இறுதிக்கட்டப் போரில் சரணடைந்த புலிகளுக்கு நடந்தது என்ன? அமெரிக்க முன்னாள் உயரதிகாரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்


இலங்கையில் புலிகளின் மீறல் நடவடிக்கைகளுக்காகவும் விசாரணை நடத்தப்படவேண்டும்.ஆனால் யுத்தத்தின் இறுதியில் சரணடைந்த முக்கிய புலிகள் எவரும் இல்லை.இதுகுறித்து இன்றைய ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச அன்று பாதுகாப்பு செயலராக இருந்தபோது நேரில் நான் அவரிடம் கேட்டேன்

அதற்கு அவர் நான் அவர்களைக் கொன்றேன் என்று கூறியது இன்றும் எனது நினைவில் உள்ளது.

யுத்தக் குற்றங்கள் தொடர்பில் அமெரிக்காவின் விசேட தூதுவராக இருந்த ஸ்டிபன் ஜே.ராப் இவ்வாறு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

உலகதமிழர் பேரவை மனிதஉரிமைகள் மற்றும் சர்வதேச நீதிக்கான நிலையம் இலங்கையில் நீதி மற்றும் சமாதானத்துக்கான பரப்புரை கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆகிய இணைந்து முன்னெடுத்த இணையவழி கருத்தரங்கில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

லண்டனில் இருந்து அமேல் அபேவர்த்தன என்பவர், “புலிகளுக்கு எதிராகவும் யுத்தக்குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் நடவடிக்கை முன்னெடுக்க வேண்டுமா”? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அவர் “ ஆம் புலிகளின் மீறல் தொடர்பாக நீதியை நிலைநாட்டுவதற்கு குறிப்பிடத்தக்க வழிமுறை இல்லை என்பது வெளிப்படையானது.நான் அங்கு(இலங்கையில்)இருந்தபோது அ ப்போது பாதுகாப்பு செயலராக இருந்த தற்போதைய ஜனாதிபதி இதுகுறித்துப் பேசியமை எனக்கு நினைவில் இருக்கிறது.

குற்றங்கள் இழைத்த தனிநபர்களுக்கு எதிராக நம்பத்தகுந்த சாட்சியங்கள் இருந்தால் மீறல்களுக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.அதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றேன்

ஆனால் சரணடைந்த பின்னர் அத்தகையோர் அவர்கள் அறுபதுபேர்வரை அல்லது அதற்கு மேலும் இருக்கலாம் கொல்லப்பட்டுவிட்டனர்.

எனவே யுத்தகளத்தில் இருந்த குற்றம் சுமத்தப்படக்கூடிய சந்தேக நபர்கள் உயிருடன் இல்லை. எனக்கு நினைவிருக்கிறது.பாதுகாப்பு செயலாளர் கூறினார்,விசாரணை விசாரணை என்று நீண்டகாலம் இழுபடும் அதனால் நான் அவர்களைக் கொன்றேன், நான் அவர்களைக் கொன்றேன்(I killed them; I killed them; I killed them) என்றார்.

ஆனால் இது நீதிமுறைமையே அல்ல” என்றும் ராப் தெரிவித்துள்ளார்.

 நன்றி  

No comments: