மூன்று ஆஸ்திரேலிய இராணுவத்தினர் மரணம்
செய்தித் தொகுப்பு . கரு
மூன்று அவுஸ்திரேலியா இராணுவத்தினர் ஆப்கானிஸ்தானில் ஷெலிகொப்ரர் விபத்தில் சென்ற திங்கட்கிழமை மரணமாகியுள்ளார்கள். ஏழு இராணுவத்தினர் காயப்பட்டுள்ளார்கள். அவர்களில் இருவர் மோசமான நிலையில் உள்ளனர். 15 இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற அந்த ஷெலிகொப்ரரில் 10 பேர் அவுஸ்திரேலியா இராணுவத்தினர் ஆவர். இந்த விபத்து எதிரிகளால் ஏற்பட்டதல்ல என கூறப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் மரணமான அவுஸதிரேலிய ராணுவத்தின் எண்ணிக்கை இத்துடன் 16 ஆக உயர்ந்துள்ளது. முன்னாள் பிரதமர் திரு கெவின் ரட் பாரளுமன்றத்தில் இந்த விபத்து அவுஸ்திரேலியாவிற்கும் அவுஸ்திரேலிய காவல் துறைக்கும் மிக கவலை தரும் நாள் என்று கூறியிருந்தார். அவர் தனது அனுதாபங்களை குறிப்பாக அவர்களுடைய குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் தெரிவித்திருந்தார்.
No comments:
Post a Comment