.
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின்
இணையவழி நினைவரங்கு
20-02-2021 சனிக்கிழமை
இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரையில்
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில், சங்கத்தின் தலைவர் மருத்துவர் வஜ்னா இரஃபீக் தலைமையில் எதிர்வரும் 20 ஆம் திகதி ( 20-02-2021 ) சனிக்கிழமை ( அவுஸ்திரேலியா நேரம் ) இரவு 7.00 மணி முதல் 9.00 மணிவரையில் இணையவழி நினைவரங்கு நடைபெறும்
அவுஸ்திரேலியாவில் கடந்த காலங்களில் மறைந்த கலை, இலக்கிய, கல்வித்துறை மற்றும் சமூகம் சார்ந்த பணிகளில் அயராமல் உழைத்து மறைந்த ஆளுமைகள் சிலர் இந்த அரங்கில் நினைவுகூரப்படுவர்.
இந்த நினைவரங்குத் தொடரின் முதலாவது நிகழ்ச்சியே இம்மாதம் 20 ஆம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக இரண்டாவது நிகழ்ச்சி பின்னர் நடைபெறும்.
இம்மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள அரங்கில், பேராசிரியர் சிவஶ்ரீ கா. கைலாசநாதக்குருக்கள் பற்றிய நினைவுரையை மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா நிகழ்த்துவார்.
கலாநிதி ஆ. கந்தையா பற்றிய நினைவுரையை நொயல் நடேசனும் - பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் பற்றிய நினைவுரையை திருநந்தகுமாரும் - எஸ். பொன்னுத்துரை பற்றிய நினைவுரையை பாடும்மீன் சு. சிறிகந்தராசாவும், -காவலூர் இராஜதுரை பற்றிய நினைவுரையை கானா. பிரபாவும் - கலாநிதி வேந்தனார் இளங்கோ பற்றிய நினைவுரையை செ. பாஸ்கரனும் - தெ. நித்தியகீர்த்தி பற்றிய நினைவுரையை ஆவூரான் சந்திரனும் நிகழ்த்துவார்கள்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : முருகபூபதி
மறைந்த ஆளுமைகளின் உறவினர்கள், நண்பர்கள், மற்றும் மாணவர்களையும் கலை இலக்கிய ஆர்வலர்களையும் இந்த அரங்கில் இணைந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
செயற்குழு – அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்
Email: atlas25012016@gmail.com
------------------------------
இணையவழி – ZOOM – விபரம்:
https://us02web.zoom.us/j/
Meeting ID: 894 7601 9623
Passcode: 167651
------------------------------
No comments:
Post a Comment