As Israel's military assaults southern Gaza above ground in pursuit of Hamas leaders, it is also considering a plan to disable the militant group's vast labyrinth of underground tunnels by flooding them with seawater, two U.S. officials told NBC News.
இன்று மனித உரிமைகள் நாள், டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி இந்த மனித உரிமை நாள் கொண்டாடப்படுகின்றது. இந்த மனித உரிமைகள் நாள் ஏன் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் தான் வாழ்வதற்கான உரிமை இந்த உலகத்திலே இன்றியமையாததாக இருக்கின்றது. இதுவே சரியாக கிடைக்க வேண்டும், இந்த உரிமையை எவரும் மறுக்க கூடாது. பணம் படைத்தவர்கள், ஏழைகள், கருப்பர்கள், வெள்ளியர்கள் என்ற பாகுபாடு இருக்கக் கூடாது என்பதுதான் இந்த மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம்.
எளுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், கல்வி, மருத்துவம், சுகாதாரம் எல்லாவற்றிலுமே, மனிதன் உயிர் வாழ்வதற்கான எல்லா வடிவத்திலுமே தன்னுடைய உரிமையை பெற்றுக் கொள்ளவும் அதை கிடைக்காத போது கேட்டு பெறவும் மனிதர்களுக்கு உரிமை இருக்கின்றது. அதை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவது தான் இந்த மனித உரிமைகள் தினமாகும். இப்படி ஒரு தினம் பிரகரணப் படுத்தப்பட்டு கொண்டாடப்படுவது ஒரு கொண்டாட்டத்திற்காக மட்டும் தானா என்ற ஒரு கேள்வி இப்போது மேலோ ங்கி நிற்கின்றது.
மனித உரிமைகள் பிரகடனத்தை 1948 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் தேதி ஐநா சபையிலே முன்வைக்கப்பட்டது. 58 நாடுகள் அதற்கு அங்கீகாரம் வழங்கியது. அந்த அங்கீகாரத்துக்கு பின்பு தான் 1950ஆம் ஆண்டு சர்வதேச மனித உரிமைகள் தினமாக இந்த டிசம்பர் மாதம் பத்தாம் திகதி அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து அது கொண்டாடப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. இன்று 75வது ஆண்டாக கொண்டாடப் படுகிறது .
உரிமைகள் மறுக்கப்படுகின்ற போது அந்த மீறல்களை பதிவு செய்து கொள்வதற்கும், புகார்களை பெற்றுக் கொள்வதற்கும் மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டு இந்த புகார்கள் பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகின்றது. உலகம் அறியாத பல விடயங்கள் தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் வெளிக் கொண்டு வராத விடயங்கள் இந்த புகார்களின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும், சமூக ஊடகங்களிலும் தொடர்ந்து காட்டப்படுகின்ற மனித உரிமைகள் மீறப்படுகின்ற காட்சிகள், கொடூரமாக கொத்துக்கொத்தாக மக்கள் கொல்லப்படுகின்ற காட்சிகள் இவற்றையெல்லாம் பார்த்துவிட்டும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்காமலும், வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியும் இந்த மக்களுக்கான உதவிகளை தடுத்துக் கொண்டிருக்கின்றது அமெரிக்கா. கொண்டுகொண்டிருக்கிறது இஸ்ரவேல்.
ஆனால் இந்த தினம் இன்று கொண்டாடப்படுகின்ற அதே வேளையிலே பாலஸ்தீன மக்கள் கொத்துக்கொத்தாக மடிந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய நிலம் திருடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அவர்கள் தங்குவதற்கு இடமில்லை, அவர்கள் தஞ்சம் அடைவதற்கு இடமில்லை ஆனால் வடக்கை கைப்பற்றிய ராணுவம் தெற்கை முற்றுகை இடுகின்றது நிலத்தடி பாதுகாப்பு அரண்களிலே மக்கள் பதுங்கி இருக்கின்றார்கள் அவர்களை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று கூறிக்கொண்டு உப்புநீர் பீச்சி அடிக்கப்படுகின்றது. பயங்கரவாதிகள் மறைந்திருக்கின்றார்கள் அவர்களை வெளியே கொண்டு வர வேண்டும் அதற்கான ராணுவ நடவடிக்கைதான் இது என்று கூறப்படுகின்றது. இதை உலகத்திலே உள்ள மனித உரிமைகளை மதிக்கின்ற நாடுகள் அத்தனையும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது. இதுதான் மனித உரிமைகளுக்கான அங்கீகாரமா?
செழிப்பு மிக்க நாடாகவும் மற்றைய பிரதேசங்களுக்கு உணவு வகைகளை வழங்கக் கூடியதுமான காசா நிலப்பரப்பு செழிப்பான நிலமாக இருக்கக் கூடாது, இனிமேல் அந்தப் பிரதேசங்களில் எந்த தாவரங்களும் வளரக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு தான் இந்த உப்புநீர் பீச்சி அடிக்கும் செயற்பாடு இடம்பெறுகின்றது என்பது சாதாரண மனிதருக்கும் தெரியும். ஆனால் ஐநா சபையிலே இருக்கின்ற அரசியல் தலைவர்களுக்கு தெரியாதா?
வியட்நாம் போரிலே அந்த நாட்டிலே விதைக்கப்பட்ட முட்செடிகளை அழிக்க முடியாமல் இப்போதும் போராடிக் கொண்டிருக்கின்றது அந்த வியட்நாம் நாடு.
அதேபோல்தான் இங்கும் கடல் நீர், நல்ல விவசாய நிலங்களை அழிக்கப் போகின்றது. அதிலே எந்த விதமான உயிரினங்களோ, பயிர்களோ இனிமேல் வர முடியாத கொடுமை நிகழ்கின்றது.
மனித உரிமைகள் தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கின்ற மக்கள் இந்த மனித உரிமை மீறப்படுகின்ற அவல நிலையை ஏன் பார்க்க தவறுகின்றார்கள். அரசியலும் அரசியல்வாதிகளும் இந்த நாட்டு தலைமைகளும் கைகட்டி பார்த்துக் கொண்டிருக்கின்ற போது மக்கள் பார்த்துக் கொண்டிருப்பது முறைதானா?
இலங்கையிலே ஈழ போர்க்காலத்திலே கூட மனித உரிமைகள் மீறப்படுகின்ற போது, மக்கள் கொல்லப்படுகின்ற போது பயங்கரவாதிகள் கொல்லப்படுகிறார்கள் என்ற கூற்றுத்தான் முன்வைக்கப்பட்டது. மக்கள் கொல்லப்படுவதற்கு எந்த விளக்கமும் இவர்களால் கொடுக்கப்படவில்லை. இன்றும் பயங்கரவாதிகளை அளிக்கின்றோம் பயங்கரவாதிகளை ஒடுக்கு கின்றோம், அவர்கள்தான் சண்டையை ஆரம்பித்தார்கள் என்ற நொண்டி சாக்கு பேசிக் கொண்டே அந்த மக்களை, காசா நிலப்பரப்பை அழித்துக் கொண்டிருக்கின்றது வல்லரசு. அதற்கு துணை போய்க்கொண்டிருக்கிறது. சபையோ பார்த்துக் கொண்டிருக்கின்றது.
கண் துடைப்புக்காக பேச்சு வார்த்தைகள். இந்த பேச்சு வார்த்தைகளிலே ஆயுதங்கள் நகர்த்தப்படுவது, போர் நிறுத்தத்தின் போது தளவாடங்கள் ஆயுதங்கள் தளவாடங்கள் கொண்டு செல்லப்படுவது, தங்களை தயார் படுத்துவது, காயப்பட்ட இராணுவத்தினரை மீட்டுக் கொண்டு செல்வது, இப்படி அவர்களுக்கு சாதகமாக இந்த போர் நிறுத்தம்.
கண் துடைப்புக்காக கைது செய்யப்பட்ட மக்கள் பரிமாற்றம் என்று தொலைக்காட்சிகளிலே மிக அழகாக காட்டுவார்கள் ஆனால் போரின் முகம் இன்னும் அதிகரிக்கப்பட்டு கொண்டே இருக்கும். போர் வெறித்தனமாக ஆயத்தப்படுத்தப்பட்டு கொண்டிருக்கும், ஆயுத வியாபாரிகள் தங்களுடைய ஆயுதங்களை நகர்த்தி கொண்டிருப்பார்கள்,
இதுதான் மனித உரிமை.
இந்த மனித உரிமை நாளில் தான் இவை எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றது இந்த உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கின்றது? என்ன மனித உரிமைகள்? எந்த மனிதனுக்கு மனித உரிமைகள்? எந்த நாட்டுக்கு மனித உரிமைகள் இருக்கின்றது என்ற கேள்விக்குறி ? மட்டும் பெரிதாக இருக்கின்றது.
சிந்திப்போம்
No comments:
Post a Comment