அவுஸ்திரேலிய விமானம் விழுந்து நொருங்கியது

அவுஸ்திரேலிய மைனிங் சண்டான்ஸ் கொம்பனியில் கடமை புரியும் ஆறு பேரோடு இரண்டு பிரித்தானியர், இரண்டு பிரென்ஸ் மற்றும் ஒரு அமெரிக்கரோடு பயணித்த விமானம் ஒன்று கொன்கோவில் விழுந்து
நொருங்கியதால் எல்லோரும் மரணமானார்கள். இதனால் 200 வருடங்கள் மைனிங் அனுபவம் வீணாக்கப்பட்டது. சண்டான்ஸ் தலைவர் திரு கென் ரல்பொட் இறந்தவர்களில் ஒருவர் ஆவர். இவர் 965 மில்லியன் வெள்ளிகளுக்கு சொத்து வைத்திருப்பதாக அறியப்படுகிறது. சண்டான்ஸ் கொம்பனிக்கு தலைவராக தற்காலிகமாக ஜோர்ச் ஜோன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
திரு கென் ரல்பொட் தனது 30 மில்லியன் பெறுமதியான விமானம் பெரிதானதாலும் அவர்கள் இறங்க வேண்டிய விமானத்தளம் சிறியதானதாலும் அவர்கள்  வேறு  ஒரு 26 பேர் பயணிக்க கூடிய ஒரு சிறிய விமானமான காசா சி212 டை  வாடைக்கு எடுத்துச் செல்லும் போதே விபத்து நடைபெற்றது.

No comments: