கதைக்களம்
கானா பாடகராக பாரீஸ் பகுதியில் வசித்து வருபவர் தான் ஜெயராஜ் (சந்தானம்). ஜெயராஜின் முதல் காதல் தோல்வியில் முடிந்துவிட, அந்த தருணத்தில் அறிமுகமாகும் கதாநாயகி திவ்யாவை (அனைகா) காதலிக்க ஆரம்பிக்கிறார்.
முதலில் இந்த காதலுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஜெயராஜின் தந்தை (பிருத்விராஜ்), பிறகு மிகவும் கடுமையான தனது எதிர்ப்பை தெரிவிக்க, அதே போல் திவ்யாவின் தந்தையும் இந்த இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.இதன்பின் ஜெயராஜின் காதலை முதலில் ஆதரித்த தந்தை, பிறகு ஏன் எதிர்க்கிறார், இந்த எதிர்ப்புக்கு என்ன காரணம், இந்த அணைத்து எதிர்ப்புகளை மீறி ஜெயராஜ் மற்றும் திவ்யா காதல் ஜோடி இணைந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
'ஏ 1' படத்தில் இருந்த நகைச்சுவை இந்தப் படத்திலும் இருக்கும் என்று எதிர்ப்பார்த்து சென்றால் சற்று ஏமாற்றம் தான். அதற்கு முக்கியமான காரணம், படத்தின் முதல் பாதியில் எவ்வளவோ முயற்சித்தும் காமெடி பெரிய அளவுக்கு ஒர்கவுட் ஆகவில்லை என்பது தான்.
ஆனால், படத்தின் இரண்டாம் பாகம் இதனை சரி செய்திருக்கின்றனர். இடைவேளைக்கு பிறகு நகைச்சுவை காட்சிகளும் திரைக்கதையும் நம்மை சிரிப்பில் மூழ்கடிக்க செய்கிறது.
படத்தில் கதாநாயகன் ஜெயராஜ் கானா பாடகர் என்பதால் எல்லா பாடல்களுமே அதே பாணியில் இடம் பெற்றிருக்கின்றன. இந்த படத்தில் கதாநாயகன் சந்தானம் தான் என்றாலும் அவரது தந்தையாக வரும் பாத்திரத்திற்குத்தான் கூடுதல் முக்கியத்துவம் இருக்கிறது.
அந்த பாத்திரத்தில் நடித்திருக்கும் பிருத்விராஜ், அதற்கேற்றபடி நடித்திருக்கிறார். மொட்டை ராஜேந்திரன் - பழைய ஜோக் தங்கதுரை வரும் காட்சிகள் பிரதான கதையிலிருந்து சற்று விலகியிருந்தாலும், சிரிக்க வைக்கின்றனர்.
க்ளாப்ஸ்
சந்தோஷ் நாராயணன் இசை
சந்தானத்தின் கலகலப்பான நடிப்பு
வில்சன் ஒளிப்பதிவு
பிருத்விராஜ் நடிப்பு
பல்ப்ஸ்
படத்தின் முதல் பாதி
சில இடத்தில் ஒர்கவுட் ஆகாத நகைச்சுவை
மொத்தத்தில் படத்தில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருந்தால் மீண்டும் ஒரு 'ஏ 1' கிடைத்திருக்கும். ஆனாலும் நல்ல நகைச்சுவை விருந்திற்கான படைப்பு தான் பாரிஸ் ஜெயராஜ்.
நன்றி
No comments:
Post a Comment