.
பிரபல பட நிறுவனமான மாடர்ன் தியேட்டர்ஸ் சினால் இப்படம் தயாரிக்கப்பட்டது குடும்ப படங்களுக்கு கதை வசனம் எழுதுவதில் கீர்த்தி பெற்றுக்கொண்டிருந்த கே எஸ் கோபாலகிருஷ்ணன் இந்தப் படத்தில் தன் கைவண்ணத்தை காட்டியிருந்தார். படத்தில் அவருடைய வசனங்கள் ஆழமாக அமைந்திருந்தன.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த குமரன் கூலி ஆளான தன் அண்ணனின் வருமானத்தில் படித்து வருகிறான். பணக்கார பெண்ணான சாந்தியுடன் அவனுக்கு காதல் ஏற்படுகிறது. ஆனால் அவனின் அண்ணன் மகளோ காசிலிங்கத்தை காதலிக்கிறாள். அவளைத் திருமணம் செய்வதென்றால் தன் பார்வையற்ற தங்கையான குமுதத்தை குமரன் மணக்க வேண்டும் என காசி நிபந்தனை விதிக்கிறான்.
உணர்ச்சிகரமான காட்சிகளுடன் அமைக்கப் படட இக் கதையில் விஜயகுமாரி ரங்காராவ், சௌகார் ஜானகி , பி எஸ் சரோஜா, பாண்டியன் ஆகியோரும் நடித்திருந்தனர்.
படத்தை தூக்கி நிறுத்தியது நடிகவேள் எம்ஆர் ராதா தான். காசிலிங்கமாக அவர் வரும் காட்சிகள் எல்லாவற்றிலும் ரசிகர்களை கவர தவறவில்லை. சவுகார் ஜானகி உருக்கமாக நடித்திருந்தார். எஸ் எஸ் ஆர் தன் பங்கிற்கு குறை வைக்கவில்லை
படத்திற்கு இசையமைத்தவர் கேவி மகாதேவன் இவருடைய இசையில் உருவான மாமா மாமா பாடல் இன்றும் ஒலிக்கும் பாடலாக திகழ்கிறது. கள்ளபார்ட் நடராஜநும் ஜோதியும் பாடலுக்கு சிறப்பாக ஆடி இருந்தார்கள். இதைத் தவிர கல்லிலே கலைவண்ணம் கண்டான், என்னை விட்டு ஓடிப்போக முடியுமா பாடல் களும் இனிமையாக அமைந்தன. ஆர் சம்பத் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
ஏ சுப்பாராவ் இயக்கிய குமுதம் நூறு நாட்கள் ஓடி 1961 ஆம் ஆண்டிற்கான மூன்றாவதான சிறந்த தமிழ்ப் படம் என்ற தேசிய விருதையும் பெற்றுக்கொண்டது .
No comments:
Post a Comment