மூதூர் திருமுருகன் மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன


இலங்கை கிழக்கில்  திருகோணமலை மாவட்டத்தில்  மூதூரில்  கட்டைப்பறிச்சான் தெற்கில் இயங்கிவரும் தன்னார்வத் தொண்டுநிறுவனமான திருமுருகன் மக்கள் ஒன்றியம்  தமது பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு மலர்ந்துள்ள புதிய 2021 ஆம் ஆண்டில் பாடசாலை உபகரணங்களை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக

வேண்டுகோள் விடுத்திருந்தது.

இவ்வேண்டுகோள் குறித்து தீவிர கவனம் செலுத்திய அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் சமூக ஆர்வலர் திரு. இராஜரட்ணம் சிவநாதன் தனிப்பட்ட ரீதியிலும் ஊடகங்கள் வாயிலாகவும் விடுத்த வேண்டுகோளையடுத்து அவுஸ்திரேலியாவில் நல்லெண்ணம் படைத்த அன்பர்கள் சிலர் உதவமுன்வந்தனர்.

அதன் அடிப்படையில்   மூதூர்  பிரதேசத்தில் சந்தனவெட்டை, அம்மன் நகர், கட்டைபறிச்சான், கணேசபுரம், சந்தோசபுரம், சம்பூர், கடற்கரைச்சேனை, சீதனவெளி, பாட்டாளிபுரம், நல்லூர், நீனாக்கேணி, பள்ளிக்குடியிருப்பு, தங்கபுரம், சின்னக்குளம், றால்குழி, சாலையூர் ஆகிய கிராமங்களில்  வதியும்  மாணவர்களுக்கு முதற்கட்டமாக    பாடசாலை உபகரணங்கள்  அண்மையில் வழங்கப்பட்டன.

இம்மாணவர்கள், பாடசாலைக்குச்செல்வதற்கான சில முக்கிய அடிப்படைத்தேவைகளை பெறமுடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியிருக்கின்றனர்.


குறைந்த வளங்களுடன் இயங்கும் திருமுருகன் மக்கள் ஒன்றியம், மேலும் பல வறிய மாணவர்களின் தேவைகளை பூர்த்திசெய்வதற்கு இரக்கமுள்ள அன்பர்களின் ஆதரவை நாடுகிறது.

திருமுருகன் மக்கள் ஒன்றியத்தின் ஊடாக உதவ விரும்பும் அன்பர்கள் மேலதிக விபரங்களுக்கு தொடர்புகொள்ளலாம்.

திரு. இராஜரட்ணம் சிவநாதன்

0412 067 019                     rajasivanathan@gmail.com

திரு. ஜீவன்

00 11 94 77 421 48 65  thirumuruganmakkalonriyam@gmail.com

No comments: