.
திருக்குறளை நியூ சவுத் வேல்ஸ் மாநில நாடாளுமன்றத்தில் கொண்டு சேர்த்துள்ளது ஆஸ்திரேலியத் தமிழ்ச் சமூகம், தமிழ் வளர்ச்சி மன்றத்தின் மூலமாக . தமிழ் வளர்ச்சி மன்றத்தின் வளர்ச்சியில் வள்ளுவன் வகித்த பாகம் கனவுகளுக்கு அப்பாற்பட்டது. 2019 இல் சிட்னிப் பல்கலைக் கழகத்துடன் தொடங்கியது வள்ளுவனுடனான பயணம். 2020 இணயத்தில் மூன்று நாட்கள் நடத்தப்பட்டது. இன்று பாராளுமன்றத்தில் திருக்குறளை ஒலிக்கச் செய்ய முடிந்தது பெரும் பேறாகும். அத்தோடு ஆண்டு தோறும் நாடாளுமன்றத்தில் இன் நிகழ்வு நடக்கும் என மதிப்பிற்குரிய நண்பர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹூயூ மக்டர்மட் , நாடாளுமன்ற உறுப்பினர் , தமிழ் வளர்ச்சி மன்றத்திற்கு உறுதியளித்துள்ளார். இனி இது தமிழ் வளர்ச்சி மன்றத்தின் சிறப்பு ஆண்டு நிகழ்வாக அமையும்.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநில நாடாளுமன்ற வளாகத்தில் முதல் முறையாக "திருவள்ளுவர் தினம்" கொண்டாடப்பட்டது. அதனோடு சேர்த்து தமிழர் தினமும், தாய்மொழி தினமும் கொண்டாடப்பட்டது.
நிகழ்வில் அடுத்த தலைமுறையினர் பங்கேற்று தாய் மொழி தினம் திருவள்ளுவர் தினம், தமிழர் தினம் ஆகிய மூன்று தலைப்புகளிலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் செல்விகள் மாதுமை கோணேஸ், கவிதா போல், அபூர்வா ராஜ் , திருமதி காந்திமதி தினகரன் , மருத்துவர் கார்த்திக், பொன்ராஜ் உரையாற்றினார்கள்.
இந்த நிகழ்வில் நியூ சவுத் வேல்ஸ் மாநில எதிர்க்கட்சி தலைவர் ஜோடி மெக்கே நாடாளுமன்ற உறுப்பினர் "திருவள்ளுவரும் திருக்குறளும்" என்கிற தலைப்பிலும், நாடாளுமன்ற உறுப்பினர் ஹூயூ மக்டர்மட் , நாடாளுமன்ற உறுப்பினர் "திருக்குறளும் அதன் பொதுத் தன்மையும்" என்கிற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். நிறைவாக உயர் கல்வித்துறை அமைச்சர் ஜெப் லீ தமிழ் மக்களின் விடா முயற்சி பற்றி கருத்துத் தெரிவித்ததுடன் பங்கேற்ற அனைவருக்கும் பரிசு வழங்கி கௌரவித்தார்.
Dr Chandrika Subramaniyan
Solicitor Mediator Academic Journalist Speaker
+61433099000 lawyer.chandrika@gmail.com
Premier’s Harmony Medal Winner 2019 - NSW State
Citizen of the Year 2019 - Cumberland Council
Women of the West 2012 - University of Western Sydney
Highly commended Award 2011 – Women Lawyers Association
Nominee Justice Medal 2009 - Justice Foundation
No comments:
Post a Comment