மெல்பேர்னில் ”ஆஞ்சநேயம்”  நாட்டிய நிகழ்வு


மெல்பேர்ன் தமிழ் இளையோர் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ”ஆஞ்சநேயம்” என்ற நாட்டிய நிகழ்வு  எதிர்வரும் ஜுலை 3 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணி முதல் றிங்வூட் ஈஸ்ட்டில், மைன்ஸ் வீதியில் அமைந்துள்ள Karralyka மண்டபத்தில் (Karralyka Centre, Mines Road, Ringwood East, 3135 (Melway Ref: 50 A6))நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில். நாடு கடந்த தமிழீழ அரசின் ஆஸ்திரேலியா சார்பில் தெரிவாகியுள்ள இளம் கலைஞர் சேரன் சிறீபாலன் வழங்கவுள்ள இந்த நாட்டிய நடன நிகழ்விற்கு வருகை தந்து அந்த நிகழ்வுக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் தாயக உறவுகளுக்கு உதவியளிக்கும் நிதி திரட்டும் திட்டத்தில் அனைவரையும் பங்குகொள்ளும்படி மெல்பேர்ன் தமிழ் இளையோர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிகழ்வின் மூலம் பெறப்படும் நிதி ஆஸ்திரேலியாவை தளமாக கொண்டு இயங்கும் "பட்ச் வேர்க்" என்ற அமைப்பின் ஊடாக தாயகத்தில் போரின் வடுக்களால் அவயவங்களை இழந்து அந்தரித்துவாழும் உறவுகளுக்கு அபயமளித்து அவர்களுக்கான உடனடி உதவிகளை மேற்கொள்ள பயன்படுத்தப்படவுள்ளது.
இந்நிகழ்வு பற்றிய மேலதிக விபரங்களிற்கு ஜெகனை 0430 007 231 அல்லது கரனை 0430 411 469இல் தொடர்பு கொள்ளவும். இந்த நிகழ்வுக்கான நுழைவுச்சீட்டுக்களை மெல்பேர்ன் தமிழ் இளையோர் அமைப்பின் தொண்டர்களிடம் பெற்றுக்கொள்ளலாம்.

No comments: