சிட்னியில் ஆகாயவிமானம் விழுந்ததில் இருவர் மரணம்.

சிட்னி மேற்குப்பகுதியில் ஒரு விமானியும் அதில் பிரயாணம் செய்த இன்னொருவரும் பயணம் செய்த அவர்களுடைய விமானம் வீதியொன்றில் விழுந்து நொருங்கியதால் மரணமானர்கள்.

ஆறு பெயர் பயணம் செய்யக்கூடிய இந்த விமானம் பாங்ஸ்ரவுண் விமானத்தளத்திலிருந்து முற்பகல் 7.50 மணிக்கு புறப்பட்டது. ஒரு சில நிமிடங்களில் 28 வயதுள்ள விமானி, விமானம் சரியாக இயங்க மறத்ததால் தான் உடனடியாக தரையில் இறங்க வேண்டும் என்ற தகவலைக் கொடுத்திருந்தார். அடுத்த இரண்டரை நிமிடத்தில் அந்த விமானம் கான்லி வேல் வீதியில் விழுந்து தீப்பற்றியது. அவ்விருவரும் தளத்திலேயே மரணமானர்கள். இந்த விமானி அருகிலுள்ள பாடசாலையில் விமானத்தை விழுத்தாமல் பல பாடசாலை பிள்ளைகளைக் காப்பாற்றியுள்ளார்.

இந்த விமானம் மின்சாரக்கம்பிகளை துண்டித்ததால் அவ்விடத்தில் பல மணி நேரமாக மின்சார விநியோகம் தடைப்பட்டிருந்தது.

இதில் பயணம் செய்தவர் 48 வயதுள்ளவரும் 4 பெண் பிள்ளைகளுக்கு தாயாரும் ஆவர். இவர் ஒரு நோயாளியை ஏற்றுவதற்கு பிறஸ்பன் நகருக்கு சென்றுகொண்டிருந்த ஒரு மருத்துவ தாது ஆவார்.

No comments: