அஜித் – அர்ஜூன் இணையும் இரண்டாவது படம்!

 December 15, 2023


தல’அஜித்தின் புதிய படமான ‘விடாமுயற்சி’யில் நடிகர் அர்ஜூன் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. அர்ஜூனின் விசிறி ஒருவர் வெளியிட்ட புகைப்படத்தில், விடாமுயற்சி படத்தில் அர்ஜூனின் தோற்றமும் வெளியாகியிருக்கிறது. இது, அஜித் – அர்ஜூன் இணையும் இரண்டாவது படம். ஏற்கனவே இருவரும் ‘மங்காத்தா’வில் இணைந்து நடித்திருந்தனர்.

லைக்கா தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள், தற்போது அஸர்பை ஜானில் நடைபெற்று வருகின்றன.

மர்மம் மற்றும் திகில் காட்சிகள் கொண்ட படங்களை இயக்குவதில் பேர்போன மகிழ்திருமேனியின் இயக்கத்தில், அஜித் நடித்து வருவது, தல ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். அவருடன் ரெஜினா கெஸ்ஸேண்ட்ரா, பிரியா பவானிஷங்கர், ஆரவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இவர்களுடன், சஞ்சய் தத், அருண் விஜய் ஆகியோரும் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளபோதும், அவை படக் குழுவினரால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.   நன்றி ஈழநாடு No comments: