏற்படும் பலனுக்கு ஒப்பானது.அல்லது பிரகஸ்பதி சிம்ம லக்னத்திற்கு செல்லும்பொழுது கங்கையில் அல்லது கோதவரியில் நீராடும் பலனை பெறுகிறான். நீ இந்த மாதத்தில் புனித தீர்த்தத்தில் நீராடினாலோ,தானம் கொடுத்தாலோ,பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பெயரை உச்சாடனம் செய்தாலோ,உனது துயரம் அனைத்தும் ஓடி விடும்.உனது வாழ்க்கை பூரணமாகும்,உனது ஆசைகள் பூர்த்தியாகும்.தயவு செய்து எனது அறிவுரையை கேள்.வரவிருக்கும் புருஷோத்தம மாதத்தை நல்ல முறையில் வழிப்பட மறந்துவிடாதே என்றார்.

இதனை கூறிய பிறகு துருவாச முனி மௌனமானர்.துரதிருஷ்டவசமாக அந்த பிரமண பெண் இவரது வார்த்தையை நம்பவில்லை, மாறாக இவரிடம் கோபம் கொண்டு அவரை தூற்ற தொடங்கினாள்."ஓ முனியே நீங்கள் பொய் கூறுகிறீர்கள்." எவ்வாறு இந்த உபரி மாதம்,மல மாதம் என்று அழைக்கப்படும் மாதம்,மகம்,கார்த்திகை,விஷாக மாதத்தை காட்டிலும் சிறந்ததாய் இருக்க முடியும்? எனக்கு உங்களது வார்த்தையில் நம்பிக்கை இல்லை.நீங்கள் என்னை ஏமாற்ற பார்க்கிறீர்கள்.இந்த உபரி மாதம் எந்த நல்ல காரியம் செய்வதற்கும் ஏற்றது அல்ல என்றாள்.

அடுத்த வரம் தொடரும்...

என்றும் அன்புடன்
கனஷியாம் கோவிந்த தாஸ்

No comments: