பதிந்த காட்சி விரிந்து நிக்குது !

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா





மலர்ந்த பூவினில் வண்ட மர்ந்தது
உறைந்த தேனை உள்ளே யிழுத்தது
பறந்து சென்றது பலமலர் நாடியே
விழுந்து புரண்டது மேலெழு களிப்பினால்

துள்ளி எழுந்தது கயலது வோடையில்
தூங்கி இருந்தது கொக்கது கரையினில்
வாளை மீனது நீரினில் வந்தது
வேளை பார்த்துமே கொக்குமே விளித்தது 

குதூகலம் கொண்டுமே குஞ்சுகள் நின்றன
கோழியும் கூடவே காவலாய்  சென்றது
விருந்தினைக் கண்டுமே பருந்துமே மகிழ்ந்தது
குதூகலம் மறைந்தது குஞ்சுகள் சிதறின

உறங்கிய சிங்கம் ஓசையைக் கேட்டது
பதுங்கிய முயலும் பயமுடன் இருந்தது
வேடனும் விரைவாய் விட்டனன் கணையை
உறங்கிய சிங்கம் பிடரியைத் துளைத்தது 

வீழ்த்திட யானையை வெட்டினர் குழியை
காத்திடு வேளை வீழ்ந்தது  நரியும்
நம்பிக்கை தளர்ந்து  நரியுமே  தவித்தது
தும்பிக்கை கொடுத்திட  யானையும்  வந்தது 





No comments: