உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு சிறப்பு மலரை தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா வெளியிட அதனை இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பெற்றுக் கொண்டபோது எடுக்கப்பட்ட படம்.
உலகில் மிகவும் தொன்மை வாய்ந்த, வாழும் மொழியாக தமிழ் மொழி உள்ளது என்று இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் தெரிவித்தார்.
கோவையில் நேற்று உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார். அத்துடன், மிகவும் சிறப்பான இலக்கண, இலக்கியங்கள் நிறைந்ததாக தமிழ் மொழி இருக்கிறது எனவும் அவர் கூறினார்.
நன்னெறியைப் போதித்த அற்புதமான ஆசிரியர் திருவள்ளுவரே எனக் கூறிய பிரதீபா பாட்டீல், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் ஆகியவை தமிழின் பெருமையை பறைசாற்றுபவையாக உள்ளன என்றும் தெரிவித்தார்.
சங்ககாலத்தில் பெண் புலவர்கள் கவிதைகள் இயற்றி இருக்கிறார்கள் என்பது கூட, அந்தக் காலத்திலேயே பெண்களுக்கு சமத்துவம் அளிக்கப்பட்டமைக்கு நிரூபணம் என்றும் இந்திய ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நன்றி படங்கள் :- தினமலர் - இந்தியா
1 comment:
செம்மொழி பேசியவன்
செங்குறுதி சிந்தி
செத்து மடியும் போது
செயலற்றிருந்த
செம்மொழிஅறிஞர்கள் இன்று
செம்மொழிக்கு மலர்
செய்து மகிழ்கிறனர்
Post a Comment