ஆறுதல் அளிக்கும் !  மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா


வீழும் மழைத்துளி
வித்தினில் பட்டு
ஆலம் விருட்சமாய்
ஆறுதல் அளிக்கும்

தாழ இருப்பவர்
தண்ணளி பட்டால்
மீள எழுவர்
நாளையை நம்புவர் 

கோழை தெளிந்தால்
காளை வருவான்
வாழை மடிந்து
வளர்த்திடும் ஈகை

ஏழை சிரித்தால்
இன்மை மறையும்
நாளை சிரித்தால்
நம்பிக்கை விடியும்

கல்வி சிரித்தால்
கண்ணியம் பெருகும்
கயமை சிரித்தால்
கசடுகள் பெருகும் 

வானம் சிரித்தால்
மாநிலம் செழிக்கும்
தானம் சிரித்தால்
தண்ணளி பரவும் 

 

No comments: