22nd January 2021
விடுதலைப் புலிகளை அழிக்க ஏனடா உதவினோம் என்று, நினைத்து நினைத்து ஒவ்வொரு மணி நேரமும் பைத்தியம் பிடித்து அலைய வேண்டிய நிலையில் தற்போது இந்தியா உள்ளது. இதுவரை காலமும் சிங்கள பகுதியில் ஊடுருவி வந்த சீனா. முதல் முறையாக யாழ் நயினா தீவில் அனல் மின் நிலையம் ஒன்றை அமைக்க உதவி செய்வதாக கோரி. அங்கே காலடி எடுத்து வைக்க உள்ளது. ஆனால் அங்குள்ள மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். அங்கே வசிக்கும் தமிழர்கள் இந்தியா இருக்கிறது.
அவர்கள் அனல் மின் நிலையத்தை அமைக்க முடியும். ஆனால் சீனா ஏன் வந்து அனல் மின் நிலையத்தை இங்கே அமைக்க வேண்டும் என்று கேட்டு போராடி வருகிறார்கள். அவர்கள் போராட்டத்தை சிங்களம் விரைவில் அடக்கி விடும். அது வேறு கதை. இது நாள் வரை லடாக் கில் உள்ள எல்லைப் பகுதிகளை தான் இந்தியா பாதுகாத்து வந்தது. ஆனால் இந்த வாரம் முதல், யாழ் கரையோரப் பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாகி உள்ளதால்.
இந்தியா இனி வரும் காலங்களில் தமிழ் நாட்டில் பெரும் ராணுவ படை அணி ஒன்றை நிறுத்த வேண்டிய சூழ் நிலை உருவாகியுள்ளது. ஏன் எனில் சீனா இந்தியாவை வேவு பார்க்க தற்போது யாழ் நயினா தீவு வரை வந்து விட்டது என்பது தான் உண்மை நிலை.
சீனா வெறும் 20 மைல் தொலைவில் தான் நின்று கொண்டு இருக்கிறது என்பதனை தற்போது இந்தியா உணர்ந்து கொள்ள வேண்டும். இலங்கையில் தனி நாட்டு கோரிக்கையோடு போராடி வந்த புலிகள் அமைப்பு இன்றும் இருந்திருந்தால். இந்திய இறையாண்மையே பாதுகாப்பாக இருந்திருக்கும் என்பது தான் உண்மை. ஆனால் இது எத்தனை மேனன்களுக்கு(மலையாளிகளுக்கு) புரியப் போகிறது ? நன்றி அதிர்வு
No comments:
Post a Comment